18 கேரட் தங்கத்தை அடகு வைத்து நகை கடன் வாங்க முடியுமா? விரிவான வழிகாட்டி..!!

கோடிக்கணக்கான இந்திய குடும்பங்கள் தங்களுக்கு ஒரு அவசர நிதி தேவை வருகிறது என்றால் உடனடியாக கையில் எடுக்க கூடிய ஆயுதம் தங்கம் தான். வீட்டில் இருக்கும் தங்கத்தை அடகு வைத்து அரை மணி நேரத்திற்குள்ளாகவே பணமாக மாற்றிக்கொள்ள முடிகிறது. இதனால் தான் சாமானிய மக்கள் எப்போதுமே தங்கள் கையில் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் சேர்ந்தால் அதற்கு தங்கத்தை வாங்கி வைத்து விடுவார்கள்.

ஒரு தொழில் தொடங்குவதற்கு , அவசர மருத்துவ செலவுகளுக்கு என திடீர் பணத் தேவையை உடனடியாக பூர்த்தி செய்யக் கூடிய ஒரே சொத்து தங்கமாக தான் இருக்கிறது. தங்கம் விலை கடந்த ஆண்டு இறுதியில் இருந்து தாறுமாறாக ஏறிவிட்டது. பெரும்பாலும் 24 கேரட் தங்கத்தில் நமக்கு நகை கிடைக்காது தங்க கட்டிகள் ,தங்க நாணயங்கள் வாங்கலாம். நகையாக , ஆபரணமாக நாம் வாங்கி அணிய கூடியது 22 கேரட் தங்கமாக இருக்கிறது.

18 கேரட் தங்கத்தை அடகு வைத்து நகை கடன் வாங்க முடியுமா? விரிவான வழிகாட்டி..!!

22 கேரட் தங்கம் இன்றைய விலைக்கு ஒரு சவரன் தங்க நகை வாங்க வேண்டும் என்றால் சராசரியாக 1.22 லட்சம் ரூபாயை நாம் கொடுக்க வேண்டும் ரூபாய். இந்த தொகை பெரும்பாலான மக்களின் மூன்று மாத சம்பளமாக இருக்கிறது. எனவே தான் தற்போது இந்திய சந்தையில் தங்கத்தின் அளவு குறைவாக இருக்கக்கூடிய 18 கேரட் தங்கம் பிரபலம் ஆகி வருகிறது. இதில் 75% தான் தங்கம் இருக்கும். இன்றைய விலை நிலவரத்திற்கு பார்க்கும் போது 18 கேரட் தங்கம் ஒரு சவரன் வாங்குவதற்கு நாம் 1 லட்சம் ரூபாய் கொடுத்தால் போதும்.

Also Read

22 கேரட் தங்கத்துடன் ஒப்பிடும்போது 18 கேரட் தங்க நகை வாங்கும் போது நமக்கு கிட்டத்தட்ட 22,000 ரூபாய் வரை பணம் மிச்சம் ஆகிறது. ஆனால் இவர் 18 கேரட் தங்க நகை வாங்கும் நபர்களுக்கு இருக்கக்கூடிய பெரிய சந்தேகமே இதனை நான் வங்கியில் அடகு வைத்து கடன் வாங்க முடியுமா என்பது தான். பெரும்பாலான இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் 18 கேரட் தங்க நகைகளுக்கும் கடன் வழங்குகின்றன.

18 கேரட் தங்கத்திற்கு நீங்கள் தாராளமாக நகை கடன் பெற முடியும். வங்கிகள் பொதுவாக 18 கேரட் முதல் 24 கேரட் வரையிலான தூய்மை கொண்ட தங்கத்தையே நகை கடனுக்காக ஏற்றுக்கொள்கின்றன. 18 கேரட்டிற்கு கீழ் உள்ள தங்கத்திற்கு கடன் வழங்கப்படுவது கிடையாது.

Recommended For You

தங்கத்தின் தூய்மை குறைய குறைய, அதன் மீதான கடன் தொகையும் மாறுபடும். 22 கேரட் தங்கத்துடன் ஒப்பிடும்போது, 18 கேரட் தங்கத்தின் மதிப்பு குறைவாக இருப்பதால், நீங்கள் பெறும் கடன் தொகையும் அதற்கேற்ப குறைவாகவே இருக்கும். 22 கேரட் தங்கம் ஒரு பவுனை அடகு வைத்தால் சராசரியாக 70,000 ரூபாய் கிடைத்தால், 18 கேரட் தங்கம் ஒரு பவுனுக்கு 50,000 ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

வங்கி அதிகாரிகள் உங்கள் நகையின் தூய்மையை சோதித்து நகையில் உள்ள கற்கள், மணிகள் அல்லது தேவையற்ற உலோகங்கள் நீக்கப்பட்டு, தங்கத்தின் நிகர எடை மட்டுமே கணக்கிட்டு கடன் தொகையை தீர்மானிப்பார்கள். எனவே 18 கேரட் தங்க நகைகளுக்கும் க்டன் கிடைக்கும். ஆனால் நீங்கள் 18 கேரட் தங்க நகை வாங்கும் போது ஹால்மார்க் முத்திரை கொண்டிருக்கிறதா என்பதை பரிசோதனை செய்வது அவசியம். இல்லை என்றால் போலி நகையாக ஏமாற வாய்ப்புள்ளது.

வங்கிகள், நிதி நிறுவனங்கள் 18 கேரட் தங்க நகைகளுக்கு கடன் கொடுப்பதால் மக்கள் தைரியமாக வாங்கலாம். எப்படி 22 கேரட் தங்கத்தை விட இதன் விலை குறைவாக இருக்கிறதோ அதே போல இதற்கு கிடைக்கும் கட்ன தொகையும் குறைவாக தான் இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+