நாம் அனைவரும் தங்கம் விலை துபாயில் மிகவும் குறைவு எனப் பலரும் சொல்லிக் கேட்டு இருப்போம், உண்மையில் விலை குறைவா..?
வரி விகிதங்கள் தற்போது இந்தியாவிலும், துபாயிலும் மாறியுள்ள வேளையில் துபாயில் தங்கம் அல்லது தங்க நகை வாங்குவது சரியா? லாபம் கிடைக்குமா..?
தங்கத்தின் விலையைத் தாண்டி பல விஷயங்கள் இருக்கும் காரணத்தால் துபாயில் தங்கம் வாங்குவதற்கு முன் முழுமையாக விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
துபாயில் தங்கம்
செப்டம்பர் 19ஆம் தேதி நிலவரத்தின் படி துபாயில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் விலை 196.50 அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் இது இந்திய ரூபாய் படி 4252 ரூபாய். இதுவே இந்தியாவில் 1 கிராம் 22 கேரட் தங்கம் அப்போது 4,656 ரூபாய். விலை வித்தியாசம், நாணய மதிப்பு ஆகியவற்றைக் கணக்கிடுவதற்காகச் செப்டம்பர் 19ஆம் தேதி விலையை எடுத்துள்ளோம்.
400 ரூபாய் வித்தியாசம்
தங்கம் விலையிலேயே சுமார் 400 ரூபாய் வித்தியாசம் உள்ளது, இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் மத்திய அரசு தங்கம் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதமாக உயர்த்தியது தான். வரி உயர்வுக்கு முக்கியக் காரணம் மே மாதத்தில் இந்தியாவின் தங்க இறக்குமதி 790 மடங்கு அதிகரித்தது. இதைக் குறைப்பதற்காகவே 10.75 சதவீத வரியை 15 சதவீதமாக அதிகரித்தது.
செய்கூலி
இப்போ துபாயில் தங்கம் விலை குறைவு தானே என்று நீங்கள் நினைத்தால் அதுதான் தவறு, துபாயில் செய்கூலி இந்தியாவை விடவும் அதிகம். தங்கம் விலை சுமார் 30 மாத சரிவில் இருக்கும் காரணத்தால் தீபாவளி பண்டிகையின் போது இந்தியாவிலும் சரி, துபாயிலும் சரி அதிகமாக இருக்கும்.
விலை மாற்றம்
இந்தியாவில் தங்கம் விலை நாளின் துவக்கத்தில் ஒரு விலையில், லண்டன் பங்குச்சந்தை துவங்கும் போது ஒரு விலையில் மாலை 4 மணிக்கு ஒரு விலை என மாறுபடுகிறது. இதுமட்டும் அல்லாமல் ஒவ்வொரு கடையிலும் தங்கம் விலை ஒரு விலையில் இருக்கும். ஆனால் துபாயில் டிக்கர் விலை தான்.
துபாயில் நிலையான விலை
அதாவது நேரம் மற்றும் விலையுடன் வரும் விலையில் தான் விற்பனை செய்ய வேண்டும் இது அந்நாட்டில் கடுமையான கட்டுப்பாடு உடன் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் விலை ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் மாறுபடாது, அதேபோல் தரமும் சரியான முறையில் மெயின்டெயின் செய்யப்படுகிறது.
இந்தியாவில் தங்கம் விலை
22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை - 4656 ரூபாய்
20 கிராம் தங்கத்தின் விலை - 93,120 ரூபாய்
ஜிஎஸ்டி 3 சதவீதம் - 2794 ரூபாய்
செய்கூலிக்கு முந்தைய விலை - 95,914 ரூபாய்
செய்கூலி - 7 சதவீதம்
செய்கூலி அளவு - 6518 ரூபாய்
செய்கூலிக்கு 5% வரி - 326
வரி மற்று செய்கூலி உடன் - 96,240
நாணய பரிமாற்றம் சதவீதம் - இல்லை
நாணய பரிமாற்றம் செலவுகள் - இல்லை
மொத்த விலை - 1,02,758 ரூபாய்
துபாயில் தங்கம் விலை
22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை - 4,252 ரூபாய்
20 கிராம் தங்கத்தின் விலை - 85,040 ரூபாய்
ஜிஎஸ்டி 3 சதவீதம் - திரும்பக் கிடைக்கும் VAT வரி
செய்கூலிக்கு முந்தைய விலை - 85,040
செய்கூலி - 25 சதவீதம்
செய்கூலி அளவு - 21,260
செய்கூலிக்கு 5% வரி - திரும்பக் கிடைக்கும் VAT வரி
வரி மற்றும் செய்கூலி உடன் - 1,06,300 ரூபாய்
நாணய பரிமாற்றம் சதவீதம் - 2.8 முதல் 3.5 %
நாணய பரிமாற்றம் செலவுகள் - 3,721
மொத்த விலை - 1,10,021 ரூபாய்


Click it and Unblock the Notifications