பொதுவாக, நாம் செய்யும் முதலீட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதியை தங்கத்திலும் இன்வெஸ்ட் செய்ய வேண்டும் என்பார்கள் நிதி ஆலோசகர்கள்.
ஈக்விட்டி சந்தைகள், மோசமாக செயல்படும் போது, தங்கத்தின் விலை, நம் போர்ஃபோலியோவை பாதுகாக்கும் என்கிறார்கள் நிதித் துறையில் இருப்பவர்கள்.
ஆனால் நம் இந்தியாவில், நேர் மாறாக முதலில் தங்கத்தில் தான் முதலீடு செய்வோம். அதன் பின் மிச்சப் பணத்தை தான் வேறு வகையான முதலீடுகளில் பணத்தைப் போடுவோம்.
ஜிஎஸ்டி, செய்கூலி, சேதாரம் இல்லை
தங்கத்தில் முதலீடு செய்யும் மக்கள், தங்க நகைகளாகத் தான் வாங்குகிறார்கள். தங்க நகைகளை வாங்கும் போது ஜிஎஸ்டி, செய் கூலி, சேதாரம் என பலவற்றுக்கும் செலவு செய்து தான் நாம் தங்க நகைகளை வாங்க வேண்டி இருக்கிறது. இதனால் நமக்குத் தான் செலவு அதிகம். இந்த செலவுகளைத் தவிர்க்க, நிதி ஆலோசர் பிரசாத் மெளரியா, லைவ் மிண்ட் பத்திரிகையில் ஒரு யோசனை சொல்லி இருக்கிறார்.
பேப்பர் தங்கம்
தங்கத்தை நகைகளாக வாங்காமல், பேப்பர் தங்கமாக வாங்கச் சொல்கிறார். பெப்பர் தங்கம் என்றால் தங்க இ டி எஃப் (Gold Exchange Traded Fund) போன்றவைகளைச் சொல்லலாம். இப்படி தங்க இ டி எஃப் வாங்குவதால் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் சில நன்மைகளையும் தெளிவாக பட்டியல் போட்டுகிறார் பிரசாந்த்.
வெளிப்படைத் தன்மை
தங்க நகைகளை, நகைக் கடைக்காரர்கள், என்ன விலைக்கு வாங்குவார்கள் என்பதில் அதிகம் வெளிப்படைத் தன்மை இருக்காது. நாம் தங்க நகைகளை வாங்கும் போது என்ன கேரட் சொல்லி வாங்கினோமோ, அதே கேரட்டுக்கு நம்மால் விற்க முடியுமா என்றால் சிரமம் தான். ஆனால் தங்க இ டி எஃப்-களில் நாம் முதலீடு செய்யும் போதில் இருந்து, விற்கும் வரை, அதன் மதிப்பை (என் ஏ வி) தினசரி நம்மால் பார்த்துக் கொள்ள முடியும்.
லிக்விடிட்டி
இந்த தங்க இ டி எஃப்-ல் (Gold ETF) முதலீடு செய்யப்படும் பணத்தை, எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். தங்க நகைகளை கடைக்குச் சென்று உரசிப் பார்த்து, கேரட் & விலை பேரம் பேசி விற்பதை விட, இந்த தங்க இ டி எஃப் முதலீடுகளை, அன்றைய விலைக்கு விற்று விட்டு வெளியே வந்து விடலாம்.
திருட்டு பயம் இல்லை
ஆபரணத் தங்கம் மற்றும் தங்கக் கட்டிகளை பாதுகாக்க வேண்டியது நம் பொறுப்பு. வங்கியின் லாக்கர்களிலோ அல்லது வீட்டில் பாதுகாப்பான பீரோக்களிலோ பத்திரமாக பூட்டி வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் தங்க இ டி எஃப் முதலீடுகளை அப்படி பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே தங்க நகைகளுக்கு பதிலாக, பேப்பர் தங்கங்களில் முதலீடு செய்வது நல்லது என்கிறார் பிரசாந்த் மெளரியா.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்



Click it and Unblock the Notifications