பங்குகளை வாங்குகிறீர்களா..? dividend பங்குகளை வாங்குகிறீர்களா..? அப்ப இதப் படிங்க

எப்போதும் dividend பங்குகளின் முக மதிப்புக்கு (Face Value) தான் கொடுப்பார்கள். அதுவும் சதவிகிதத்தில் தான் அறிவிக்கப்படும். உதாரணமாக, டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகளின் முக மதிப்பு 2 ரூபாய். ஆனால் பங்கின் விலை 175 ரூபாய். இப்போது 100% டிவிடெண்ட் என அறிவித்தால் ஒரு பங்குக்கு டிவிடெண்டாக எவ்வளவு ரூபாய் கிடைக்கும்..? வெறும் 2 ரூபாய். ஆக 100 டாடா மோட்டார்ஸ் பங்குகளை வைத்திருப்பவருக்கு 100% டிவிடெண்ட் என்றால் 2 ரூபாய் முக மதிப்பு * 100% என ஒரு பங்குக்கு 2 ரூபாய் வீதம் 100 பங்குகளுக்கு 200 ரூபாய் கிடைக்கும்.

Dividend Yield

Dividend Yield

அதே டாடா மோட்டார்ஸை எடுத்துக் கொள்வோம். ஒரு பங்குக்கு எவ்வள்வு ரூபாய் டிவிடேண்ட் கிடைக்கிறது வெறும் 2 ரூபாய். அதை பங்கு விலையோடு ஒப்பிட்டுப் பாருங்கள். 2 / 175 * 100 = 1.14%. ஆக 175 ரூபாய் முதலீட்டுக்கு 1.14 ரூபாய் தான் கிடைக்கிறது. இது தான் டாடா மோட்டார்பங்குகளின் டிவிடெண்ட் யீல்டு. இப்போது டிசிஎஸ் நிறுவன பங்கு விலை 1,908 ரூபாய். முக மதிப்பு 1 ரூபாய். இப்போது 800% டிவிடெண்ட் அறிவித்திருக்கிறார்கள் என்றால் கணக்கிடுங்கள்.

டிசிஎஸ் கணக்கீடு

டிசிஎஸ் கணக்கீடு

முக மதிப்பு 1 ரூபாய் * 800% = 8 ரூபாய் ஒரு பங்குக்கு டிவிடெண்டாக கிடைக்கும். டிவிடெண்ட் யீல்டை கண்டு பிடிக்க 8 ரூபாய் டிவிடெண்டை பங்கு விலையான 1908-ல் வகுத்து 100-ஆல் பெருக்கினால் வருவது டிவிடெண்ட் யீல்டு. 8 / 1908 * 100 = 0.4 சதவிகிதம் தான் டிவிடெண்ட் யீல்டு.
அதாவது 1908 ரூபாய் முதலீட்டுக்கு 0.4 ரூபாய் தான் டிவிடெண்டாக கிடைக்கிறது. இப்போது சொல்லுங்கள்... டிவிடெண்ட் யீல்டில் சிறந்த பங்கு எது டாடா மோட்டார்ஸா..? டிசிஎஸ்ஸா..?

Continuous Dividend

Continuous Dividend

2008 முதல் 2018 வரை எப்போது எல்லம் டிவிடெண்ட் கொடுத்திருக்கிறார்கள். எத்தனை சதவிகிதம் கொடுத்திருக்கிறார்கள், தொடர்ச்சியாக டிவிடெண்ட் அதிகரித்திருக்கிறதா..? என்பதை எல்லாம் உறுதி செய்து கொள்ளவும். குறைந்தது கடந்த 10 ஆண்டுகளுக்காவது டிவிடெண்ட் சதவிகிதம் சீராக அதிகரித்திருக்கும் வண்ணம் டிவிடெண்ட் கொடுத்திருக்க வேண்டும். 2008-ல் பெரிய வீழ்ச்சி தொடக்கி ஒரு பெரிய ஏற்றம் மற்றும் இன்னொரு பெரிய இறக்கத்தை கண்டிருக்கும். அந்த நேரங்களில் எல்லாம் நன்றாக செயல்பட்டு நல்ல டிவிடெண்ட் கொடுத்திருக்கிறதா..? எனப்தையும் கவனிக்க வேண்டும்.

எதிர்காலம் எப்படி

எதிர்காலம் எப்படி

நாம் முதலீடு செய்யும் நிறுவனத்தின் எதிர்காலச் செயல்பாடு எப்படி இருக்க வாய்ப்பிருக்கிறது, புதிதாக வரும் சந்தை மாற்றங்களை உள்வாங்கிக் கொள்கிறதா..? டெக்னாலஜி காலத்துக்குத் தகுந்தாற் போன்று மாற்றுப் பாதையில் தன்னை தயார் படுத்திக் கொள்கிறதா..? என பட்டியல் இட்டு ரிஸ்க் எடுக்க வேண்டும். ஏன் என்றால் முதலீடு செய்வது நம் பணத்தை.

நிர்வாகம் ஓகேவா..?

நிர்வாகம் ஓகேவா..?

வாங்கும் பங்கின் நிறுவன நிர்வாகம் சிறப்பாக இருக்கிறதா..? மல்லையா போன்ற மகான்கள் இயக்குநர் குழுவில் இருக்கிறார்களா..? புரமோட்டர்கள் யார்..? விவரங்கள் பொதுவெளியில் ஒழுங்காக இருக்கிறதா..? புரொமோட்டர்கள் தங்களை நிறுவனத்தையே நம்பாமல் தங்கள் கைவசப் பங்குகளை விற்று இருக்கிறார்களா..? நிறுவனங்களின் கணக்குவழக்குகள் எப்படி..? என ஏகப்பட்ட விவரங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கவனிக்கவில்லை என்றால்..?

கவனிக்கவில்லை என்றால்..?

நிர்வாகம் சரியில்லாதபோது, கடந்த காலச் செயல்பாடுகளை மட்டும் நம்பி வாங்கினால் 'ஃபர்ஸ்ட் லீஸிங்' கதிதான் ஆகும். தொடர்ந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேல் டிவிடெண்ட் கொடுத்த நிறுவனம் திடீரென புகார்களில் சிக்கி முதலீட்டாளர்களுக்கு கண்ணா பின்னா இழப்பைக் கொடுத்தது.

சந்தையப் பாரு

சந்தையப் பாரு

பங்குகளை டிவிடெண்டுக்காக வாங்கிவிட்டோம். இப்போது சந்தையில் நிலவும் சிறிய ஏற்ற இறக்கங்களை பொருட்படுத்த வேண்டாம். நாம் வாங்கிய பங்கின் விலை குறைந்தால்..? முதலில் என்ன காரணத்தால் விலை குறைகிறது என தெரிந்து கொள்ளுங்கள். அதன் பின் அதில் முதலீட்டைத் தொடர்வது, அல்லது பங்குகளை விற்று வெளியேறுவதைப் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் முதலில் சந்தையை கவனியும்க்கள்.

தெளிவா இருங்கப்பு..!

தெளிவா இருங்கப்பு..!

டிவிடெண்டுக்கு என முதலீடு செய்துவிட்டு இரண்டு ரூபாய் விலை ஏற்றத்துக்கு விற்பது, 300 ரூபாய்க்கு வாங்கிவிட்டு, 299 ரூபாய் சென்ற உடன் விற்ரு விடுவது போன்ற சில்லித்தனமான தவறுகளை செய்யக் கூடாது. எடுத்த முடிவில் கொஞ்சம் உறுதியாக இருங்கப்பு.

கொசஞ்சமே கொஞ்சம் வளையலாம்

கொசஞ்சமே கொஞ்சம் வளையலாம்

இப்போது டிவிடெண்டுக்காக ஒரு நிறுவன பங்கில் முதலீடு செய்கிறோம். அந்த பங்கின் விலை கடந்த 9 மாதங்களில் 76.5% அதிகரித்துவிட்டது. ஆக விற்றால் நல்ல லாபம் என்றால்... "ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேட்கமாட்டேன்" என டயலாக் பேச வேண்டாம். தாராளமாக் விற்று லாபம் பார்த்துவிடலாம். அதே போல் தான் தலைக்கு மேல் நஷ்டம் போய்விட்டது என்றாலும் விற்றுவிட்டு வெளியேறலாம்.

இந்த பிடிவாதம் வேண்டாம்

இந்த பிடிவாதம் வேண்டாம்

பங்கு நல்ல லாபத்தில் இருக்கு. டிவிடெண்ட்களுக்கு 100 சதவிகிதம் வருமான வரி விலக்கும் உண்டு என்றாலும், நான் டிவிடெண்டுக்காகத் தான் பங்கு வாங்கினேன், டிவிடெண்ட் மட்டுமே வாங்குவேன் என பிடிவாதமா.. தேவை இல்லை. கொஞ்சமா வித்துட்டு வரும் பணத்துக்கு கொஞ்சமா வரி கட்டுங்களேன். என்ன இப்ப..?

மொத்தமா கவனிங்கப்பு

மொத்தமா கவனிங்கப்பு

உதாரணமாக ரிலையன்ஸ், டாடா குழுமம், பிர்லா குழுமம் போன்ற பெரிய பிசினச் குழுமங்களைச் சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தால், அவர்களின் மற்ற நிறுவனங்கள் மீதும் கொஞ்சம் கவன்ம் வைத்திருக்க வேண்டும். குழுமங்களாக இருக்கும் போது மற்ற நிறுவனங்கள் பற்றிய செய்திகள், நாம் முதலீடு செய்திருக்கும் நிறுவனத்தை மறைமுகமாக பலமாக பாதிக்கும். உதாரணம் நெஸ்ட்லே.

ஒரே செக்டார் வேண்டாம்யா..!

ஒரே செக்டார் வேண்டாம்யா..!

டிவிடெண்டுக்காக முதலீடு செய்ய இருக்கிறீர்கள் என்றால் கூட, ஒரே துறை சார்ந்த பங்குகளில் மட்டும் முதலீடு செய்ய வேண்டாம்யா. அதாவது ஆட்டோமொபல்-ன்னா எல்லாமே ஆட்டோமொபைல் சார்ந்த பங்குகள்ல உதலீடு செய்ய வேண்டாம்.

இதையும் கவனிக்கணும்

இதையும் கவனிக்கணும்

பங்குகளில் முதலீடு செய்து விட்டோம். இப்போது அந்த நிறுவனம் ஏற்றுமதி, இறக்குமதிகளில் பலமாக ஈடுபடுகிறது. உதாரணத்துக்கு நிறுவனத்தின் வருவாயில் 32 % ஏற்றுமதி தான் காரணம் என்றால் உலகச் சந்தை நிலவரங்களான கச்சா எண்ணெய் விலை, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஏற்ற இறக்கம், அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் நாட்டின் உள் அரசியல் போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் டாட்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+