நகைக்கடைகளை விட குறைவான விலையில் தங்கம்: வங்கிகள் ஏலம் விடும் தங்க நகைகளை வாங்கலாமா?

இந்தியாவில் தங்கத்தை அடகு வைத்து கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது. ஒரு அவசர பணத்தேவை, தொழில் மூலதனம், கல்வி செலவு, மருத்துவ செலவு போன்ற தேவைகளுக்கு மக்கள் முதலில் நாடுவது தங்க நகை கடன்களை தான். பொது துறை வங்கிகள், தனியார் வங்கிகள் தாண்டி தங்க நகை அடகு பெற்று கடன் வழங்குவதற்காகவே பிரத்தியேக நிதி நிறுவனங்களும் இந்தியாவில் செயல்படுகின்றன.

தங்க கடன்கள் ஏன் அதிகரிப்பு? : தங்க நகையை கொண்டு சென்றால் அடுத்த் 15 நிமிடங்களிலேயே பணம் கிடைக்கும், பெர்சனல் லோனை விட குறைந்த வட்டி குறைவு, கிரெடிட் ஸ்கோர் தேவையில்லை, பெரிய அளவில் ஆவணங்கள் எதுவும் தர வேண்டிய அவசியமில்லை. எளிய மக்களும் ஈஸியாக சென்று வாங்க கூடிய கடன் தான் தங்க நகை கடன்.

நகைக்கடைகளை விட குறைவான விலையில் தங்கம்: வங்கிகள் ஏலம் விடும் தங்க நகைகளை வாங்கலாமா?

வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு தங்க நகையை கொண்டு சென்றால் அவர்கள் அதன் தரம் அதில் உள்ள தங்கத்தின் அளவு ஆகியவற்றை சரிபார்த்து நமக்கு கடன் வழங்குவார்கள். இந்த கடன் தொகையை கடன் வாங்கிய தேதியில் இருந்து அடுத்த ஆண்டு அதே தேதிக்குள் அதாவது ஓராண்டுக்குள் செலுத்தி நகையை மீட்டு கொள்ள வேண்டும்.

ஏலம் விடப்படும் நகைகள்:ஒரு வேளை வங்கிகள் நாம் அடமானமாக வைத்த தங்கத்தை மீட்காமல் விட்டுவிட்டால் வங்கி சார்பாக நமக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அப்போதும் நாம் கடனை செலுத்த தவறினால் வங்கிகள் அந்த நகைகளை ஏலத்தில் விட்டு தங்கள் கடனை மீட்டு கொள்ளும். இவ்வாறு வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஏலத்தில் விடும் தங்க நகைகளை வாங்கலாமா? அப்படி வாங்குவதில் நமக்கு என்ன லாபம் என்பதை பார்க்கலாம்.

நகைக்கடைகளை விட குறைவான விலையில் தங்கம்: வங்கிகள் ஏலம் விடும் தங்க நகைகளை வாங்கலாமா?

சந்தை விலையை விட குறைவு: வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டு, திருப்பி செலுத்தப்படாத கடன்களுக்காக ஏலம் விடப்படும் நகைகளை பொதுமக்கள் சட்டப்பூர்வமாக வாங்க முடியும். இது சந்தை விலையை விட சற்று குறைந்த விலையில் தங்கம் வாங்க ஒரு நல்ல வாய்ப்பாகும். இந்தியாவில் பல்வேறு இணையதளங்கள் இது போல வங்கிகள் ஏலம் தொடர்பான தகவல்களை பிரத்தியேகமாக தருகின்றன. அப்படி சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு நிறுவனம் தான் chennaibankauction. இந்த தளத்தில் நாம் சந்தா செலுத்தினால் எந்தெந்த வங்கிகள் வீடு, நிலம் , தங்க நகைகள் உள்ளிட்டவற்றை ஏலம் விடுகின்றன் என்ற தகவல்களை நமக்கு மெயில் மற்றும் வாட்ஸ் அப் மூலமாக தந்துவிடுவார்கள். அதனை வைத்து நாம் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று விவரங்களை அறிந்து ஏலத்தில் பங்கேற்கலாம்.

Also Read

நிபுணர்கள் சொல்வது என்ன?: இவ்வாறு ஏலம் விடப்படும் தங்க நகைகளை வாங்குவதில் உள்ள சாதகங்கள் என்ன என்பது குறித்து chennaibankauction நிறுவனத்தின் நிறுவனர் சையது பஷீரிடம் தொடர்பு கொண்டு குட் ரிட்டர்ன்ஸ் தமிழ் சார்பாக பேசினோம். அப்போது அவர் வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஏலம் விடும் தங்க நகைகளை வாங்குவதில் உள்ள சாதகங்களை நமக்கு விவரித்தார்.

சந்தை விலையை விட குறைவு: சந்தை விலையை விட குறைவான விலையில் தங்கம் கிடைக்கும். கடைக்கு சென்று ஒரு சவரன் தங்க நகை வாங்க வேண்டும் என்றால் இன்றைய விலைக்கு ஒரு கிராம் தங்கம் 1.10 லட்சத்திற்கு விற்கப்படுகிறது, இத்துடன் 12% செய்கூலி சேதாரம், 3% ஜிஎஸ்டி சேர்த்தால் ஒரு பவுன் தங்கம் வாங்க 1.27 லட்சத்தை கொடுக்க வேண்டும். அதாவது தங்கம் விலையை விட கூடுதலாக 17,000 ரூபாயை நாம் செலுத்த வேண்டும்.

Recommended For You

இதுவே ஒரு பவுன் நகையை நாம் ஏலத்தில் எடுத்தால் ஒரு பவுனுக்கு சந்தை விலையை விட குறைவான கட்டணம் அதாவது 95,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை தான் ரிசர்வ்டு பிரைஸாக நிர்ணயம் செய்வார்கள். இதனை நாம் ஏலத்தில் 1.05 லட்சம் வரை கொடுத்து வாங்கினால் கூட நமக்கு ஒரு பவுனுக்கு 22 ரூபாய் சேமிக்க முடியும் என்கிறார்.

நகைக்கடைகளை விட குறைவான விலையில் தங்கம்: வங்கிகள் ஏலம் விடும் தங்க நகைகளை வாங்கலாமா?

சட்டப்பூர்வ உரிமை:இந்த நகைகள் வங்கிகளால் ஏலம் விடப்படுவதால், நகையின் தூய்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து பெரியளவில் சந்தேகப்பட தேவையில்லை என்றும், வங்கிகள் நகை மதிப்பீட்டாளர் மூலம் சரிபார்த்தே ஏலத்திற்கு விடும் என்றும் தெரிவிக்கிறார். சட்டப்பூர்வமாக பத்திரங்கள் மற்றும் ரசீதுகள் வழங்கப்படுவதால் ஏலம் எடுத்த பின்னர் யாரும் வந்து அந்த நகைக்கு உரிமை கோர மாட்டார்கள் என கூறுகிறார்.

நகை வியாபாரிகள் போட்டி: ஆனால் இவ்வாறு தங்க நகைகளை ஏலம் எடுக்க அதிக போட்டி நிலவும் என்கிறார் சையது பஷீர். அதாவது நகை வியாபாரிகள் தான் இதில் ஆதிக்கம் செலுத்துவார்களாம். ஏனெனில் சந்தை விலையை விட குறைந்த விலைக்கு தங்கம் கிடைப்பதால் அந்த நகையை வாங்கி பாலிஷ் போட்டு விற்பனை செய்தாலும் உருக்கி வேறு நகையாக மாற்றி விற்பனை செய்தாலும் வியாபாரிகளுக்கு லாபம் தான் என்கிறார்.

எப்படி நடக்கும் நகை ஏலம்?: பொதுவாக ஒரு வங்கி ஒரு பவுன் நகையை ஏலம் விடுகிறது அதற்கான அடிப்படை விலையாக 90,000 ரூபாயாக அறிவித்துள்ளது என்றால் ஏலத்திற்கு செல்பவர்கள் ஒரு புக்கிங் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இது 10,000 ரூபாயாக இருக்கும் என்கிறார், ஏலத்தில் நகையை எடுத்தால் இந்த பணம் கழித்து கொள்ளப்படும் இல்லை என்றால் திரும்ப வழங்கப்பட்டுவிடும் என்கிறார். இந்த 90,000 ரூபாயில் இருந்து ஒவ்வொருவராக ஏலம் கேட்பார்கள், இதில் மார்க்கெட் விலையை தாண்டி ஏலம் செல்லாது எனவே மார்க்கெட் விலைக்குள் யார் அதிகபட்ச தொகையை ஏலம் கேட்கிறார்களோ அவர்களுக்கு வழங்கப்படும் என்கிறார்.

பொதுமக்கள் தாராளமாக இந்த ஏலத்தில் பங்கேற்கலாம் ஆனால் நகை வியாபாரிகளின் போட்டி அதிகமாக இருக்கும் என கூறும் அவர் இந்த முறையில் சந்தை விலையை விட குறிப்பாக செய்கூலி சேதாரம் இல்லாமலே தங்க நகை வாங்கும் வாய்ப்பு நமக்கு கிடைப்பதால் லாபம் தான் என்கிறார்.

You May Also Like

என்னென்ன ரிஸ்க் உள்ளது?: இதில் சில ரிஸ்கும் இருப்பதாக சையது பஷீர் தெரிவிக்கிறார், முதலில் ஏலம் கொடுக்கும் பணத்தை நீங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும், அடுத்ததாக நகையை ஏலம் எடுத்தால் வங்கியிலேயே அதன் தரம் , என்ன கேரட் அளவு, ஹால்மார்க் உள்ளிட்டவற்றை முழுமையாக தெரிந்து கொண்டு ய்தான் வாங்க வேண்டும் என்கிறார். நகையை வாங்கிவிட்டு வங்கி வாசலை விட்டு வெளியேறிவிட்டாலே மீண்டும் நகையில் பிரச்சினை என கூறி வந்தால் வங்கிகள் கைவிரித்துவிடும் என கூறுகிறார்.

பொதுவாக அடகு வைக்கப்பட்டவை பழைய நகைகள் என்பதால், உங்களுக்குப் பிடித்த நவீன டிசைன்களில் கிடைக்காமல் போகலாம். சில நகைகள் உடைந்திருக்கவோ அல்லது கற்கள் பதித்திருக்கவோ கூடும் என்பதால் முன்கூட்டியே வங்கியில் அனைத்தையும் ஆய்வு செய்து பின்னர் முடிவெடுப்பது நல்லது என்கிறார். மேலும் வங்கி ஏலத்தின் மூலம் தங்கம் வாங்குவதற்கு முன்பு, குறிப்பிட்ட வங்கியின் விதிமுறைகளையும் ஏல கட்டணங்களையும் முன்கூட்டியே தெளிவாக படித்து தெரிந்து கொள்வது நல்லது என்கிறார். எனவே ஏல நகை வாங்குவது நமக்கு லாபம் தான் அதேசமயம் மிக கவனமாக இதில் பங்கேற்பது அவசியம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+