சவரன் தங்க பத்திரத்தில் 1 கிராம் தங்கத்தின் விலையை 2,957 ரூபாயாக அறிவித்தது மத்திய அரசு.
டெல்லி: 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கப்பட்ட சவரன் தங்க பத்திரத்தின் 6 வது பகுதி இன்று விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த ஆறாவது பகுதி விற்பனையில் கிராம் தங்கத்திற்கு 50 ரூபாய் சலுகை விலையை அளித்துள்ளது மத்திய அரசு. இதன் மூலம் இந்த 6வது பகுதி விற்பனையில் நிலையான விலையாக 2,957 ரூபாயாக அறிவித்துள்ளனர்.
எப்படி இந்த சலுகை
இந்தியா புல்லியன் மற்றும் ஜுவல்லர்ஸ் சங்கம் லிமிடெட் (IBJA) 2016 அக்டோபர் 17 முதல் 21 ஆம் தேதிகளில் வெளியிட்ட கிராம் 3,007 ரூபாய் என்ற விலையைப் பொருத்து இந்த 999 சுத்தமான தங்கத்தின் விலை முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய அரசும், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவும்
இந்திய அரசும், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவும் இணைந்து சவரன் தங்கப் பத்திரத்தில் இந்த 50 ரூபாய் சலுகை விலையை அறிவித்துள்ளனர். எனவே 2,957 ரூபாய்க்கு நிலையான விலையாக இந்தப் பகுதி விற்பனையில் கிடைக்கும் என்று மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆறாவது பகுதி விற்பனையின் கால அளவு
2016-2017 ஆம் நிதி ஆண்டிற்கான மூன்றாவது தொடர் தங்கப் பத்திர விற்பனை அக்டோபர் 24 முதல் நவம்பர் 02 ஆம் தேதி வரை வாங்கலாம்.
சவரன் தங்க பத்திரம்
சவரன் தங்க பத்திர திட்டம் நேரடி தங்கத்தை வாங்குவதைக் குறைத்து பத்திரங்கள்ளக வாங்க மத்திய அரசால் 2015 நவம்பர் மாதம் துவங்கப்பட்டது.
இதனால் முதலீட்டாளர்கள் நேரடியாகத் தங்கத்தை வாங்காமல் பத்திரங்கள் மூலம் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.
பெறப்பட்ட முதலீடுகள்
இத்திட்டம் துவங்கப்பட்டு ஐந்து பகுதிகளாக பத்திரங்கள் பட்டுவாடா செய்யப்பட்டதில் இருந்து 3,060 கோடி முதலீட்டை அரசு பெற்றுள்ளது. இந்திய அரசின் சார்பாக இந்திய ரிசர்வ் வங்கி பத்திரங்களை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
பத்திரங்களின் கால அளவு
இந்தப் பத்திரங்களின் அதிகபட்ச காலம் 8 ஆண்டுகள், ஒரு வேலை இடையில் வெளியேற விரும்பினால் 5 வருடங்களுக்குப் பிறகு வெளியேற இயலும்.
குறைந்தபட்சம் அதிகபட்சம்
இந்தப் பத்திரங்களை வாங்கு போது அதிகபட்சம் 20,000 ரூபாய் பணத்தை நேரடியாகவே அல்லது டிமேட் டிராப்ட், செக் அல்லது மின்னணு வங்கி சேவைகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சமாக 500 கிராம்கள் வரை இத்திட்டத்தின் கீழ் ஒருவரால் முதலீடு செய்ய இயலும். ஒரு வேலை ஜாயிண்ட் கணக்குகளாக இருந்தாலும் 500 கிராம்கள் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும்.
More From GoodReturns

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?



Click it and Unblock the Notifications