இந்தியா மட்டுமல்ல உலக முழுவதுமே தங்கம் பற்றி தான் அனைவரும் பேசி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் சர்வதேச அளவில் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஏற்றதிலேயே இருக்கிறது.
உலக பொருளாதார நிலையற்ற தன்மை, அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக மோதல் உள்ளிட்டவை காரணமாக அனைவரும் பாதுகாப்பான முதலீடான தங்கத்தை நோக்கி செல்கின்றனர். இதுவே சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்வதற்கு காரணமாக இருக்கிறது. இந்தியாவிலும் அட்சய திருதியை மற்றும் சர்வதேச காரணிகள் காரணமாக தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இந்த சூழலில் தங்கம் மற்றும் தங்கம் சார்ந்த முதலீடுகள் தொடர்பாக மக்களிடையே நிலவக்கூடிய சில கட்டுக் கதைகளுக்கு முத்தூட் எக்ஸிம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கியூர் ஷா விளக்கம் தந்துள்ளார்.
1. பொருளாதார நிலையற்ற தன்மையின் போது மட்டும் தான் தங்கம் விலை உயரும்?
பல்வேறு நபர்களும் தங்கத்தின் விலை சர்வதேச அளவிலான பொருளாதார நிலையற்ற தன்மையின் போது தான் உயர்கிறது என கருதுகிறார்கள். இது போன்ற நிலையற்ற சமயங்களில் தங்கத்தின் விலை உயர்கிறது என்பது உண்மைதான் ஆனால் நம்முடைய போர்ட்போலியோவை சமநிலையாக வைத்துக் கொள்ளவும் பண வீக்கத்துக்கு எதிரான லாபத்தை பெறவும் நிச்சயமாக தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என கூறுகிறார். தங்கத்தின் விலை சர்வதேச பொருளாதார நிலையற்ற தன்மை என மட்டுமில்லாமல் மற்ற காலங்களிலும் உயர்ந்த வண்ணம் தான் இருக்கிறது.
2. தங்க முதலீடு என்றாலே நகை தான்?
பலரும் தங்கத்தில் முதலீடு செய்வது என்றாலே நகையாக, நாணயங்களாக அல்லது கட்டிகளாக வாங்கி வைப்பது என தான் எண்ணுகிறார்கள் .ஆனால் அப்படி கிடையாது. இந்த காலத்தில் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பல்வேறு வாய்ப்புகள் வந்துவிட்டன. கோல்டு etf திட்டங்கள், மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் டிஜிட்டல் முறையிலும் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.
3. தங்கம் விலை எப்பொழுதுமே ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்?
பொதுவாகவே தங்கத்தின் விலை பலரும் ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும் என்று கருதுகிறார்கள். ஆனால் பெரும்பாலான சமயங்களில் தங்கத்தின் விலை ஏற்றதிலேயே தான் இருக்கிறது. அவ்வப்போது இறங்குமே தவிர அதன் பிறகு ஏறும்போது பல மடங்காக உயரும். எனவே முதலீடு என வரும்போது பங்குகளை எப்படி நீங்கள் கருதுகிறீர்களோ அதே போல தங்க முதலீட்டையும் கருத வேண்டும். தங்கம் எப்பொழுதுமே ஏற்ற இறக்கத்துடனே இருக்காது. பல சமயங்களில் அது தொடர்ந்து ஏற்றதிலேயே தான் இருக்கும்.
4. தங்கத்தில் முதலீடு செய்வது என்பது பழைய ஸ்டைல்:
தற்போது பங்குச்சந்தை , மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்துள்ளது. எனவே தங்கத்தில் முதலீடு செய்வது என்பது பழைய நடைமுறை என்ற மனநிலை ஏற்படுகிறது. ஆனால் உண்மை அப்படி கிடையாது. தங்க முதலீடு தான் காலம் காலமாக பாதுகாப்பானது. அது மட்டும் இல்லாமல் பணம் வீக்கத்துக்கு நிகரான லாபத்தை தரக்கூடியது என கூறுகிறார். 2024 ஆம் ஆண்டில் மற்ற முதலீடுகளை விட தங்கம் தான் அதிக லாபம் தந்து இருக்கிறது என விவரிக்கிறார்.
5. பணக்காரர்கள் மட்டுமே தங்கம் வாங்க முடியும்?
தற்போது தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்திருந்தாலும் சிறிய தொகையை வைத்துக் கொண்டே நாம் தங்க மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்ய முடியும். தங்கம் வாங்குவதும் முதலீடு செய்வதும் பணக்காரர்களுக்கானது என்பதெல்லாம் மலையேறிவிட்டது. ஈடிஎஃப் திட்டங்களில் 80 ரூபாயில் இருந்து கூட நாம் முதலீடு செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications