டெல்லி: பார்க்கும் இணையதளங்களில் எல்லாம் ஆப்ஸ்களை டவுன்லோட் செய்பவர்களில் நீங்களும் ஒருவரா? அதேபோல ஆதார் விவரங்களை பிறருக்கு தருகிறீர்களா? இதன் மூலம் நீங்களே உங்களுடைய வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை பிறர் திருடுவதற்கான வாய்ப்பை வழங்குகிறீர்கள், என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய முக்கிய விவரங்களை வைத்து மோசடி செய்யும் கும்பல் அதிகரித்துள்ள காரணத்தினால், இது போன்ற விஷயங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். நிதி மோசடி உங்களுக்கு நடக்காமல் இருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
அங்கீகரிக்கப்பட்ட ஸ்டோர்களில் இருந்து மட்டுமே ஆப்களை டவுன்லோட் செய்யவும்: பல்வேறு இணையதளங்களில் இருந்து ஆப்களை டவுன்லோட் செய்ய முடியும். ஆனால் அவை அனைத்தும் நம்பகத்தன்மை உடையதாக இருக்குமா.. என்று நம்மால் நிச்சயமாக கூற முடியாது. ஏனெனில் மோசடிக்காரர்களின் யுத்திகளில் இதுவும் ஒன்றே. இது போன்ற காரணத்தினால், எப்போதும் ஆப்களைடவுன்லோட் செய்ய வேண்டும் என்றால் அங்கீகரிக்கப்பட்ட பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோர்களில் இருந்து மட்டுமே டவுன்லோட் செய்ய வேண்டும்.

SMS மற்றும் மெயில்: நீங்கள் ஒரு பெரிய தொகையை வென்றதாகக் கூறி வரும் SMS மற்றும் மெயில் ஆகியவற்றை நம்ப வேண்டாம். ஏனெனில் இந்த உலகத்தில் எதுவும் இலவசம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இதுபோன்ற மெசேஜ் உங்களுக்கு வந்தால் யாரோ ஒருவர் உங்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய தொகையை தர வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள்.. இது ஒரு மோசடியாக இருக்கலாம்.
தெரியாத இடங்களில் இருந்து வரும் முதலீட்டு விருப்பங்கள்: தெரியாத இடங்களில் இருந்து பேசும் நபர்கள் உங்களை ஏதேனும் முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய சொன்னால், அது மோசடியாக இருக்கலாம் என்பதை உணருங்கள். உங்களுக்குத் தெரிந்த இடங்களில் மட்டுமே நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். உதாரணமாக, உங்களுடைய வங்கிகளில் FD திட்டங்கள், RD திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். அதேபோல, உங்களுடைய தனிப்பட்ட தகவலை ஒருபோதும் பிறரிடம் சொல்ல கூடாது.
வங்கி விவரங்கள்: வங்கி எப்போதும் உங்களுடைய பின் நம்பர் மற்றும் வங்கி விபரங்களை போன் செய்து கேட்காது என்பதை உணருங்கள். தேவை இன்றி வரும் அழைப்புகள் மற்றும் மெயில், மெசேஜ் போன்றவற்றிற்கு பதில் அளிப்பதன் மூலம் உங்களுடைய சுயவிவரத்தை பிறரிடம் கொடுத்து நீங்களே தானாக சென்ற அவர்களுடைய வலையில் சிக்குகிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
இப்போது முதலீடு என்ற பெயரில் பல நபர்களை ஏமாற்றி வருகின்றனர் அதில் உங்களை ஒரு சிறிய தொகையை முதலீடு செய்ய சொல்வார்கள். அதன் பிறகு அவற்றை இரட்டிப்பாக்கியது போல உங்களுக்கு ஸ்கிரீனில் காண்பித்து ஏமாற்றி, பிறகு பெரிய தொகையை முதலீடு செய்ய வைப்பார்கள். இதுவே அவர்களுடைய யுக்தி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
பப்ளிக் வைஃபை பயன்படுத்த வேண்டாம்: கஃபே, ஹோட்டல், விமான நிலையங்கள் போன்ற இடங்களில் இலவச வைஃபை-யை பயன்படுத்தாமல் இருப்பது, உங்களுக்கு நிதி மோசடி ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது. ஏனெனில் மோசடிக்காரர்கள் உண்மையான வைஃபை பெயருக்கு ஏற்ப போலியான பெயரில் உங்களுடைய தகவல்களை திருடுகின்றனர்.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications