டெல்லி: பஜாஜ் பின்செர்வ் நிறுவனத்தின் கடன் வழங்கும் பிரிவான பைனான்ஸ் நிறுவனம், பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
பஜாஜ் பைனான்ஸ் 12 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரையிலான காலத்திற்கான பிக்சட் டெபாசிட்களுக்கு 25 அடிப்படை புள்ளிகள் வட்டியை அதிகரித்துள்ளது.
அதிகரிக்கப்பட்டுள்ள இந்த வட்டி அதிகரிப்பானது டிசம்பர் 22 முதல் அமலுக்கு வரவுள்ளது. இது மேற்கோண்டு பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்பவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். இதன் மூலம் கூடுதலாக வருமானம் பார்க்க முடியும்.
ரூ.5 கோடி வரையிலான டெபாசிட்கள்
வட்டி அதிகரிக்கப்பட்டுள்ள விகிதமானது பஜாஜ் பைனான்ஸின் பிக்சட் டெபாசிட்டில் செய்யப்படும், 5 கோடி ரூபாய் வரையிலான டெபாசிட்டுகளுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய டெபாசிட்கள், புதுபிக்க வேண்டிய டெபாசிட்கள் என அனைத்திற்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கு என்ன சலுகை?
பஜாஜ் பைனான்ஸின் இந்த அறிவிப்பானது ரிசர்வ் வங்கியானது தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் நிலையில் வந்துள்ளது. திருத்தியமைக்கப்பட்ட நிலையான வைப்பு திட்டத்தின் கீழ், 44 மாத காலத்திற்கு, 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் 7.95% வரையிலும், அதேசமயம் மூத்த குடிமக்கள் அல்லாதவர்களுக்கு 7.70% வரையில் வட்டி விகிதம் கிடைக்கும்.
39 மாத நிலவரம்
பஜாஜ் பைனான்ஸ் சமீபத்தில் அறிமுகப்படுத்திய 39 மாதங்களுக்கு 60 வயதுக்குட்பட்ட டெபாசிட் தாரர்களுக்கு 7.60% வரையிலும் வட்டி விகிதத்தினை பெறலாம். இதே மூத்த குடி மக்களுக்கு 7.85% வரையில் சம்பாதிக்கலாம்.
இந்த மாத தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி 35 அடிப்படி புள்ளிகள் வட்டியை அதிகரித்து, 6.25% ஆக வட்டியினை அதிகரித்தது. இது தொடர்ந்து 5வது முறையாக வட்டி விகிதத்தினை அதிகரித்தது. இது பணவீக்கத்தினை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வட்டி விகிதத்தினை அதிகரித்தது.
கனரா வங்கி வட்டி அதிகரிப்பு
இதேபோல கனரா வங்கியில் வட்டி விகிதம் அதிகரித்துள்ளது. அதிகரிக்கப்பட்டுள்ள வட்டி விகிதம் 21.12.2022 முதல் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சேமிப்பு கணக்களுக்கு 4% வரையில் வட்டி கிடைக்கிறது. டிசம்பர் 19 அன்று சேமிப்பு கணக்கில் செய்யப்படும் டெபாசிட்களுக்கு 55 அடிப்படை புள்ளிகள் வட்டியை அதிகரித்தது.
கனரா வங்கி எவ்வளவு வட்டி?
கனரா வங்கி சேமிப்பு கணக்குகளுக்கு 50 லட்சம் ரூபாய் வரையிலான டெபாசிட்களுக்கு, 2.90% வட்டியும், 50 லட்சம் ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரையிலான டெபாசிட்களுக்கு, 2.95% வட்டியும் கிடைக்கும். 5 கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரையிலான டெபாசிட், 10 கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய் வரையிலான டெபாசிட்களுக்கு 3.05% வட்டி கிடைக்கும்.
4% வட்டி விகிதம்
இதே 100 கோடி ரூபாய் முதல் 500 கோடி ரூபாய் வரையிலான சேமிப்புகளுக்கு 3.50% வட்டியும், 200 - 500 கோடி ரூபாய் மதிப்பிலான டெபாசிட்களுக்கு 3.10% வட்டியும் கிடைக்கும். இதே 500 - 1000 கோடி ரூபாய் மதிப்பிலான டெபாசிட்களுக்கு 3.40% வட்டியும், 1000 - 2000 கோடி ரூபாய்க்கு, 3.55% வட்டியும் கிடைக்கிறது. 2000 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேலான டெபாசிட்களுக்கு 4% மேலாக வட்டியும் கிடைக்கிறது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications