சென்னை: தங்கத்தில் முதலீடு என்றாலே பெரும்பாலான இந்தியர்கள் தங்க நகைகளாக தான் வாங்கி வைக்கிறார்கள் . கையில் ஒரு கணிசமான தொகை சேர்ந்து விட்டாலும் சரி அல்லது மாதம்தோறும் சீட்டு பணமாக கட்டியும் சரி ஆண்டுக்கு ஒரு முறை தங்கத்தை வாங்கி விடுவதை இந்தியர்கள் குறிப்பாக குறிப்பாக மிடில் கிளாஸ் மக்கள் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.
தங்க நகைக்கான தேவை இருக்கிறது என்பவர்கள் இந்த முறையில் தங்கத்தை வாங்கி வைக்கலாம். ஆனால் முதலீடு நோக்கத்தில் தங்கம் வாங்குபவர்கள், செல்வத்தை பெருக்க தங்கம் வாங்குபவர்களுக்கு தங்கத்தை நகையாக வாங்குவது லாபம் தானா என்பதை நாம் தற்போது கணக்கீடு செய்து பார்க்க போகிறோம் .

நிதின் கவுசிக் என்ற பட்டய கணக்காளர் எக்ஸ் பக்கத்தில் தொடர்ச்சியாக முதலீடு சார்ந்த பல்வேறு விஷயங்களை பதிவிட்டு வருகிறார். அதில் முதலீடு நோக்கத்தில் தங்கத்தை நகையாக வாங்குவது ஒரு மோசமான முடிவு என கூறுகிறார். என்னிடம் பணம் இருக்கிறது அதனை நான் முதலீடு நோக்கத்திற்காக தங்கமாக வாங்க போகிறேன் என்பவர்கள் நிச்சயமாக தங்கத்தை நகையாக வாங்க கூடாது ஏனெனில் அதில் உங்களுக்கு லாபம் இல்லை என கூறுகிறார்.
அதாவது உங்களுக்கு நகைக்கான தேவை இருக்கிறது எனும்போது நீங்கள் சீட்டுக்கட்டியோ அல்லது கையில் இருக்கும் பணத்தை போட்டு நகை வாங்குவதோ தவறில்லை ஆனால் முதலீடு செய்கிறேன் என கூறி தங்கத்தை நகையாக வாங்காதீர்கள் என தெரிவிக்கிறார். பெரும்பாலான நம் முன்னோர்கள் நமக்கு கூறக்கூடிய அறிவுரை தங்கம் வாங்கு என்பது தான், ஆனால் அவர்கள் கூறிய ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்வது இல்லை.
அதாவது தங்கம் வாங்கு என்றால் தங்க நகை வாங்கு என அர்த்தம் இல்லை என்கிறார். 24 கேரட் தங்கம் 99.9% தங்கத்தை கொண்டது. அதாவது 24 கேரட் தங்கம் தான் தூய்மையான தங்கம் அதில் நீங்கள் போடும் பணம்தான் உண்மையான முதலீடு என கூறுகிறார். 24 கேரட் தங்கத்தில் நீங்கள் செலுத்தும் பணம் முழுவதற்குமே தங்கம் தான் கிடைக்கிறது என்கிறார்.
இதையே நீங்கள் ஆபரண தங்கமாக வாங்குகிறீர்கள் என்றால் 22 கேரட் தங்கத்தில் 91.6% தான் தங்கம், 18 கேரட் தங்கத்தில் 75% தான் தங்கம் , 14 கேரட் தங்கத்தில் 58.5% மட்டுமே தங்கம். அப்படி என்றால் நீங்கள் ஆபரணமாக வாங்கும்போது அதில் உண்மையாகவே நீங்கள் வாங்கிய தங்கத்தின் அளவு இவ்வளவுதான் என கூறுகிறார். உதாரணமாக 22 கேரட் ஆபரண தங்கத்தையும் நீங்கள் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்குகிறீர்கள் என்றால் அதில் 45 ,800 ரூபாய்க்கு தான் நீங்கள் தங்கத்தை வாங்கி இருக்கிறீர்கள் என குறிப்பிடுகிறார்.
தங்க நகை உங்களுக்கு உண்மையான ஒரு முதலீட்டு மதிப்பை கொடுப்பதற்கு 5 முதல் 7 ஆண்டுகள் வரை ஆகும் எனக் கூறுகிறார். இதற்காகத்தான் தங்கத்தில் முதலீடு என்றால் தயவு செய்து நகையாக வாங்காதீர்கள் 24 கேரட் தங்க நாணயம் அல்லது பார்களாக வாங்கி வையுங்கள் என்கிறார்.
இதனை விட சிறந்தது கோல்டு ஈடிஎஃப் மற்றும் கோல்டு எஸ் ஐபி திட்டங்கள் என சுட்டிக்காட்டுகிறார்.இந்த வகையில் நாம் செய்ய முதலீடு செய்யும் தொகையுமே தங்கத்தில் தான் முதலீடு செய்யப்படும் என கூறுகிறார். நம் உணர்வுகளுக்காகவும் தேவைகளுக்காகவும் தங்க நகை வாங்கி கொள்ளலாம் ஆனால் செல்வத்தை பெருக்க வேண்டும் என்றால் நகையாக வாங்காதீர்கள் 24 கேரட் தங்கம் அல்லது ஈடிஎஃப், தங்க பத்திரங்களில் முதலீடு செய்யுங்கள் என அவர் அறிவுரை வழங்குகிறார். நீங்கள் வாங்கும் அனைத்து தங்க நகையுமே உங்களுக்கான முதலீடு கிடையாது என்கிறார்.
தங்க நகைக்கான தேவை இருக்கிறது என்பவர்கள் தங்க சீட்டு போட்டு நகையாக வாங்கி வைக்கலாம், ஆனால் முதலீடு நோக்கத்தில் தங்கம் வாங்குகிறேன் என்பவர்கள் நகையாக வாங்கினால் உண்மையில் அவர்களுக்கு நஷ்டமே கிடைக்கிறது என தன்னுடைய பதிவின் மூலம் அவர் தெளிவுபடுத்தி இருக்கிறர்.
More From GoodReturns

மதுரையில் இன்று தங்கம் விலை எகிறியது! நகை வாங்க காத்திருந்தோர் ஷாக்!

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

அட்சய திருதியை தங்கம் விற்பனை: மக்களே இத கவனிக்கலனா உங்க தலையில துண்டு!!

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?



Click it and Unblock the Notifications