தினமும் ரூ.10 போதும்! டீ குடிக்கிற செலவுல லட்சாதிபதி ஆகலாம் – எதிர்காலத்திற்கான மைக்ரோ SIP மேஜிக்!

நம்மில் பலரும் முதலீடு என்றாலே ஆயிரக்கணக்கில் அல்லது லட்சக்கணக்கில் கையில் காசு இருக்க வேண்டும். அப்போது தான் முதலீடு செய்ய முடியும் என நினைக்கிறோம். ஆனால் அது நிஜமல்ல. நாம் சாதாரணமாக செய்யும் 10 ரூபாய் செலவு கூட, உங்களை ஒரு பெரிய லட்சாதிபதியாகும் பாதைக்கு அழைத்து செல்லலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

ஒரு நாளைக்கு ஒரு முறை டீ குடிக்கும் செலவு அல்லது மொபைல் டேட்டாவுக்கு செய்யும் செலவை விட, குறைந்த தொகை இருந்தால் கூட போதுமானது. அப்படி மிச்சம் பிடித்தாலே மைக்ரோ எஸ்ஐபி (Micro SIP) மூலம் முறையாக முதலீடு செய்யலாம். அப்படி செய்தால் அது காலப்போக்கில் மிகப்பெரிய கார்ப்பஸ் ஆகவும் வளர்ந்து நிற்கும். சிறு துளி பெருவெள்ளம் என்பார்கள். அந்த பழமொழிக்கு உயிர் கொடுக்கும் இந்த முதலீட்டு திட்டம், உங்கள் ஓய்வு காலத்திற்கு மிக பயனுள்ள ஒன்றாக இருக்கும். வாருங்கள் இது குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்.

தினமும் ரூ.10 போதும்! டீ குடிக்கிற செலவுல லட்சாதிபதி ஆகலாம் – எதிர்காலத்திற்கான மைக்ரோ SIP மேஜிக்!

செல்வம் சேர்ப்பதற்கு எப்போதும் பெரிய அளவிலான பணம் தேவைப்படுவதில்லை. மாணவர்கள், கிக் தொழிலாளர்கள் மற்றும் தினசரி கூலி வேலை செய்பவர்கள் உள்ளிட்ட பல சிறு முதலீட்டாளர்களுக்கு, ஒவ்வொரு நாளும் ஒரு சில ரூபாய்களை சேமிப்பது கூட காலப்போக்கில் ஒரு அர்த்தமுள்ள நிதி பாதுகாப்பை உருவாக்கிறார்கள். இங்குதான் மைக்ரோ எஸ்.ஐ.பி (Micro SIP) அல்லது குறைந்த மதிப்புள்ள முறையான முதலீட்டு திட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. பொதுவாக அதிக தொகையை செலுத்தும் வழக்கமான எஸ்ஐபி -க்கள் போலல்லாமல், மைக்ரோ எஸ்ஐபி -கள் மாதத்திற்கு வெறும் 50 ரூபாய் அல்லது 100 ரூபாய் என்ற மிகக் குறைந்த தொகையில் இருந்து முதலீடு செய்ய அனுமதிக்கின்றன.

இந்த தொகைகள் பார்ப்பதற்கு சிறியதாக தோன்றினாலும், நீண்ட கால அடிப்படையில் கிடைக்கும் கூட்டு வட்டியின் வலிமை மற்றும் தொடர்ச்சியாக சேமிக்கும் ஒழுக்கம் ஆகியவற்றில் தான் இதன் உண்மையான லாபம் ஒளிந்திருக்கிறது. சிறிய தொகைகளை தினமும் அல்லது மாதந்தோறும் முதலீடு செய்வது ஒரு வலுவான சேமிப்பு பழக்கத்தை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், நீண்ட காலத்திற்குப் பிறகு குறிப்பிடத்தக்க வருமானத்தையும் ஈட்டித் தரும்.
ரியல் எஸ்டேட் முதலீடு நிஜமாகவே லாபமா? வாடகை வருமானத்தில் ஒளிந்திருக்கும் சவால்கள் என்ன?
மைக்ரோ எஸ்ஐபி வழக்கமான முதலீட்டு திட்டத்தின் சிறிய வடிவம் தான். அதாவது இதில் மாதம் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. மாறாக 10 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய் என முடிந்ததை செய்யலாம். அதை உங்கள் வசதிக்கு ஏற்ப தினசரி, வாராந்திர அல்லது மாதம் என எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். ஆக இது சாமானியர்களுக்கு மிக பயனுள்ள வகையில் இருக்கும். சொல்லபோனால் சாமானியர்களும் நிதி சந்தையில் நுழைய இது உதவிகரமாக இருக்கும். இதுபோன்ற திட்டங்கள் எதிர்காலத்தில் சிறந்ததொரு முதலீட்டு ஒழுக்கத்தை எதிர்காலத்தில் வளர்க்கும்.

தினசரி 10 ரூபாய் என்றால் கூட, 5 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்யப்படும் போது உங்கள் முதலீடு 25,000 ரூபாய்க்கு அதிகமாக வளரும். அதுவே 20 ரூபாய் எனும்போது 5 ஆண்டுகளில் 50,000 ரூபாயாக வளரும். இதே 50 ரூபாய் எனில் 1.25 லட்சம் ரூபாய்க்கு மேலாக கார்ப்பஸ் நிதியை உருவாக்கும். இந்த திட்டங்கள் உங்களை ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆக மாற்றாது. ஆனால் ஒரு வலுவான நிதி ஒழுக்கத்தை வளர்க்கும். இதுவே நீண்ட கால செல்வம் ஈட்ட உதவும். ஆக நிலையான வருமானம் இல்லாதவர்களுக்கும், குறைந்த வருமானம் உடையவர்களுக்கும் மைக்ரோ எஸ்ஐபி ஒரு நல்ல ஆப்ஷன்.

மாணவர்கள், தினசரி கூலி தொழிலாளர்கள், பெண்கள், கிக் தொழிலாளர்கள் என அனைவரும் இதை செய்ய முடியும். தொகை சிறியதாக இருந்தாலும், இதில் கூட்டு வட்டியின் பலனை பெற முடியும். ஆக எவ்வளவு சீக்கிரம் தொடங்குகிறோமோ, அவ்வளவு விரைவில் உங்கள் பணம் வளர தொடங்கும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+