HDFC வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைப்பு..! வீட்டுக் கடன் வாங்க தயாராகுங்கள் மக்களே..!

டெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய அடமானம் மற்றும் வீட்டுக்கடன் நிறுவனமான HDFC (Housing Development Finance Corporation)நிறுவனம் வழங்கும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.10 சதவிகிதம் குறைத்திருக்கிறார்கள்.

இந்த வட்டி குறைப்பு இன்று (ஆகஸ்ட் 01, 2019) முதல் அமலுக்கு வருகிறது. வழக்கமாக பொது மக்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவுகளில் தான் HDFC, தன் வீட்டுக் கடன் திட்டங்களுக்கான வட்டியை வகுத்திருக்கிறார்கள்.

இப்போது கூட 30 லட்சம் ரூபாய்க்குள் கடன் வாங்குபவர்களுக்கு தனி வட்டி விகிதம், 30 முதல் 75 லட்சம் ரூபாய்க்குள் கடன் வாங்குபவர்களுக்கு தனி வட்டி விகிதம், 75 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்குபவர்களுக்கு தனி வட்டி விகிதம் என மூன்று பெரிய பிரிவாகவும் பிரித்திருக்கிறார்கள்

30 லட்சம் ரூபாய்க்குள்

30 லட்சம் ரூபாய்க்குள்


புதிதாக HDFC (Housing Development Finance Corporation) நிறுவனத்தில், வீட்டுக் கடனாக சாதாரண வாடிக்கையாளர்கள் 30 லட்சம் ரூபாய்க்குள் கடன் வாங்குகிறார் என்றால் அவருக்கு வட்டி விகிதம் சுமார் 8.60 சதவிகிதத்தில் இருந்து வட்டி தொடங்குமாம்.
இதுவே, புதிதாக HDFC (Housing Development Finance Corporation)-ல் 30 லட்சம் ரூபாய்க்குள், வீட்டுக் கடனாக பெண்கள் வாங்கினால் அல்லது பெண்கள் பெயரில் கடன் வாங்கினால் 8.55 சதவிகிதத்தில் இருந்து வட்டி விகிதம் தொடங்குமாம்.

30 - 75 லட்சம் ரூபாய்க்குள்

30 - 75 லட்சம் ரூபாய்க்குள்


புதிதாக HDFC (Housing Development Finance Corporation) நிறுவனத்தில், வீட்டுக் கடனாக சாதாரண வாடிக்கையாளர்கள் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆனால் 75 லட்சம் ரூபாய்க்குள், வீட்டுக் கடன் வாங்குகிறார் என்றால் அவருக்கு வட்டி விகிதம் சுமார் 8.85 சதவிகிதத்தில் இருந்து வட்டி தொடங்குமாம்.
இதுவே, புதிதாக HDFC (Housing Development Finance Corporation)-ல் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆனால் 75 லட்சம் ரூபாய்க்குள், வீட்டுக் கடனாக பெண்கள் வாங்கினால் அல்லது பெண்கள் பெயரில் கடன் வாங்கினால் 8.80 சதவிகிதத்தில் இருந்து வட்டி விகிதம் தொடங்குமாம்.

75 லட்சம் ரூபாய்க்கு மேல்

75 லட்சம் ரூபாய்க்கு மேல்

புதிதாக HDFC (Housing Development Finance Corporation) நிறுவனத்தில், வீட்டுக் கடனாக சாதாரண வாடிக்கையாளர்கள் 75 லட்சம் ரூபாய்க்கு மேல், வீட்டுக் கடன் வாங்குகிறார் என்றால் அவருக்கு வட்டி விகிதம் சுமார் 8.90 சதவிகிதத்தில் இருந்து வட்டி தொடங்குமாம்.
இதுவே, புதிதாக HDFC (Housing Development Finance Corporation)-ல், 75 லட்சம் ரூபாய்க்கு மேல் வீட்டுக் கடனாக பெண்கள் வாங்கினால் அல்லது பெண்கள் பெயரில் கடன் வாங்கினால் 8.85 சதவிகிதத்தில் இருந்து வட்டி விகிதம் தொடங்குமாம்.

விதிகள்

விதிகள்

மேலே சொன்ன வட்டி விகிதங்கள் HDFC நிறுவனத்தின் Adjustable Rate Home Loan Scheme திட்டத்தின் கீழ் வாங்கும் கடன்களுக்கானவை. கடன் கொடுக்கும் நேரத்தில் வட்டி விகிதங்கள் மாறுபடலாம். HDFC நிறுவனத்தின் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள், Retail Prime Lending Rate-ன் அடிப்படையில் மாறுபடும். எனவே வீட்டுக் கடன் வாங்கும் முன் தீர விசாரித்து, நல்ல வட்டி விகிதத்துக்கு கடன் வாங்கவும். ஒன்றுக்கு பல முறை வங்கி அதிகாரிகளிடம் பேசி வட்டி விகிதத்தைக் குறைத்தால் நமகு தானே நன்மை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+