வாராக்கடன் பிரச்சனைகளால் கடும் விளைவுகளைச் சந்தித்து வரும் இந்திய வங்கித்துறையின் பிரச்சனைகள் இப்போதைக்கு முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. சமீபத்தில் பஞ்சாப் நேசனல் வங்கியினால் இந்தப் பிரச்சனைகள் மேலும் அதிகரித்துள்ளது. மேலும் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் நடைபெற்ற மோசடிகளும் ஒவ்வொன்றாக வெளிவந்தவண்ணமாக உள்ளது.
இந்திய வங்கித்துறையின் மொத்த வாராக்கடன் ரூ.10 லட்சம் கோடியாக உள்ளது. மார்ச் 17ல் 9.5% ஆக இருந்த மொத்த வாராக்கடன், மார்ச் 18 ல் முடிவடைந்த நிதியாண்டில் 10.5% ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளின் இந்த நிதிபிரச்சனை அதிலும் குறிப்பாகப் பொதுத்துறை வங்கிகளின் மற்றும் சமீபத்திய மோசடிகள் மக்களின் வைப்பு நிதிகளுக்கு எந்த அளவிற்குப் பாதிக்கும். இதோ நிலைமையைப் புட்டுப்புட்டு வைக்கிறோம்.

முதலீட்டாளர்களின் பணத்திற்குப் பாதுகாப்பு யார்..?
டெபாசிட் இன்சுரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்பொரேசன் ( Deposit Insurance and Credit Guarantee Corporation -DICGC), ரிசர்வ் வங்கியின் அமைப்பான இது 1லட்சம் ரூபாய் வரையிலான டெபாசிட்டுக்குப் பாதுகாப்புத் தருகிறது.
எனவே முதலீட்டாளர்களுக்குக் குறிப்பிட்ட அளவிற்குப் பாதுகாப்புக் கிடைக்கிறது. இந்தத் தொகையை அதிகரிக்கும் வகையில் பொருளாதாரத் தீர்மானம் மற்றும் நிரந்தர வைப்புநிதி காப்பீடு சட்டம் (Financial Resolution and Deposit Insurance -FRDI) 2017, பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது.
வங்கிகள் திவாலாவதை அரசு அனுமதிக்காது எனவே அவற்றின் நிதி நிலைமையைச் சீரமைக்கச் சரிபார்க்கும் நடவடிக்கையை (Prompt Corrective Action) 11 வங்கிகளுக்கு எதிராக எடுத்துள்ளது. டீனா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, மகாராஷ்டிரா வங்கி, யூகோ வங்கி, ஐ.டி.பி.ஐ வங்கி, ஓரியண்டல் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கார்பொரேசன் வங்கி, இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கி மற்றும் யுனைடேட் வங்கி ஆகியன அந்த 11 வங்கிகள் ஆகும். இந்த வங்கிகளில் மூலதனத்தைப் பெருக்குதல் குறைந்து மற்றும் வாரக்கடன் அதிகரித்து நிலைமை மோசமடைந்தது.

2017 FRDI சட்டத்தில் பெயில் இன் உட்கூறு
நிதியமைச்சர் அருண்ஜெட்லி அறிமுகப்படுத்திய 2017 FRDI சட்டத்தின் படி வங்கிகளில் உள்ள முதலீட்டாளர்களின் நிரந்திரவைப்பு நிதிக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒன்றின் பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கும் வங்கி மோசடிகளுக்கு மத்தியில், இந்தச் சட்டத்தில் உள்ள பெயில் இன் உட்பிரிவின் படி 1லட்சம் வரையிலான முதலீட்டுக்களை வங்கிகள் திருப்பிதர வேண்டும் அல்லது அதற்கு ஈடான பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் தரவேண்டும் எனக் கூறுகிறது.
சரிவினாலோ அல்லது வாராக்கடன் அதிகரித்தாலோ கடனுக்கான வட்டிவிகிதம் அதிகரிக்கும் மற்றும் வைப்புநிதிக்கான வட்டிவிகிதமும் பாதிக்கப்படும்.
இந்தப் பெயில் இன் உட்பிரிவு அமலுக்கு வருவதற்கு முன்பே வங்கிகளின் நிரந்திரவைப்பு நிதி பாதுகாப்பாகத் தான் இருந்தது. வங்கிகளின் நிதிநிலைமை மோசமடைவதால், கடனுக்கான வட்டிவிகிதம் அதிகரிப்பு மற்றும் வைப்புநிதிக்குக் குறைப்பு என வாடிக்கையாளர்களை நேரடியாகப் பாதிக்கிறது.
மார்ஜினல் காஸ்ட் லென்டிங் ரேட் (MCLR) அதிகரிப்பின் மூலம் வங்கிகள் கடன் அளிப்பதும் அதிகரித்துள்ளது. 2016ல் அறிமுகப்படுத்தப்பட்ட இதன் மூலம் பொருளாதாரத்தில் நல்ல வட்டிவிகிதம் கிடைக்கும்.
எந்த மோசமான சூழ்நிலையிலும் அரசாங்கத்தின் மூலம் உங்கள் நிரந்தர வைப்புநிதியை மீட்டெடுக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது.
சொத்துக்களை ஒதுக்கீடு செய்தல் மற்றும் பிரித்தல் விதிகளைச் சரியாகப் பின்பற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து சம்பாதித்த உங்கள் பணத்தைப் பாதுகாக்கலாம். அனைத்து முதலீட்டுத் திட்டங்களையும் ஆராய்ந்து , அதன் மூலம் வரும் லாபம் மற்றும் ஆபத்தைக் கருத்தில் கொண்டு முதலீடு செய்வது அவசியம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications