வங்கி உத்திரவாதம் உங்கள் வணிகத்தை அதிகரிக்க உதவுமா..?

சென்னை: வங்கிகள் இனிமேழும் கடன் கொடுத்தல் மற்றும் நிரந்தர வைப்பு நிதியை நிர்வகிக்கும் வணிகத்தில் மட்டும் ஈடுபட்டு காலம் தள்ள இயலாது.

வங்கிகள் மூன்றாம் தரப்பினரின் பொருட்களை விற்பது, வெளிநாட்டு பிரயாணங்களுக்கான வெளிநாட்டு நாணய விற்பனை போன்ற பலதரப்பட்ட மக்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்யயும் பல்வேறு சேவைகளை வழங்குகின்றன.

ஒரு வாடிக்கையாளர் சில சந்தர்பங்களில் வங்கியிடமிருந்து நேரடியாக கடன் வாங்க விரும்பாமல் இருக்கலாம். ஆனால் அத்தகைய வாடிக்கையாளருக்கு வங்கியிடமிருந்து கிடைக்கும் ஒரு ஆறுதல் ஒப்பந்தக் கடிதம், அவருடைய வணிக ஒப்பந்தத்தை பூர்த்தி செய்ய போதுமானது.

அந்த கடிதம் வாடிக்கையாளருடைய எதிர்த்தரப்பினருக்கு, வாடிக்கையாளரால் சரியான நேரத்தில் பணம் செழுத்த முடியவில்லை என்றால் வங்கிகள் அந்த வாடிக்கையாளருக்கு ஆதரவு தரும் என்பதைக் குறிக்கின்றது.

இந்தப் திட்டங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

இந்தப் திட்டங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

இவை போன்று பல திட்டங்கள் உள்ளன. ஆனால் மிக அதிக அளவில் வங்கி உத்தரவாதம் (பி.ஜி.) மற்றும் கடன் காத்திருப்பு கடிதம் (எஸ்.எல்.ஓ.சி) ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர் தன்னுடைய எதிர்த்தரப்பினரிடமிருந்து பெரிய ஒப்பந்தங்கள் பெற்றால் அல்லது தங்கள் பொருட்களை வாங்குபவருக்கு பெரிய அளவிலான பணம் செழுத்த வேண்டிய பொழுது இந்த பொருட்களை வழங்குகின்றன.

பி.ஜி. மற்றும் எஸ்.எல்.ஓ.சி ஆகிய இரண்டும் ஒரே நோக்கத்திற்காக உபயோகிக்கப்பட்டாலும், இவை இரண்டுக்கும் இடையே சில வேறுபாடுகள் உள்ளன.

 

பி.ஜி. என்றால் என்ன?

பி.ஜி. என்றால் என்ன?

ஒரு வங்கியின் வாடிக்கையாளரால் அவரது ஒப்பந்த கடமைகளை நிறைவேற்ற முடியவில்லை என்றால், அந்த வாடிக்கையாளர் தன்னுடைய ஒப்பந்தத்தில் தெரிவித்துள்ளவைகளை நிறைவேற்றிக் கொடுக்க அந்த வங்கி அளிக்கும் உத்திரவாதமே பி.ஜி ஆகும்.

மிக பெரும்பாலான நேரங்களில் ஒரு பி.ஜி. ஆனது அதன் வாடிக்கையாளரின் கடந்த கால செயல்பாடுகளை பொருத்து வழங்கப்படும்.

உதாரணமாக, ஒரு நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் ஒரு திட்டத்தை நிறைவேற்றித் தர ஒப்பந்தம் ஏற்பட்டால் அல்லது பெறப்பட்ட ஆர்டருக்கான பொருட்களை குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் அனுப்பி வைத்தல் போன்ற நடைமுறைகளில் ஒரு வங்கியானது தனது வாடிக்கையாளருக்காக அவருடைய எதிர்தரப்பினருக்கு உத்திரவாதம் அளிக்கும்.

 

எஸ்.எல்.ஓ.சி என்றால் என்ன?

எஸ்.எல்.ஓ.சி என்றால் என்ன?

கடன் ஒரு காத்திருப்பு கடிதம் (எஸ்.எல்.ஓ.சி) பி.ஜி யை போன்றது. வங்கி வாடிக்கையாளர் தன்னுடைய நிதிக் கடமையில் இருந்து தவறினால் அந்த வங்கியானது தனது வாடிக்கையாளருக்காக அந்த நிதிக்கடமையை காத்து நிற்பேன் என்று ஒரு கடிதம் வெளியிடுகிறது.

எனினும், எஸ்.எல்.ஓ.சி யானது ஒரு காத்திருப்பு அல்லது பாதுகாப்பு ஏற்பாடு போன்றது. இது எப்பொழுது தேவைப்படுகின்றதோ அப்பொழுது மட்டுமே நடைமுறைக்கு வரும். இதை ஒரு கால்பந்தாட்டப் போட்டியில் ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் காத்திருக்கும் வீரரை அழைக்கும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்.

 

பி.ஜி. மற்றும் எஸ்.எல்.ஓ.சி எதற்காக வழங்கப்படுகின்றன?

பி.ஜி. மற்றும் எஸ்.எல்.ஓ.சி எதற்காக வழங்கப்படுகின்றன?

வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் சார்பாக நிதி கடமையை நிறைவேற்றித் தருவேன் என்கின்ற உறுதியை தன்னுடயை வாடிக்கையாளரின் எதிர்த்தரப்பினருக்கு தருவதால், ஒப்பந்ததை சார்ந்த ஆபத்து எதிர் தரப்பினருக்கு குறைகின்றது.

எப்படி வங்கி வாடிக்கையாளரின் பாதிப்புகளில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும்?

எப்படி வங்கி வாடிக்கையாளரின் பாதிப்புகளில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும்?

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஒரு விவேகமான வங்கியானது, தான் தரும் உத்தரவாதத்திற்கு சமமான வாடிக்கையாளரின் சொத்துக்களை அடமானமாக கேட்கும். எனவே, எதிர்பாராத சந்தர்பங்களில் வாடிக்கையாளர் தன் நிதிக் கடமையில் இருந்து தவறும் பொழுது, வங்கிகள் தங்களின் பாக்கிகளை மீட்க அடமான சொத்துக்களை விற்க முடியும்.

பி.ஜி. மற்றும் எஸ்.எல்.ஓ.சி க்காக எவ்வாறு வாடிக்கையாளரின்  கடன் மதிப்பு கணக்கிடப்படுகின்றது?

பி.ஜி. மற்றும் எஸ்.எல்.ஓ.சி க்காக எவ்வாறு வாடிக்கையாளரின் கடன் மதிப்பு கணக்கிடப்படுகின்றது?

பி.ஜி. மற்றும் எஸ்.எல்.ஓ.சி ஆகியவை பாதுகாப்பு இல்லாக் கடன்கள் அல்லது வங்கிகளின் புத்தகங்களில் அல்லாத நிதியுதவி எனக் கருதப்படுகின்றது. வாடிக்கையாளரின் கடன்திறன் அந்த வாடிக்கையாளரின் கடன் உள் மதிப்பீடு அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+