இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுக் கடன் சேவை அளிக்கும் நிறுவனமான எச்டிஎப்சி டிசம்பர் 2013க்குப் பின் முதல் முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் சொந்த வீடு வாங்கத் திட்டமிடும் அனைவரும் சரியான முறையில் திட்டமிட்டு வீட்டுக்கடன் வாங்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது.

எச்டிஎப்சி
இந்நிறுவனம் ப்ரைம் லென்டிங் ரேட் அடிப்படையில் கடனை வழங்குகிறது. எச்டிஎப்சி வெளியிட்ட அறிவிப்பின் படி இந்நிறுவனத்தில் 30 லட்ச ரூபாய்க்கு அதிகமான அடமான கடன்களின் வட்டி விகிதத்தை 0.2 சதவீதமும், 30 லட்ச ரூபாய்க்கு குறைவான கடனுக்கு 0.05 சதவீத வட்டியை உயர்த்தியுள்ளது.
ப்ரைம் லென்டிங் ரேட்
எச்டிஎப்சி-யின் ப்ரைம் லென்டிங் ரேட் டிசம்பர் 2013-இல் உச்சகட்டமாக 16.75 சதவீதத்தில் இருந்தது, தற்போது இதன் அளவு 16.15 சதவீதமாக உள்ளது.
இப்புதிய அறிவிப்பிற்குப் பின் இதன் அளவு தற்போது 16.35 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது ஏப்ரல் 1 முதல் அமலாக்கம் செய்யப்பட எச்டிஎப்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
வட்டி விகிதம்
இந்நிலையில் 30 முதல் 75 லட்சம் ரூபாய் வரையில் இருக்கும் கடனுக்கான வட்டி விகிதம் 8.40 சதவீதத்தில் இருந்து 8.60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 75 லட்சத்திற்கும் அதிகமான கடன்களுக்கான வட்டியை 8.50 சதவீதத்தை விடவும் 8.70 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.
30 லட்சம்
மேலும் 30 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு 8.40 சதவீதத்தில் இருந்து 8.45 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடன் பெறுபவர்கள் பெண்ணாக இருந்தால் 5 அடிப்படை புள்ளிகள் சலுகை கிடைக்கும்.
அரசு பத்திரங்கள்
2017 ஜூலை முதல் இப்போது வரை 10 வருட அரசு பத்திரங்கள் வருவாய் 1 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது, பிப்ரவரி - மார்ச் மாதங்களில் இதன் அளவு அதிகளவில் குறைந்தது நிலையிலும், சந்தையில் தற்போது சிறப்பான முதலீடாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications