தங்கம் விலை குறையுதேனு நகை வாங்க கடைக்கு போறீங்களா? இதெல்லாம் கவனிக்கலனா ஏமாந்து போவீங்க..!!

தீபாவளி நாள் மங்களகரமானதாகவும், அதிர்ஷ்டத்தை தருவதாகவும் நம்பப்படுகிறது. இதனால் தான் தீபாவளியின் போது தங்கம் வாங்குவது வாழ்வில் வளத்தை பெருக்கும் என இந்தியர்கள் நம்புகின்றனர். இந்த ஆண்டு தங்கம் விலையும் குறைந்து சிறப்பை தேடி தந்துள்ளது.

தங்க நகைக்கடைகளும் வாடிக்கையாளர்களை ஈர்க்க தங்கம் விற்பனையில் பலவிதமான தள்ளுபடிகளை அறிவித்துள்ளன. தங்கம் விலை குறைந்திருப்பதால் மீண்டும் உயர்வதற்குள் வாங்கி விடலாம் என மக்களும் கடைகளுக்கு படை எடுக்கின்றனர். அந்த வகையில் தங்கம் வாங்க கடைக்கு செல்லும் மக்கள் சில விஷயங்களை கட்டாயம் பார்க்க வேண்டும். இல்லை என்றால் போலி நகை வாங்கி ஏமாந்து போக நேரிடலாம்.

தங்கம் விலை குறையுதேனு நகை வாங்க கடைக்கு போறீங்களா? இதெல்லாம் கவனிக்கலனா ஏமாந்து போவீங்க..!!

விலை: சர்வதேச சந்தை நிலவரங்கள், அரசு வரிகள், ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை தினமும் மாறுகிறது. எனவே கடைக்கு செல்வதற்கு முன்பே அன்றைய தங்கத்தின் நிலவர விலையை தெரிந்து கொள்வது நல்லது. அதன்படி நீங்கள் எவ்வளவு தங்கம் வாங்கலாம் என முடிவு செய்து கொண்டு கடைக்கு செல்லுங்கள்.

தங்கத்தின் தூய்மை : தங்கம் வாங்கும் போது முதன்மையாக சரிபார்க்க வேண்டியது அதன் தூய்மை தான். பெரும்பான்மையான நகைகள் 22 கேரட், 18 கேரட் அல்லது 14 கேரட் தூய்மையில் தான் விற்கப்படுகின்றன. எனவே அதனை சரிபார்த்து, அத்துடன் பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்பதை பார்க்கவும். அத்துடன் நகையில் HUID எண் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த எண்ணை BIS Care செயலியில் சரிபார்த்து, விற்பனையாளர் கூறும் தூய்மை சரியா என்பதை நீங்களே உறுதிப்படுத்தி கொள்ளலாம்.

Also Read

நகையின் எடை: நகையின் எடையை பொறுத்தே அதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, நகைக்கடைக்காரரிடம் உங்கள் கண் முன்பே எடையை போட்டு காட்ட சொல்லுங்கள். குறிப்பாக அதில் தங்கம் எவ்வளவு, கற்கள் இருந்தால் அதன் மதிப்பு மற்றும் எடை ஆகியவற்றையும் தெளிவாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

செய்கூலி, சேதாரம்: தங்க நகைகளின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு செலவுக்காக செய்கூலி மற்றும் சேதார கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தங்கத்தின் விலையில் ஒரு குறிப்பிட்ட சதவீதமாகவோ அல்லது கிராமிற்கு ஒரு குறிப்பிட்ட நிலையான தொகையாகவோ இருக்கலாம். சில கடைகளில் வடிவமைப்புக்கு ஏற்ப சேதார கட்டணமும் சேர்க்கப்படும். எனவே செய்கூலி மற்றும் சேதாரத்திற்கான கட்டணங்களை தனித்தனியாக பிரித்து கூறும்படி கேளுங்கள்.

ரசீது: தங்கம் வாங்கும் போது மறக்காமல் ரசீதை வாங்க வேண்டும். அந்த ரசீதில் நகையின் மொத்த எடை மற்றும் சுத்தமான தங்கத்தின் எடை இரண்டும் தனித்தனியாக குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். குறிப்பாக, வைரம் அல்லது நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட நகைகளை வாங்கும் போது கற்களின் எடையும் தங்கத்தின் எடையும் குழப்பாமல் இருக்க இது மிகவும் முக்கியம்.

Recommended For You

எக்ஸ்சேஞ்ச்: நீங்கள் வாங்கிய தங்க நகையை மாற்றவோ அல்லது விற்கவோ நேரிட்டால், சம்பந்தப்பட்ட நகைக்கடையின் எக்ஸ்சேஞ்ச் கொள்கை என்ன என்பதை முன்கூட்டியே தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

பழைய தங்கம்: பழைய தங்கத்தை மாற்றும் போது அது எப்படி எடுத்து கொள்ளப்படும் என கேட்டு வைத்து கொள்வது நல்லது. கற்களுக்கான கட்டண கழிவு, செய்கூலி கழிவு போன்றவை மாறுபடும். எனவே தற்போதைய விலையில்தான் நகை திரும்ப பெறப்படுகிறதா எவ்வளவு கழிக்கப்படுகிறது ஆகியவற்றை தெளிவாக கேட்க வேண்டும்.

தங்கம் வாங்குவது மட்டுமே உங்கள் நோக்கமாகவும், அது முழுக்க முழுக்க ஒரு முதலீடாக இருந்தால், நகைகளுக்கு பதிலாக தங்க நாணயங்கள், கட்டிகள் வாங்கலாம். நகைகளை வாங்கும் போது செய்கூலி போன்ற கூடுதல் செலவுகள் அதிகம் இருப்பதால், அவற்றை விற்கும் போது அந்த முழு தொகையும் திரும்ப கிடைக்காமல் போகலாம். எனவே, நீங்கள் அணிவதற்காக வாங்குகிறீர்கள் என்றால் நகைகளை தேர்ந்தெடுக்கலாம்; மாறாக முதலீடு, பரிசு நோக்கம் என்றால் நாணயம், கட்டிகளுக்கு செல்லலாம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+