உங்க கிட்ட ரூ.50,000 இருக்கா? தங்கத்தை எப்படி வாங்கலாம்? நகை Vs நாணயம் Vs ஈடிஎஃப் – எது லாபம்?

தீபாவளி பண்டிகையின் போது தங்கம் வாங்குவது இந்தியர்களின் காலம் காலமாக இருந்து வரும் ஒரு பழக்கம். இந்த நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது பலரது நம்பிக்கை. சிலர் பணம் சேர்த்து வைத்து தீபாவளிக்கு தங்கம் வாங்குவார்கள், சிலர் போனஸ் பணத்தில் தங்கம் வாங்குவார்கள். அந்த வகையில் உங்களிடம் 50,000 ரூபாய் இருந்தால் அதற்கு தங்கத்தை நகை, நாணயம் அல்லது டிஜிட்டல் என எந்த வடிவில் வாங்கலாம் லாபம் அதிகம் கிடைக்கும் என பார்க்கலாம்.

தங்க நகை: தங்க நகைகள் குடும்ப நிகழ்ச்சிகள் அல்லது திருமணங்களுக்கு அணிவதற்கும், பரிசாக அளிப்பதற்கும் மிகச்சிறந்த தேர்வாகும். தங்க நகையாக வாங்க வேண்டிய கட்டாயம் இருந்தால் மட்டுமே நகை வாங்குங்கள். நீங்கள் முதலீட்டு நோக்கில் நகைகளை வாங்கினால் அது லாபகரமானதல்ல. நகைகள் வாங்கும்போது செய்கூலி , சேதாரம் மற்றும் ஜிஎஸ்டி என 8% முதல் 25% வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரும். நகைகளை விற்க செல்லும் போது, அதன் செய் கூலி மற்றும் சேதாரத்திற்கான பணத்தை திரும்ப பெற முடியாது. நகை வாங்க சீட்டு போடுவது தான் சிறந்த வழி.

உங்க கிட்ட ரூ.50,000 இருக்கா? தங்கத்தை எப்படி வாங்கலாம்? நகை Vs நாணயம் Vs ஈடிஎஃப் – எது லாபம்?

தங்க நாணயங்கள் மற்றும் கட்டிகள் : பொதுவாக தங்க நாணயங்கள் 24 கேரட் (99.9% தூய்மை) தரத்தில் கிடைக்கின்றன. இது முதலீட்டு நோக்கத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்படுவதால், இதில் தேவையற்ற வடிவமைப்பு செலவுகள் இருக்காது. நகைகளுடன் ஒப்பிடும்போது இவற்றில் கூடுதல் கட்டணங்கள் குறைவு. எனவே எதிர்காலத்தில் விற்கும் போது இதன் உண்மையான சந்தை மதிப்பை ஓரளவுக்கு முழுமையாக பெற முடியும்.

ஆனால் சான்றிதழ் பெற்ற நம்பகமான நிறுவனங்களிடம் இருந்து தான் இவற்றை வாங்க வேண்டும். இவற்றை வீட்டில் பாதுகாப்பாக வைத்திருப்பது அல்லது வங்கி லாக்கரில் பாதுகாப்பது ஆகியவை கூடுதல் செலவை ஏற்படுத்தலாம்.

Also Read

டிஜிட்டல் தங்கம் :ஆன்லைன் செயலிகள் மூலம் குறைந்தபட்சம் 100 ரூபாயிலிருந்து கூட 24 கேரட் சுத்தமான தங்கத்தை டிஜிட்டல் முறையில் வாங்கலாம். தங்க நகை, நாணயம் போல திருடுபோகும் பயமோ அல்லது பாதுகாப்பு குறித்த கவலையோ இதில் இருக்காது. உங்களது முதலீடு பாதுகாப்பான வால்ட்களில் சேமிக்கப்படும். தேவைப்பட்டால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவற்றை தங்க நாணயங்களாகவும் மாற்றிக் கொள்ளலாம்.

Recommended For You

ஆனால் டிஜிட்டல் தங்கத்திற்கு செபி போன்ற முறையான ஒழுங்குமுறை அமைப்புகளின் நேரடி கண்காணிப்பு இல்லை. வாங்கும் மற்றும் விற்கும் விலைக்கு இடையே சிறிய வித்தியாசம் இருக்கும். நீண்ட காலம் வைத்தால் சேமிப்பு கட்டணங்களும் செலுத்த நேரிடலாம். இதற்கு மாற்றாக கோல்டு ஈடிஎஃப்கள் உள்ளன. இது செபி பாதுகாப்பு பெற்றது.

உங்களது நோக்கம் தங்கத்தை அணிவது அல்லது தங்க நகையாக பரிசளிப்பது என்றால், நீங்கள் தாராளமாக தங்க நகைகளை தேர்ந்தெடுக்கலாம். அதுவே முதலீடு செய்து லாபம் பார்ப்பது என்றால், செய்கூலி இல்லாத 24 கேரட் தங்க நாணயங்கள் அல்லது நவீன கால முதலீட்டாளர்களுக்கு ஏற்ற டிஜிட்டல் தங்கம் , கோல்டு ஈடிஎஃப் போன்ற முறைகள் மிகச்சரியான மற்றும் புத்திசாலித்தனமான தேர்வாக இருக்கும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+