ஆன்லைன் ஷாப்பிங் நாம் பொருட்கள் வாங்கும் விதத்தை எளிதாக்கியுள்ளது. வீட்டில் இருந்தபடியே மொபைல் போனை பயன்படுத்தி, எந்த பொருட்களை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். இருப்பினும், தற்போது சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் வாடிக்கையாளர்களை ஏமாற்றி எண்ணற்ற மோசடிகள் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களை வைத்து நடக்கின்றன. அதுவும் பெரிய பட்ஜெட்டில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இல்லையேல் உங்களுக்கு நிதி இழப்பு அபாயங்கள் ஏற்படலாம். இந்தப் பதிவில் ஆன்லைன் ஷாப்பிங் மோசடிகள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சில நேரங்களில் சோசியல் மீடியா தளங்கள் மற்றும் சில இணையதளங்களைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் போது, அவற்றில் எதுவுமே இல்லாமல் வெறும் பேப்பரை சுற்றி பார்சல் வந்த கதை பல உண்டு.

இது நம்மில் பலருக்கும் நடந்திருக்கும். இவ்வாறு ஏமாற்றும் இணையதளங்கள் மற்றும் சோசியல் மீடியா பக்கங்களை வைத்திருக்கும் நபர்களை எப்படி கண்டுபிடிப்பது? அவர்கள் என்ன தந்திரத்தை பயன்படுத்துகின்றனர்? என்பதைப் பார்ப்போம்.
ஆன்லைன் ஷாப்பிங் மோசடியில் மோசடி செய்பவர்கள் பயன்படுத்தும் முறைகள்:
போலி இணையதளங்கள்: இவை பார்ப்பதற்கு உண்மையான இணையதளங்கள் போலவே காட்சியளிக்கும். ஆனால் அவை போலியாக மோசடிக்காரர்களால் உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம். இதுபோன்ற இணையதளங்களை கண்டுபிடிப்பதற்கு கவனமாக URL-ஐ சரிபார்க்கவும்.
ஃபிஷிங் மெயில்: பொதுவாக பலருக்கும் ஃபிஷிங் மெயில் வருவதுண்டு. மேலும் இதுபோன்ற மெயில்களை அனுப்பும்போது, மோசடிக்காரர்கள் அவற்றில் கேஷ்பேக் தருவதாகவும் அதன் மூலம் பொருட்களை வாங்கும் போது, பல சலுகைகளை தருவதாகவும் கூறி ஏமாற்றுகின்றனர்.
எந்த ஒரு அதிகாரப்பூர்வ இணையதளமும், உங்களுக்கு இதுபோன்ற மெயிலை அனுப்பி, அதன் பிறகு ஷாப்பிங் செய்ய தூண்டுவது என்பதை நினைவில் கொள்ளவும். இது மோசடிக்காரர்களின் ஒரு யுக்தியே. இதன் மூலம் உங்கள் விவரங்கள் திருடப்படலாம்.
சமூக ஊடக மோசடிகள்: மோசடி செய்பவர்கள் போலியான தயாரிப்புகளை விளம்பரப்படுத்த சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துகின்றனர். மேலும் யாருமே தர முடியாத சலுகைகளையும் தருவதாக கூறுகின்றனர். இதனால் பலரும் கவரப்பட்டு பொருட்களை ஆர்டர் செய்கின்றனர். ஆனால் ஆர்டர் செய்த பிறகு வருவது என்னவோ வெறும் பார்சல் தான். மேலும் இதற்கு "கேஷ் ஆன் டெலிவரி" கிடையாது என்று கூறி பணத்தை அனுப்ப வைத்து மோசடி செய்கின்றனர்.
போலி பொருட்கள்: சில மோசடி செய்பவர்கள் போலியான பொருட்களை விற்பனை செய்கின்றனர். அவை புகழ்பெற்ற பிராண்டுகள் போல தோன்றினாலும், அவை உண்மையில் தரமற்ற தயாரிப்புகளாகும். இந்த பொருட்கள் எலக்ட்ரானிக்ஸ் முதல் அழகு சாதன பொருட்கள் வரை அனைத்திலும் போலி தயாரிப்புகளை விற்கின்றனர்.
தொடர்பு விவரங்கள்: பொதுவாக போலியாக மோசடி செய்து மக்கள் பணத்தை அபகரிக்க நினைக்கும் கும்பல் எந்தவித தொடர்பு விவரங்களையும் கொடுத்திருக்காது. உதாரணமாக அதிகாரப்பூர்வ ஈ-காமர்ஸ் தளங்களில் கஸ்டமர் கேர் நம்பர், கான்டேக்ட் நம்பர் போன்றவை கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் போலி இணையதளங்களில் அவை இருக்காது.
கவனமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
1. புகழ்பெற்ற பிராண்டுகளை ஆர்டர் செய்து பொருட்கள் வாங்க இருக்கிறீர்கள்.. என்றால் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களைப் பார்வையிடுங்கள்.
2. எந்த ஒரு ஈ-காமர்ஸ் இணையதளமாக இருந்தாலும் சரி, அவை SSL சான்று பெற்றுள்ளதா என்பதை சரி பாருங்கள்.
3. டிஜிட்டல் பேமெண்ட் தளங்களைப் பயன்படுத்தி, ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது அதிகாரப்பூர்வ செயலிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
4. மேலும் போலி இணையதளங்கள் பார்ப்பதற்கே வித்தியாசமாக காட்சியளிக்கும். உண்மையில் ஈ-காமர்ஸ் தளங்களைப் போலவே இருக்கும், இதனை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications