குறைந்த விலையில் மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா போன்ற திட்டங்களின் கீழ் வீட்டுக் கடன் பெறுவதை ஊக்குவித்து வருவதை அடுத்து இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியும், பிற தனியார் வங்கி நிறுவனங்களும் வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்து வருகின்றன.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முதல் ஐசிஐசிஐ வங்கி வரை முக்கிய வங்கிகள் சில வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதத்தை 15 முதல் 30 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.15 முதல் 0.30 சதவீதம் வரை குறைத்துள்ளன.
எனவே இப்போது வீட்டுக் கடனை குறைந்தபட்சமாக 8.35 சதவீத வட்டி விகிதத்தில் பெறலாம். எனவே நாம் இங்குக் குறைந்த வட்டியில் 'வீட்டுக் கடன்' பெற ஏற்ற வங்கிகள் பட்டியலை இங்குப் பார்ப்போம்.
எஸ்பிஐ வீட்டுக் கடன்
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸேட் பாங்க் ஆப் இந்தியா 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன் மீதான வட்டியில் 25 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.25 சதவீதம் குறைத்து 8.35 சதவீதமாக அறிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கி 8.35 தான் வீட்டுக் கடன் சந்தையில் குறைவான வட்டி விகிதம் இது தான் என்று அறிவித்தது. மேலும் வீட்டுக் கடன் பெறுபவர்கள் 2.67 லட்சம் ரூபாய் வரை பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2.67 லட்சம் வரை வட்டியில் மானியமும் பெறலாம். உங்களுடைய பிற வீட்டு கடனையும் எந்த வீத கூடுதல் கட்டணமும் இல்லாமல் எஸ்பிஐ வங்கிக்கு மாற்றுவதன் மூலமாக எஸ்பிஐ வங்கியின் குறைவான வீட்டுக் கடன் வட்டி விகிதத்தைப் பெற்றுப் பயன்பெறலாம்.
ஐசிஐசிஐ
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கி சேவையான ஐசிஐசிஐ வங்கி 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதத்தை 30 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.30 சதவீதம் வரை குறைத்தது. இதனால் வேலை செய்து சம்பளம் வாங்கும் பெண்களுக்கு 8.35 சதவீத வட்டி விகிதத்திலும் பிற 8.4 சதவீத வட்டி விகிதத்திலும் வீட்டுக் கடன் பெறலாம்.
ஐசிஐசிஐ வங்கி இந்த வட்டி விகிதத்தில் 24/36 மாதங்களாக மிதக்கும் மற்றும் நிரந்தர வட்டி விகித வீட்டுக் கடன் முறையிலும் அளிக்கின்றது.
எச்டிஎப்சி
இந்தியாவில் கடன் அளிப்பதற்கு மிகவும் பிரபலமான எச்டிஎப்சி வங்கியில் ஐசிஐசிஐ வங்கி போன்றே 30 லட்சம் ரூபாய் கடன் தகையை வேலை செய்து சம்பளம் வாங்கும் பெண்களுக்கு 8.35 சதவீத வட்டி விகிதத்திலும் பிற 8.4 சதவீத வட்டி விகிதத்திலும் வீட்டுக் கடன் பெறலாம்.
ஆனால் இந்தச் சலுகை குறைந்த காலச் சலுகை என்பதால் 2017 ஜூன் 30 முதல் 2017 ஜூலை 1-ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பெறலாம்.
ஆக்சிஸ் வங்கி
மே 16-ம் தேதி முதல் ஆக்ஸிஸ் வங்கி 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதத்தில் 30 அடிப்படை புள்ளிகளைக் குறைத்துள்ளது. அதனால் மாத சம்பளம் வாங்குபவர்கள் வீட்டுக் கடன் வேண்டும் என்றால் 8.35 சதவீத வட்டி விகிதத்திலும், இதுவே வணிகம் செய்பவர்கள் என்றால் 8.4 சதவீத வட்டி விகிதத்திலும் வீட்டுக் கடன் பெறலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications