அட்சய திருதியை.. ஆன்லைனில் குவியும் சலுகைகள்.. களைகட்டும் ஆன்லைன் வியாபாரம்..!

பொதுவாக அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க நினைக்கும், நம்மவர்கள் இந்தமுறை கொரோனாவால் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

அட வீடுகளுக்குள் முடங்கி கிடந்தால் என்ன? அதான் ஆன்லைனிலேயே தங்கம் கிடைக்கிறதே. அதில் வாங்கிக் கொள்ளலாமே. அதுவும் பற்பல சலுகைகளோடு.

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் செலவம் பெருகும் என்பதும், வாழ்வு வளம் பெரும் என்பதும் பழ வருடங்களாக நம் மக்களிடம் இருந்து வரும் நம்பிக்கை.

ஆன்லைனில் சலுகை

ஆன்லைனில் சலுகை

ஆக பொதுவாக தமிழக்கத்திலும் இது ஒரு பண்டிகை தினம் போல மக்கள் கூட்டம் நகைக்கடைகளை நோக்கி அலைமோதுவதை காண முடியும், ஆனால் தற்போது கொரோனாவால் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நிலையில், ஆன்லைன் தள்ளுபடிகளை வாரி வழங்கி வருகின்றன. ஆக மக்கள் ஆன்லைன் மூலமாக எந்த பிரச்சனையும் இன்றி தங்கித்தினை வாங்கிக் கொள்ள முடியும்.

அதென்ன அட்சய திருதியை

அதென்ன அட்சய திருதியை

சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வரும் 3-வது திதியை, அட்சய திருதியை என்று அழைப்பர். நடப்பு ஆண்டு அட்சய திருதியை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வழக்கமாக அட்சய திருதிய நாளில் தங்கம் உள்பட மங்கல பொருட்கள் வாங்குவது நம்மவர்களின் பழக்கம். குறிப்பாக பொன் வங்குவது வழக்கம். ஏனெனில் இந்த நாளில் வாங்குவது அபிவிருத்தியாகும் என்பது மக்களின் நம்பிக்கை.

கடைகள் மூடல்

கடைகள் மூடல்

வழக்கமாக இந்த நாட்களில் தங்க நகை கடைகளில் கூட்டம் அலைமோதும். ஆனால் நடப்பு ஆண்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதனால் நகைக்கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மக்களும் வேலைகளுக்கு செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் நிலையே நீடித்து வருகிறது.

ஆன்லைனில் சலுகை

ஆன்லைனில் சலுகை

எனினும் கடைகள் தானே மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் விற்பனைக்கு எந்த வித பிரச்சனையும் இல்லையே என, பெரிய பெரிய நகைக் கடைகள் சில நாட்களுக்கு முன் பெரிய தங்க கடை நிறுவனங்கள் அட்சய திருதியை நாளில் ஆன்லைன் வாயிலாக தங்கம் வாங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

சிறந்த வாய்ப்பு

சிறந்த வாய்ப்பு

ஆக இதற்கான வழிமுறைகளை வாடிக்கையாளர்களுக்கு இணையதளம், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக அறிவித்தது. இதனை தொடர்ந்து பலரும் ஆன்லைன் மூலம் தங்கம் வாங்க ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர். கெரோனாவாவது ஒன்னாவாது. எப்படியேனும் அட்சய திருதியை நாளில் தங்கம் வங்கியே ஆக வேண்டும் என்பவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு தான்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+