இந்தியாவில் மாத சம்பளதாரர்கள், தொழில் புரிபவர்கள் என வரி வருமான வரியில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த வரிச் சலுகைகள் சரியான நபர்களிடம் சென்றடையாமல் செல்வந்தர்களால் தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இந்தியாவில் வேளாண் நடவடிக்கைகள் மூலம் கிடைத்த வருமானத்திற்கு வருமான வரி விதிப்பது கிடையாது. சிறு குறு விவசாயிகள் ஏற்கனவே நிதி ரீதியான சிக்கல்களை சந்தித்திருக்கும் நிலையில் அவர்களுக்கு வரி சுமையை ஏற்படுத்தக் கூடாது என்ற நோக்கத்தில் தான் அரசு இப்படி ஒரு சலுகையை வழங்குகிறது. ஆனால் வசதி படைத்த விவசாயிகளும் இந்த வரிச்சலுகையை பயன்படுத்தி இலட்சக்கணக்கிலான வரியை செலுத்தாமல் தப்புகின்றனர் என ஒரு குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

செபியில் பதிவு செய்யப்பட்ட ஏ.கே.மந்தன் என்ற ஒரு ஆய்வாளர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இதனை விரிவாக பதிவு செய்துள்ளார். இந்தியாவில் வேலைக்கு சென்று சம்பளம் பெறக்கூடிய நபர்கள் அதிக வரிச்சுமையை சுமப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
இதற்கு உதாரணமாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் ஆண்டுக்கு 9 கோடி ரூபாய் ஊதியமாக வாங்கக்கூடிய ஒரு நபர் 4 கோடி ரூபாயை வருமான வரியாக செலுத்த வேண்டும் , தொழில் மூலம் ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுபவர்கள் 80 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும் என பதிவு செய்துள்ளார்.
இதுவே ஒரு நபர் விவசாயத்தின் மூலம் 40 கோடி ரூபாய் வருமானம் மீட்டுகிறார் என்றால் அவர் செலுத்தக்கூடிய வரி பூஜ்ஜியம், அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் வருமானம் 7000 கோடி ஆனால் அவர்கள் செலுத்தும் வரி பூஜ்ஜியம் ,ஐபிஎல் போட்டிகள் மூலம் கிடைக்கும் வருமானம் 12000 கோடி அதற்கு அவர்கள் செலுத்தக்கூடிய வருமான வரி பூஜ்ஜியம். இந்தியாவில் தான் இப்படி ஒரு பாகுபாடு என அவர் கூறியிருக்கிறார். அவருடைய இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
அண்மையில் ஐசிஇ 360 சர்வே என்ற பெயரில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இந்தியாவில் சுமார் 5 மில்லியன் விவசாயிகள் செல்வந்த விவசாயிகள் என்ற பட்டியலில் வருகிறார்கள். அதாவது இவர்கள் ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுபவர்களாக இருக்கிறார்கள். இந்த விவசாயிகளுக்கு கிடைக்கும் வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கு முழுக்க முழுக்க விவசாயத்தில் இருந்து மட்டுமே கிடைக்கிறது.
இந்தியா முழுவதும் வேளாண் துறையில் வரக்கூடிய வருமானத்தில் 28 சதவீத வருமானம் இந்த செல்வந்த விவசாயிகளுக்கு தான் செல்கிறது. மேலும் நல்ல வருமானம் கொண்ட 45 சதவீத விவசாயிகள் கூட பிரதமர் மோடியின் கிஷான் சம்மான் நிதி திட்டத்தில் இணைந்து அந்த தொகையை பெறுகிறார்கள் என்கிறது. எனவே அரசு வழங்க கூடிய சலுகைகள் பொருத்தமான விவசாயிகளிடம் சென்று சேர்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
இதனிடையே ஏ.கே.மந்தனின் பதிவுக்கு பதில் அளித்துள்ள பலரும் இந்தியாவில் வருமான வரி சுமை என்பது பெரும்பாலும் ஊதியம் பெறக்கூடிய தனி நபர்கள் மீது தான் விழுகிறது என கூறுகின்றனர்.
இதேவேளையில் மற்றொறு கணக்கில் இருந்து ஏ.கே.மந்தனின் பதிவு அர்த்தமற்றது என்ற வகையில் ஒரு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications