அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளில் இந்தியர்கள் மத்தியில் தங்கம் வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. மக்கள் அட்சய திருதியை நாளில் தங்களால் இயன்ற அளவுக்கு தங்கம் வாங்கி வைப்பார். இந்த நாளில் தங்கம் வாங்கினால் நம்முடைய செல்வ வளம் பெருகும் என்பது ஏராளமான மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் அட்சய திருதியை வரும் போதெல்லாம் நகை கடைகளில் திருவிழா போல காட்சி தரும். மக்கள் தங்களால் இயன்றவரை ஒரு கிராம் தங்க நாணயத்தையாவது வாங்கி வைத்துவிடுவார்கள். இந்த ஆண்டு எந்த தேதியில் அட்சய திருதியை வருகிறது , தங்க அட்சயதிருதிக்கு குறைந்த விலைக்கு எப்படி தங்கம் வாங்குவது என்பது குறித்து தற்போது தெரிந்து கொள்ளலாம்.

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

இந்த ஆண்டில் அட்சய திருதியை ஏப்ரல் 19ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மக்கள் தங்க நகை வாங்குவார்கள் என்பதால் டிமாண்ட் அதிகமாக இருக்கும். பொதுவாக தங்க நாணயங்களே அதிகம் விற்பனை செய்யப்படும், இதற்காக கடைகளில் பிரத்தியேக ஸ்டால்களே போடப்படும்.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்தில் தங்கத்தின் விலை வரலாற்று உச்சத்தை தொட்டது. சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 1,34,000 ரூபாய் என்ற வரலாற்று உச்சபட்ச விலையை எட்டியது. அதன் பின்னர் பிப்ரவரி, மார்ச் ஆகிய இரண்டு மாதங்களிலும் பெருமளவு சரிவடைந்தது. இன்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 14,050 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,12,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

அட்சய திருதியை பண்டிகைக்கு இன்னும் 18 நாட்களே இருக்கின்றன, எனவே அதற்குள் விலை அதிகரிக்குமா அல்லது தங்கம் விலை குறையுமா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் நீடிக்கிறது. ஈரான் போரின் போக்குதான் இனி வரும் நாட்களில் தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்யப்போகிறது. ஈரான் போர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முகத்தை காட்டுகிறது. ஒரு நாள் போர் அமைதியை நோக்கி செல்வதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன , அடுத்த நாளே மீண்டும் போர் தீவிரமடைந்து விடுகிறது.

Also Read

ஈரான் போர் முடிவுக்கு வந்தால் தங்கத்தின் விலை உயரும் எனவே அடுத்த 19 நாட்களில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் தான் இந்தியாவில் அட்சய திருதியை நாளில் தங்கத்தின் விலை அதிகரித்திருக்குமா அல்லது இப்போது இருக்கும் விலையை விட குறைந்திருக்குமா என்பதை தீர்மானிக்க போகிறது. அமெரிக்க மத்திய வங்கியும் இந்த மாதம் கொள்கை முடிவுகளை அறிவிக்க உள்ளது. வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்வார்கள் இதனால் தங்கம் விலை அதிகரிக்கும், ஒருவேளை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் தங்கத்தின் விலை குறையும். வட்டியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்றாலும் தங்கத்தின் விலை உயராமல் அதே நிலையில் நீடிக்கும்.

எனவே அமெரிக்க மத்திய வங்கி எடுக்கக்கூடிய வட்டி விகித முடிவு, அமெரிக்க டாலர் ஏற்ற இறக்கம் மற்றும் ஈரான் போரால் ஏற்படக்கூடிய கச்சா எண்ணெய் விலை மாற்றம் ஆகியவற்றை பொறுத்து அட்சய திருதியை நாளில் தங்கத்தின் விலை அதிகரிக்கவும் செய்யலாம் குறையவும் செய்யலாம். ஒரு வேளை விலை கூடிவிட்டால் என்ன செய்வது எனக்கு இப்போதுள்ள விலைக்கே தங்கம் வாங்க வேண்டும் என எண்ணுபவர்களுக்கு நகைகடைகள் ஒரு வாய்ப்பினை தருகின்றன.

Recommended For You

பல்வேறு நகைக் கடைகளில் முன்பதிவு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதாவது முன்கூட்டியே தங்கத்தை முன்பதிவு செய்வது. உதாரணமாக அட்சய திருதியை நாளில் தங்கம் விலை உயரலாம் என சந்தேகப்படுபவர்கள், இன்றைய நாள் விலைக்கு தங்கத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு முன்பதிவு செய்து குறிப்பிட்ட அட்வான்ஸ் பணம் கட்டினால் போதும், அட்சய திருதியை நாளில் கடைக்கு சென்று மீத பணத்தை கொடுத்து முன்பதிவு செய்த தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம். எனவே இவ்வாறு நகை முன்பதிவு செய்பவர்கள் தங்கம் விலை உயருமா என அச்சப்பட தேவையில்லை. அப்படி உயர்ந்தாலும் குறைந்த விலைக்கே நீங்கள் தங்கம் வாங்கலாம். ஆனால் முன்பதிவு செய்வோர் நம்பகமான கடைகளை தேர்வு செய்தால் மோசடிகளில் இருந்து தப்பிக்கலாம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+