மறைந்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது இரண்டாவது பட்ஜெட்டில் (2015) தங்க பத்திரம் திட்டத்தை (எஸ்ஜிபி) அறிவித்தார். தங்கத்தை உலோகமாக வாங்குவதற்கு பதிலாக காகித வடிவத்தில் வாங்குவதாகும். இந்த திட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
கடைசியாக 2024 பிப்ரவரியில் தங்க பத்திர வெளியீடு நடந்தது. அதன் பிறகு வெளியீடு நடைபெறவில்லை. இதனால் மத்திய அரசு அதிகாரப்பூர்வமற்ற முறையில் தங்க பத்திர திட்டத்தை ரத்து செய்து விட்டதாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில், அதிக செலவை காரணம் காட்டி, தங்க பத்திர திட்டத்தை மத்திய அரசு நிறுத்தியுள்ளது.

தங்க பத்திரம் ஒரு கவர்ச்சிகரமான முதலீட்டு விருப்பமாக கருதப்பட்டது. மேலும், தங்கத்தை பாதுகாக்க வேண்டிய கவலை இல்லாமல் முதலீட்டாளர்கள் அதனை டிஜிட்டல் வடிவத்தில் வைத்திருக்க முடியும். மேலும் ஆண்டுக்கு 2.5 முதல் 2.75 சதவீதம் வட்டி வேறு கிடைக்கும். தற்போது தங்க பத்திரம் திட்டத்துக்கு மூடு விழா நடத்தியிருப்பது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இருப்பினும், தங்க பத்திர திட்டத்துக்கு மாற்றாக சில முதலீட்டு திட்டங்கள் உள்ளதால் முதலீட்டாளர்கள் அவற்றில் முதலீடு செய்யலாம். முதலீட்டாளர்களுக்கு இப்போது கோல்டு இடிஎஃப், கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது அல்லது பங்குச் சந்தையில் தங்க பத்திரங்களை வாங்குவது போன்ற மாற்று வழிகள் உள்ளன என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
தங்க பத்திரங்கள்
இரண்டாம் நிலை சந்தை என்று அழைக்கப்படும் மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) மற்றும் தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) தங்க பத்திரங்களை ஒருவரால் வாங்க முடியும். டெபாசிட்டரிகளுடன் டி-மேட் வடிவத்தில் வைத்திருக்கும் தங்க பத்திரங்களை மட்டுமே பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி 2015ம் ஆண்டு முதல் கடைசியாக தங்க பத்திரங்களை வெளியிட்டது வரை 67 தங்க பத்திர வெளியீட்டுகளை நடத்தி, 14.7 கோடி பத்திரங்களை வெளியிட்டுள்ளது. இவை பங்குச் சந்தைகளில் ரொக்க பிரிவில் பட்டியலிடப்பட்டு வர்த்தகம் செய்யப்படுகின்றன. சில்லரை முதலீட்டாளர்கள் அவற்றை டீமேட் கணக்குகள் மூலம் வாங்கலாம் மற்றும் விற்கலாம்.
கோல்டு இடிஎஃப்
தங்க (கோல்டு) இடிஎஃப் திட்டத்தில், தங்க விலைகளை அடிப்படையாக கொண்டு தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. ஒரு கோல்டு இடிஎஃப் யூனிட் என்பது, 1 கிராம் தூய தங்கத்துக்கு சமம். கோல்டு இடிஎஃப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளதால் மிகவும் பாதுகாப்பானது மற்றும் அதிக பணப்புழக்கத்தை கொண்டுள்ளன.
கோல்டு இடிஎஃப்புக்கு கட்டணங்கள் உள்ளன. இருப்பினும் தங்க நகைகளின் மேக்கிங் சார்ஜை காட்டிலும் குறைவுதான். மேலும், கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகளை காட்டிலும் இடிஎஃப்களின் செலவு விகிதம் குறைவு. கோல்டு இடிஎஃப் வாங்கும் போதும், விற்பனை செய்யும் போதும் தரகு செலுத்த வேண்டும். முதலீட்டாளர் டீமேட் கணக்கு வைத்திருந்தால் மட்டுமே கோல்டு இடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்ய முடியும்.
கோல்டு மியூச்சுவல் ஃபண்ட்
கோல்டு மியூச்சுவல் ஃபண்ட் என்பது கோல்டு எடிஎஃப்-களின் யூனிட்களில் முதலீடு செய்யும் ஒரு ஒப்பன் என்ட் ஃபண்ட் ஆகும். ஒவ்வொரு கோல்டு மியூச்சுவல் ஃபண்டும் நிதியின் நோக்கத்தின்படி, முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு ஒரு நிதி மேலாளர் இருக்கிறார்.
இடிஎஃப்களுடன் ஒப்பிடுகையில் கோல்டு மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களின் விலை நிர்ணயம் வித்தியாசமானது. வர்த்தக முடிவில் வெளிப்படுத்தப்படும் நிகர சொத்து மதிப்பு வடிவத்தில் இருக்கும். கோல்டு இடிஎஃப்களை விட கோல்டு மியூச்சுவல் ஃபண்ட் செலவு விகிதம் 1-2 சதவீதம் அதிகம். கோல்டு இடிஎஃப்களுடன் ஒப்பிடும்போது கோல்டு மியூச்சுவல் ஃபண்டில் குறைந்த அளவில் முதலீடு செய்யலாம்.
இதனால் சில்லரை முதலீட்டாளர்கள் கோல்ட் மியூச்சுவல் ஃபண்டை பொருளாதார ரீதியாக அணுகக்கூடியதாக இருக்கிறது. கோல்டு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஒருவருக்கு டீமேட் கணக்கு அவசியமில்லை. தரவுகளின்படி, கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகள் ஒரு வருடத்தில் சுமார் 30 சதவீதம் ஆதாயத்தை வழங்கியுள்ளன.
More From GoodReturns

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?



Click it and Unblock the Notifications