ஒருவர் ஈக்விட்டி சந்தையில் பங்குகளை வாங்க மற்றும் விற்க முதலில் டிரேடிங் கணக்கு எனப்படும் டிமேட் கணக்கினை திறக்க வேண்டும்.
ஒரு நிறுவனத்தின் பங்குகளை முதலீட்டாளர் வாங்கும் போது நிறுவனம் பங்கின் மீதான டிவிடெண்ட் வருவாய் மற்றும் நிறுவனத்தின் பகுதி உரிமை போன்ற சில உரிமைகளை வழங்கும்.
டிமேச் கணக்கு
டிமேட் கணக்கு உங்களின் முதலீட்டைப் பொருத்து உங்கள் பெயரில் பங்குகளை நிர்வகிக்கும் மற்றும் பங்குச் சந்தையில் அதனைப் பிரதிபலிக்கும். ஏனெனில் பங்கு சந்தையில் பங்குகளைப் பேப்பர் ஆவணங்களாக வைத்திருக்கவோ அல்லது சேமிக்கவோ முடியாது.
நிதி பரிமாற்றிம்
டிமேட் அல்லது டிரேடிங் கணக்கு என்பது பங்குகளை வங்க மற்றும் விற்பதற்கான இடைத்தரகர் சேவையினை அளிக்கின்றது. டிமேட் கணக்குகள் முதலீட்டாளர்களின் வங்கி சேமிப்பு கணக்குடன் இணைந்து இருப்பதன் மூலம் எளிமையாக நிதிகளைப் பரிமாற்றிக்கொள்ள உதவுகின்றது.
புரோக்கரேஜ் நிறுவனங்கள்
பங்குச் சந்தையில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் டிரேடிங் அல்லது புரோக்கரேஜ் நிறுவனங்களின் உதவியுடன் துவங்களாம்.
பங்குச் சந்தை புரோக்கர் என்பவர் பங்கு சந்தையினை ஒழுங்குபடுத்தும் செபியில் பதிவு செய்யப்பட்ட தனிநபர் அல்லது நிறுவனம் அல்லது இணையதள ஏஜென்சி போன்றவர்களில் ஏதேனும் ஒன்றாகா இருக்கலாம்.
முக்கிய அமைப்புகள்
இந்தியாவைப் பொருத்தவரை டிமேட் மற்றும் டிரேடிங் கணக்குகள் தேசிய பாதுகாப்புப் பத்திரங்கள் லிமிடெட் (NSDL) மற்றும் மத்திய வைப்புத்தொகை சேவைகள் இந்தியா லிமிடெட் (CDSL) மூலமாகப் புரோக்ரேஜ் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றது.
கமிஷன் மற்றும் கட்டணம்
ஒவ்வொரு புரோக்கர்களும் கமிஷன் மற்றும் கட்டணம் போன்றவற்றை முதலீட்டாளர்களின் ஆர்டர்களைப் பொருத்துப் பெறுகின்றன. புரோக்ரேஜ் கட்டணங்கள் புரோக்கர்களைப் பொருத்து மாறும். சில புரோக்கர்கள் பிளாட்டான விகிதத்தினில் கட்டணங்களை வசூலிக்கின்றன.
இரண்டு வகை
புரோக்கர்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றனர்.
அ) முழுச் சேவை புரோக்கர்கள்
ஆ) டிஸ்கவுண்ட் புரோக்கர்கள்
முழுச் சேவை வழங்கும் புரோக்கர்கள் பங்குகளை வாங்குவது, விற்பது, ஆய்வு மற்றும் ஆலோசனை, ஓய்வு மற்றும் வரி திட்டமிடுதல் போன்ற சேவைகளினை வழங்குகின்றனர்.
3 சேவைகள் 1 கணக்கு
எடுத்துக்காட்டுக்கு நீங்கள் ஒரு டிரேடிங் கணக்கினை வங்கி மானியம் உதவியுடன் துவங்கினால் 3 சேவைகளை 1 கணக்கில் அளிக்கும் திட்டமாக இருக்கும்.
3 சேவைகள் என்றால் வங்கி சேமிப்பு கணக்கு, டிமேட் கணக்கு மற்றும் இணையதள டிரேடிங் கணக்கு போன்றவை ஆகும். பிற முழுச் சேவை வழங்குநர்கள் டிரேடிங் கணக்குகளில் சேமிப்பு கணக்கு சேவை மட்டும் வழங்கப்படாது.
டிஸ்கவுண்ட் புரோக்கர்
டிஸ்கவுண்ட் புரோக்கர்கள் இந்தியர்களுக்குப் புதிது. முழுச் சேவை வழங்கும் புரோக்கர்களை விட இவர்கள் குறைந்த விலையில் டிரேடிங் சேவையினை வழங்குகின்றனர். அதே நேரம் இவர்கள் தேவையான டிரேடிங் வசதிகளைக் குறைந்த விலையில் அளிக்கின்றனர்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications