கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கி வைத்தால் செல்வம் பெருகும் என்பது பெரும்பாலான இந்திய மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அதுவும் கடந்த 15 ஆண்டுகளாக தான் அட்சய திருதியை குறித்தே மக்கள் பரவலாக பேசுகின்றனர்.

அட்சய திருதியை நாளில் நகைக்கடைகளில் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்கம் வாங்குவதை பார்க்க முடிகிறது. தங்களால் இயன்ற அளவு ஒரு கிராம் நாணயமாவது வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என ஏராளமான மக்கள் யோசிக்கின்றனர். அந்த வகையில் நகை கடைகளும் அட்சய திருதியைக்கு பிரம்மாண்டமான முறையில் முன்னேற்பாடுகளை செய்கின்றன.

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

இந்த ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 19ஆம் தேதி அதுவும் ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. விடுமுறை நாளில் அட்சய திருதியை வருவதால் தங்க வாங்க ஏராளமானவர்கள் நகைக்கடைக்கு வருகை புரிவார்கள் என்பதற்கு மாற்று கருத்து இல்லை. கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் இந்தியாவில் தங்கம் விலை என்னவாக இருந்தது, கடந்த ஆண்டு ஒரு சவரன் தங்கம் வாங்கி இருந்தால் இந்த ஆண்டு அதன் விலை என்னவாக இருக்கும் என்பதை தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

Also Read

எப்போதுமே தங்கத்தின் விலை நீண்ட கால அடிப்படையில் நாம் பார்க்கும் போது ஏற்றத்தில் தான் இருக்கிறது. குறுகிய இரண்டு மூன்று மாதங்களுக்கு தங்கம் விலை குறைந்தாலும் ஓராண்டு அடிப்படையில் பார்க்கும்போது எப்போதுமே தங்கத்தின் விலை உயர்விலேயே தான் இருக்கிறது.

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

கடந்த 2025 ஆம் ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 30ஆம் தேதி வந்தது. அன்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 8975 ரூபாய், 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 9,791 ரூபாயாக இருந்தது. அதுவே தற்போது அதாவது இன்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 14,100 ரூபாயாகவும் 24 கேரட் தங்கத்தின் விலை 15,382 ரூபாயாகவும் இருக்கிறது.

Recommended For You

ஒரு சவரன் என பார்த்தால் கடந்த ஆண்டு அட்சய திருதியைக்கு ஆபரணதங்கம் ஒரு சவரன் 71,800 ரூபாயாக இருந்தது. அதுவே இன்று 1,12,800 ரூபாய் என இருக்கிறது. கடந்த அட்சய திருதியைக்கு ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இந்த ஆண்டு அதன் மதிப்பு 36% அதிகமாகி இருக்கும். அதாவது 41000 ரூபாய் உங்களுக்கு லாபம். ஒரு கிராம் நாணயம் வாங்கி இருந்தால் கூட அதன் மதிப்பு 5000 ரூபாய் கூடுதலாகி இருக்கும்,

எனவே தான் நிபுணர்கள் தங்கம் விலை ஏற்ற இறக்கம் என பார்க்காமல் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை வாங்கி வையுங்கள் என அறிவுரை வழங்குகிறார்கள். நீண்ட கால அடிப்படையில் தங்கம் ஒரு போதும் நம்மை ஏமாற்றாது என்கின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+