ஈரான் போர் பதற்றம், பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை விற்பனை செய்வது மற்றும் தங்கத்தை வாங்குவது என ஒவ்வொரு நாளும் தங்கச் சந்தையில் ஒவ்வொரு மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரு நாள் விலை உயர்கிறது, ஒரு நாள் விலை சரிகிறது.
இன்னும் சில மாதங்களுக்கு தங்கம் விலை இப்படி ஏற்ற இறக்கமாக தான் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். தங்கத்தின் விலை தன்னுடைய வரலாற்று உச்சபட்ச விலை இருந்து பெருமளவில் சரிவடைந்து இருக்கிறது. இருந்தாலும் இப்போது தங்கத்தின் முதலீடு செய்யலாமா என்ற குழப்பம் மக்களிடையே நீடிக்கிறது. இதற்கு காரணம் காலையில் விலை குறைவது , மாலையில் விலை உயர்வது என ஒவ்வொரு நாளும் தங்கும் ஒவ்வொரு முகத்தை காட்டி வருகிறது.

இது போன்ற ஏற்ற இறக்கம் நிறைந்த சூழல்களில் தங்கத்தில் எப்படி முதலீடு செய்தால் லாபம் பார்க்கலாம் என்பது குறித்து நிபுணர்கள் கூறும் அறிவுரையை தற்போது தெரிந்து கொள்ளலாம். ஈரான் போர் தொடங்கிய பிறகு மார்ச் 1ஆம் தேதி அன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1,24,000 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது. அதுவே படிப்படியாக குறைந்து மார்ச் மாதத்தில் 1,04,000 ரூபாய் வரை வந்தது.
கடந்த 2 வார காலமாக தங்கத்தின் விலை ஒரு நாள் உயர்வது ஒருநாள் சரிவது என்ற நிலையில் இருக்கிறது. இப்படிப்பட்ட ஏற்ற இறக்கம் நிறைந்த சூழலில் எப்படி தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்பது குறித்து பஜாஜ் ஆல்டர்நெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் மூத்த தலைவர் ஜிதேந்திர கோஹில் விளக்கம் தந்திருக்கிறார்.
Buy the dip for long time gain என்ற அணுகுமுறை தான் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான சிறந்த வழிமுறை என்கிறார். Buy the dip என்ற கான்செப்ட் அடிப்படையில் நீண்ட கால நோக்கில் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என கூறுகிறார். அதாவது விலை குறையும் போதெல்லாம் வாங்கி வைப்பது ஒரு குறுகிய கால விலை ஏற்ற இறக்கங்களை எப்பொழுதுமே கணக்கில் கொள்ளக்கூடாது என கூறும் அவர் தங்கத்தில் செய்யக்கூடிய உங்களுடைய முதலீடு நீண்ட கால நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்கிறார்.
விலை குறையும் போதெல்லாம் வாங்கி வையுங்கள் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு அந்த முதலீடு பெரிய அளவில் வளர்ந்து நிற்கும் என சுட்டிக்காட்டுகிறார். எனவே விலை ஏறுகிறதே இறங்குகிறதே என குழப்பம் அடையாமல் விலை குறையும் நாட்களில் எல்லாம் தங்கத்தில் முதலீடு செய்து வையுங்கள் என அவர் கூறுகிறார். மொத்த பணத்தையும் தங்கத்திலேயே முதலீடு செய்து விடக் கூடாது என சுட்டிக்காட்டும் அவர் ஈக்விட்டி சந்தையிலும் ஒரு கணிசமான தொகையை முதலீடு செய்ய தயாராக இருங்கள் என தெரிவிக்கிறார்.
பல்வேறு முக்கியமான பங்குகள் வலுவான அடிப்படை கொண்ட பங்குகள் குறைந்த விலையிலேயே தற்போது கிடைக்கின்றன என கூறும் அவர் தற்போது இவற்றில் முதலீடு செய்தால் அடுத்த சில ஆண்டுகளில் நல்ல லாபம் பார்க்க முடியும் என தெரிவிக்கிறார். குறிப்பாக மெட்டல் மற்றும் ஸ்டீல் சம்பந்தப்பட்ட பங்குகளின் முதலீடு செய்ய அவர் அறிவுரை வழங்குகிறார் .அடுத்ததாக வங்கி சார்ந்த பங்குகள் இந்திய பங்குச் சந்தையில் சிறந்த வளர்ச்சியை பதிவு செய்யும் என்றும் நஷ்டத்தை கொடுக்காதவை என்றும் கூறுகிறார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் சிறந்த லாபம் பார்க்க வேண்டும் என எண்ணுபவர்கள் வங்கி பங்குகளில் முதலீடு செய்யலாம் என அறிவுரை வழங்குகிறார்.
இந்தியாவில் தற்போது மின்னணு பொருட்கள் உற்பத்தி, செமி கண்டக்டர் உற்பத்தி அதிகரித்து வருவதால் அது சம்பந்தப்பட்ட துறைகளிலும் , பாதுகாப்பு சம்பந்தப்பட்ட துறைகளிலும் இயங்கக்கூடிய நிறுவனங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்துகிறார். ஈக்விட்டி முதலீடுகளை தற்போதைக்கு பொறுமையுடன் தான் கையாள வேண்டும் என அவர் சுட்டிக் காட்டுகிறார். அடுத்த ஆறு முதல் ஒன்பது மாதங்களுக்கு இந்திய பங்குச்சந்தை ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ளாக தான் ஏறி இறங்கும் ஆனால் அதன் பிறகு இந்திய பங்குச் சந்தை வேகம் எடுக்கும் என அவர் தெரிவிக்கிறார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

போர் பதற்றத்திலும் லாபம் தரும் பக்கா பிளான்! பங்குச்சந்தை வீழ்ச்சியில் நீங்கள் கவனிக்க வேண்டிய SIP!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?



Click it and Unblock the Notifications

