வாழ்க்கையில் ஒரு முறையாவது நாமும் கோடீஸ்வரர் ஆக மாட்டோமா? என்று நினைக்காதவர்கள் யாருமில்லை. ஆனால் கோடீஸ்வரர் ஆவது என்பது ஏதோ ஒரு அதிர்ஷ்டத்திலோ அல்லது லாட்டரியிலோ நடக்கும் விஷயம் அல்ல. நாம் இன்று எடுக்கும் ஒரு ஒழுக்கமான முதலீட்டு முடிவில் தான் இருக்கிறது.
ஒவ்வொரு நடுத்தர குடும்பத்தினரின் கனவும் ஒரு பாதுகாப்பான எதிர்காலம் தான். அந்த பாதுகாப்பை உறுதி செய்ய இன்று நீங்கள் எடுக்கும் ஒரு துணிச்சலான முடிவு, உங்கள் குடும்பத்தின் தலைமுறையையே மாற்றக் கூடும். ஆக மாதம் 95,000 ரூபாய் என்பதை வெறும் தொகையாக பார்க்காமல், உங்கள் கடின உழைப்பின் பலனாக பாருங்கள். அதை சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு திட்டமிட்டு முதலீடு செய்தால், 5 கோடி ரூபாய் இலக்கு சாத்தியமான ஒன்றுதான். இது வெறும் எண்கள் மட்டுமல்ல. இது உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை, கல்வி, திருமணம், எதிர்காலம். ஏன் உங்கள் கனவு இல்லத்தின் அஸ்திவாரமாக கூட இருக்கலாம். ஆக பொறுமையும், சீரான முதலீடும் இருந்தால் கோடீஸ்வரர் கனவு என்பது அருகில் தான்.

பொதுவாக நீண்ட கால இலக்குகளை அடையவும், நிம்மதியான ஓய்வை எட்டவும் எஸ் ஐ பி(SIP)-க்களில் முதலீடு செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது. பலரும் நினைக்கலாம் நான் வாங்கும் சம்பளமே 25,000 - 30,000 ரூபாய் தான். அப்படியிருக்கையில் எப்படி 95,000 ரூபாய் எப்படி சாத்தியம் என நினைக்கலாம். உங்கள் இலக்கு என்ன, உங்களுடைய ரிஸ்க் எடுக்கும் திறன் என்ன, உங்களால் எவ்வளவு முதலீடு செய்ய முடியும் என அனைத்தையும் கணக்கில் கொண்டு, சரியான ஆலோசனையுடன் திட்டமிட்டு முதலீடு செய்தல் நல்லது. எப்படி இருப்பினும் கட்டாயம் முதலீடு என்பதை செய்ய வேண்டும். இதுவே பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்யும்.
@ விவசாயிகளுக்கு ஹோலி கிப்ட்: ரூ. 2,000 ரெடி! 22-வது தவணை எப்போது தெரியுமா?
சமீபத்தில் ஆங்கில செய்தித் தளம் ஒன்றில், பங்கஜ் என்ற முதலீட்டாளர் ஒருவர் தான் மொத்தம் 95,000 ரூபாய் எஸ் ஐ பி முதலீட்டை செய்து வருவாதாகவும், ஏற்கனவே மியூச்சுவல் ஃபண்டில் 30 லட்சம் ரூபாய் கார்ப்பஸும் உள்ளதாக தெரிவித்துள்ளார். அவருடைய இலக்கு அடுத்த 15 ஆண்டுகளில் 5 கோடி ரூபாய் திரட்டுவது தான். அவருடைய போர்ட்ஃபோலியோவில் மொத்தம் மனைவியுடைய கணக்கிலும் சேர்த்து 16 மியூச்சுவல் திட்டங்கள் உள்ளதாகவும் கூறியிருந்தார். அது என்னென்ன திட்டங்கள் என தெரியாவிட்டாலும், நீண்ட கால முதலீடு என்பதால் ஈக்விட்டி சார்ந்த முதலீடுகளில் அதிக கவனம் இருக்கலாம்.
தற்போதைய 30 லட்சம் ரூபாய் மற்றும் மாதம் 95,000 ரூபாய் முதலீடு, சராசரியாக ஆண்டுக்கு 12% வளர்ச்சியை பதிவு செய்தால், அடுத்த 15 ஆண்டுகளில் அவரால் 6 கோடி ரூபாய் கார்ப்பஸ்-ஐ எட்ட முடியும். இதன் மூலம் அவரின் 5 கோடி ரூபாய் இலக்கையும் தாண்டி கூடுதலாகவே பெற முடியும்.
இதனிடையே 16 ஃபண்டுகள் இருப்பது போர்ட்ஃபோலியோவில் சற்று அதிகம். அதோடு ஒரே துறையை சார்ந்த ஃபண்டுகள் இருக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. இருப்பினும், அதிக எண்ணிக்கையிலான ஃபண்டுகள் இருப்பது எப்போதும் தவறல்ல. உதாரணமாக மிட்கேப் பிரிவில் 'ஃபோகஸ்டு ஃபண்ட் மற்றும் டைவர்சிஃபைட் ஃபண்டு என வெவ்வேறு பாணிகளை கொண்ட ஃபண்டுகளை வைத்திருந்தால், சந்தை மாற்றங்களின் போது அவை கை கொடுக்கும். உங்கள் போர்ட்ஃபோலியோவில் உள்ள ஃபண்டுகள் டைவர்சிஃபைட் பாணியில் இருக்கிறதா அல்லது ஒரே துறையைச் சார்ந்ததாக இருக்கிறதா என்பதைச் சரிபார்த்து கொள்ளுங்கள்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!



Click it and Unblock the Notifications