உஷார்! நீங்கள் இப்படியும் ஏமாற்றப்படலாம்.. நிதி மோசடிகளில் இருந்து தப்பிக்க எளிமையான 6 வழிகள்..!

உஷார்! நீங்கள் இப்படியும் ஏமாற்றப்படலாம்.. நிதி மோசடிகளில் இருந்து தப்பிக்க எளிமியான 6 வழிகள்..!

நிதி சேவைகள் அனைத்தும் இன்று வியாபாரம் ஆகி வருகின்றது. பல நிறுவனங்கள் தாங்களது நிதி சேவை திட்டங்கள் குறித்து எதையாவது மறைத்து, ஏதேனும் பொய் சொல்லி விற்க முயன்று வருகின்றன.

அதுவும் இந்தத் தொலைத்தொடர்பு துறை வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை போன்றவற்றால் டெலிப்ன் அழைப்புகள் மூலமாகக் கூட மோசடியாக நிதி திட்டங்களை விற்றுவிடுகின்றனர். எனவே இது போன்று நிதி மோசடிகளில் இருந்து தப்பிக்க எளிமையான 6 வழிகளை இங்குப் பார்ப்போம்.

முதலீடு செய்யக் கடைசி வாய்ப்பு

முதலீடு செய்யக் கடைசி வாய்ப்பு

உங்களை வேகமாக முதலீடு செய்யத் தூண்டும் முகவர்களை நம்ப வேண்டாம். அதிலும் இது தான் முதலீடு செய்யக் கடைசி வாய்ப்பு என்று கூறும்போது நிதானமாகச் சிந்தித்துச் செயல்படுங்கள்.

ஒரு திட்டத்தில் முதலீடு செய்யும் முன்பு 10 முதல் 12 நாட்கள் வரை நேரம் எடுத்துக்கொண்டு முகர்கள் உங்களுக்குத் தெரிவித்த திட்டத்தைப் பற்றி நன்கு ஆராய்ந்து முதலீடு செய்யுங்கள்.

 

உறுதிசெய்யப்பட்டுவிட்ட வருவாய்

உறுதிசெய்யப்பட்டுவிட்ட வருவாய்

ஒரு நிதி திட்டத்தின் முகவர் உங்களிடம் பங்குச் சந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீடு திட்டங்களான யூலிப்ஸ், மியூச்சுவல் ஃபண்டுகள், ஓய்வூதிய திட்டங்கள் போன்ற வற்றில் உறுதிசெய்யப்பட்டுவிட்ட வருவாய் வரும் என்று பொய் கூறும்போது நம்ப வேண்டாம்.

பத்திர முதலீடுகள், நிரந்தர வைப்பு நிதி மற்றும் குறிப்பிட்ட சில காப்பீடு திட்டங்களில் மட்டும் தான் உறுதிசெய்யப்பட்டுவிட்ட வருவாய் பெற முடியும்.

 

கடந்தகாலச் செயல்திறன்

கடந்தகாலச் செயல்திறன்

முகவர்கள் கடந்த காலங்களில் ஏதேனும் பங்குகளில் நல்ல லாபம் கிடைத்துள்ளது என்று கூறி அதில் முதலீடு செய்யுங்கள் என்று வற்புறுத்தும் போது உஷாராக இருங்கள். பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும் போது லாபம் அளிக்கும். அதுவே சரியும் போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்,. எனவே ஆராய்ந்து முதலீடு செய்வது நல்லது.

இடத்தின் விலை விரைவில் உயரும்

இடத்தின் விலை விரைவில் உயரும்

ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் ஒரு இடத்தைப் பரிந்துரைத்து இந்த இடத்தை இப்போது வாங்கினால் பிறகாலத்தில் உங்களுக்கு நல்ல விலை உயரும் என்று கூறும் போதும், இங்கு அனைத்து வசதிகள் கிடைக்கும், பிற காலத்தில் பல திட்டங்கள் இங்கு வர இருக்கின்ற என்று கூறும்போதும் நம்ப வேண்டாம்.

மேலும் பலரை சேர்த்து விடுங்கள்

மேலும் பலரை சேர்த்து விடுங்கள்

மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் பொன்சி திட்டங்களில் எளிமையான வழியில் செயல்படும். அதாவது உங்களுக்குக் கீழ் மேலும் பலரை சேர்த்துவிட்டால் லாபம் அதிகம் கிடைக்கும் என்று கூறுவது. இப்படித் துவங்கப்பட்ட நிறுவனங்கள் மோடியில் ஈடுபட்டுப் பணத்தை ஆட்டைப் போட்டுக்கொண்டு ஓடி விட்டன என்பதைச் சிந்தித்துச் செயல்படுங்கள்.

உட்கார்ந்த இடத்தில் எதுவும் செய்யாமல் சம்பாதிக்கலாம்

உட்கார்ந்த இடத்தில் எதுவும் செய்யாமல் சம்பாதிக்கலாம்

சில சர்வே கேள்விகளுக்கு உட்கார்ந்த இடத்தில் பதில் அளித்தால் போது ஆயிரம் கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதையும் நம்ப வேண்டாம். எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் குறைந்தபட்ச உழைப்பு இல்லாமல் லாபம் ஏதும் அளிக்காது. அதனால் இதுவும் மோசடியே.

வங்கி பெயர்களில் மோசடி

வங்கி பெயர்களில் மோசடி

சில முகவர்கள் நாங்கள் குறிப்பிட்ட வங்கியில் இருந்து அழைக்கின்றோம், எங்களிடம் உள்ள இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் 15 வருடங்களுக்குப் பிறகு நல்ல லாபத்துடன் அதிகத் தொகை கிடக்கும் என்று கூறி, நீங்கள் சரி என்றால் உங்களது கிரெடி கார்டு எண்ணை கூறுங்கள் என்று கூறுவார்கள், பின்னர்க் கணினி மூலம் உங்களது கடவுச் சொல்லையும் உள்ளிடச் சொல்லி என்ன திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்கிறீர்கள் என்று சரியான புரிதல் இல்லாமல் முதலீடு செய்ய வைத்துவிடுவார்கள்.

எனவே இதே போன்று முகவர்களிடம் பேசிய பிறகு உங்களுக்குத் தேவையான கால அவகாசத்தைப் பெற்றுக்கொண்டு ஆராய்ந்து முதலீடு செய்வதினால் இதே போன்ற மோசடிகளைத் தவிர்க்கலாம்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+