Instamart, Zepto-இல் தங்கம் விற்பனை: மக்களே உஷார்..!! முதல்ல இத செக் பண்ணிட்டு பணம் கொடுங்க..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னணி குயிக் காமர்ஸ் நிறுவனங்களான இன்ஸ்டாமார்ட், செப்டோ, பிளிங்கிட் உள்ளிட்ட செயலிகள் தங்கத்தை 10 நிமிட டெலிவரிக்குள் கொண்டு வந்துள்ளன.

தீபாவளிக்காக தங்க நாணயம் வாங்க கூடிய மக்கள் இதற்காக கடைக்கு சென்று அலைய வேண்டிய தேவையில்லை. தங்கள் வீட்டில் இருந்தே குயிக் காமர்ஸ் செயலிகளான பிளிங்கிட் , செப்டோமற்றும் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் போன்றவற்றில் புக் செய்து உடனடியாக தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை டெலிவரி பெறலாம். தங்க நாணயத்தில் பெரியதாக டிசைன்கள் தேவையில்லை எனவே நேரில் கடைக்கு சென்று தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

Instamart, Zepto-இல் தங்கம் விற்பனை: மக்களே உஷார்..!! முதல்ல இத செக் பண்ணிட்டு பணம் கொடுங்க..!!

கடைகளில் கூட்டமாக இருக்கும் இதற்காக போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டு கடைக்கு சென்று தங்க நாணயம் வாங்குவதை விட வீட்டிலேயே நிம்மதியாக ஒரு கிளிக்கில் ஆர்டர் செய்து தங்க நாணயத்தை வாங்கும் வசதிகளை இந்த செயலிகள் கொண்டு வந்துள்ளன.

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் நிறுவனம் பிரபல 'கல்யாண் ஜூவல்லர்ஸ்' நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இதன் மூலம் தங்க நாணயங்கள் இன்ஸ்டாமார்ட்டில் கிடைக்கின்றன. மேலும் நவம்பர் 1 முதல் நவம்பர் 6 வரை, இன்ஸ்டாமார்ட்டில் கல்யாண் ஜூவல்லர்ஸ் தங்க நாணயத்தை வாங்கும் இந்திய அளவிலான முதல் 1,000 வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் 1 கிராம் வெள்ளி நாணயம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

Also Read

இது தவிர, ஒவ்வொரு தங்க நாணய பர்சேஸுக்கும் 5 கிராம் வெள்ளி நாணயத்திற்கான டிஜிட்டல் தள்ளுபடி வவுச்சர் இலவசமாக கிடைக்கும். இந்த வவுச்சரை இந்தியா முழுவதும் உள்ள கல்யாண் ஜூவல்லர்ஸ் கடைகளில் பயன்படுத்தலாம். இதே போல பிளிங்கிட் செயலி மலபார் கோல்டு டைமன்ஸ் நிறுவனத்தோடு கை கோர்த்துள்ளது. செப்டோ, அமேசான் உள்ளிட்ட தளங்களிலும் தங்க மற்றும் வெள்ளி நாணயங்கள் கிடைக்கின்றன.

வீட்டில் இருந்தபடியே தங்கம் வாங்குவது ஒரு சிறந்த வசதி தான் என்றாலும் அதில் சில விஷயங்களையும் நீங்கள் கட்டாயம் கவனித்தாக வேண்டும். இவ்வாறு குயிக் காமர்ஸ் செயலிகளில் தங்கம் வாங்கும் போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். தங்க நாணயங்கள் பொதுவாக 22 காரட் மற்றும் 24 காரட் தூய்மை தன்மைகளில் விற்கப்படுகின்றன. எனவே ஆர்டர் செய்யும் முன்பு நாணயத்தின் எடை, தூய்மை மற்றும் தயாரிப்பு விவரங்களை படிக்க வேண்டும்.

Recommended For You

இப்படி ஆன்லைனில் தங்கம் வாங்கும் போது அதனை விற்கும் நிறுவனம், அது நம்பகமான நிறுவனமா என்பதை கவனிக்க வேண்டும். முடிந்த வரை நம்பகமான நிறுவனத்தின் தங்க நாணயங்களை வாங்குவது மட்டுமே நல்லது. ஹால்மார்க் கொண்ட நாணயமா என்பதையும் சரிபார்க்க வேண்டும்.

தங்கம் போன்ற விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் முன், அந்த செயலில் அந்த பொருளுக்கான Return and replacement policy என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் தங்க நாணயத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதனை திரும்ப அனுப்ப முடியுமா ரீஃபண்ட் கிடைக்குமா என்பதை தெரிந்து கொள்வது நல்லது.டெலிவரியின் போது தங்க நாணயத்தில் உள்ள தங்கத்தின் தூய்மை தன்மை, ஜிஎஸ்டி உள்ளிட்ட விவரங்கள் கொண்ட ரசீதும் அத்துடன் இடம்பெறுள்ளதா என்பதை சரிபார்ப்பதும் அவசியம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+