2025ஆம் ஆண்டில் தான் தங்கம் விலை எக்கசக்கமாக உயர்ந்து சாமானிய மக்களுக்கு வாங்க முடியாத விலையை எட்டியது. டிசம்பரில் ஆபரண தங்கம் சவரன் 1 லட்சம் என்ற மைல்கல்லை எட்டியது. 2026ஆம் ஆண்டிலாவது தங்கத்தின் வேகம் தனியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2025ஐ விட 2026 இல் தான் தங்கத்தின் விலை இன்னும் பல மடங்கு வேகமாக உயர தொடங்கி இருக்கிறது.
சென்னையில் ஜனவரி 1ஆம் தேதி ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 12,440 ரூபாய். அதுவே ஜனவரி 25ஆம் தேதியான இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 14,750 ரூபாய். இந்த 25 நாட்களில் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 2310 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. அதாவது ஒரு சவரனுக்கு 18,480 ரூபாய் என விலை உயர்வு கண்டிருக்கிறது. ஜனவரி 1ஆம் தேதியன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 99,520 ரூபாய் அதுவே இன்றைய தினம் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 1,18,000 ரூபாய்.

இந்த 25 நாட்களிலேயே தங்கம் விலை ஒரு சவரனுக்கு 18,480 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. அதாவது 18.6% தங்கத்தின் விலை உயர்வு கண்டிருக்கிறது. 25 நாட்களில் தங்கம் விலை 18 சதவீதம் உயர்வு என்பது அதிர்ச்சி அடைய வைக்கிறது. இதுவே 2025ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் தங்கம் விலை ஒரு கிராம் 7,883 ரூபாய். இது 18% வரை விலை உயர ஏப்ரல் மாதம் வரை ஆனது. அதாவது 3 மாதங்கள் தேவைப்பட்டது.
கடந்த ஆண்டு 3 மாதங்களில் நடந்த மாற்றம் இந்த ஆண்டு 25 நாட்களிலேயே நடந்துவிட்டது. கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 3.5 மடங்கு வேகமாக தங்கத்தின் விலை என்பது உயர்ந்திருக்கிறது. தங்கத்தின் விலை குறையும் வாங்கிக் கொள்ளலாம் என காத்திருந்தவர்களுக்கு இது பெரிய அதிர்ச்சி தான்.
இந்த நிலையில் மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் இனிவரும் நாட்களில் தங்கம் விலை உயரும் என்ற கணிப்பை வெளியிட்டு இருக்கிறது. வெள்ளி விலை உச்சத்தை எட்டி விட்டது இனி அது ஓய்வுக்கு சென்று விடும் தங்கத்தின் விலை இனிமேல் தான் உயரப் போகிறது என குறிப்பிட்டு இருக்கிறது. கோல்டு மேன் சாக்ஸ் தரகு நிறுவனமும் இந்த ஆண்டுக்கான தங்களின் தங்கம் விலை கணிப்பை மாற்றி அமைத்து இருக்கிறது.
2026 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை சர்வதே சந்தையில் 5400 டாலர்களை எட்டும் என கணித்திருக்கிறது. இதற்கு முன்பு 4900 டாலர்கள் இருந்த அளவை 5400 டாலர்கள் என உயர்த்தி இருக்கிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 5000 டாலர்களை நெருங்கி விட்டது.
25 நாட்களிலேயே தங்கம் இவ்வளவு அதிகமாக விலை உயர்ந்ததற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம். குறிப்பாக டொனால்ட் டிரம்ப் வெனிசுலா நாட்டின் மீது திடீரென ராணுவ நடவடிக்கை எடுத்தார். இதனால் ஏற்பட்ட உலக அளவிலான பதற்றம் ஏற்பட்டு தங்கம் விலை உயர்ந்தது. ஈரான் நாட்டு நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக சண்டையிட தயார் என டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு மேலும் விலை உயர்வுக்கு வித்திட்டது.
அடுத்ததாக கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் கிரீன்லாந்தை கைப்பற்றும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஆதரவளிக்காத ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என புதிதாக ஒரு வரி மோதலை தொடங்கி வைத்தார். இந்த நடவடிக்கைகள் அனைத்துமே தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துவிட்டன.
தற்போது இந்த மூன்று விவகாரங்களுமே தணிந்துவிட்டன. இனிமேல் தங்கம் விலை குறையும் என பார்த்தால் வேறு காரணிகள் விலை உயர்வை ஏற்படுத்துகின்றன. அமெரிக்காவில் பொருளாதாரம் மந்தமாக இருப்பது, விலைவாசி உயர்ந்திருப்பது, வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பது இதன் காரணமாக மத்திய வங்கி வட்டியை குறைக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருப்பது. இவை அனைத்துமே மீண்டும் தங்கம் விலையை உயர்த்த செய்துள்ளன.இனி வரும் நாட்களில் டிரம்ப் எந்த ஒரு புவிசார் மோதல் மற்றும் வர்த்தக மோதலையும் கையில் எடுக்காமல் அமைதி காத்தார் என்றால் தங்கம் விலை குறையும். இல்லை என்றால் இந்த ஜெட் வேகத்தை யாராலும் குறைக்க முடியாது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

மதுரையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: தங்கம் விலை இனி குறையுமா? உயருமா?

மதுரையில் இன்று தங்கம் விலை எகிறியது! நகை வாங்க காத்திருந்தோர் ஷாக்!

தங்கம் விலை அதிரடி உயர்வு!! அட்சய திருதியைக்கு 5 நாட்களே இருக்கும் நிலையில் திடீர் விலை ஏற்றம்!!

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

கோவையில் இன்று தங்கம் விலை உயர்வு: இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications