டிஜிட்டல் மயமாகி வரும் உலகத்தில் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கையில் பணம் இல்லாத நேரத்தில் கிரெடிட்கார்டை பயன்படுத்தி தேவையான பொருட்களையோ அல்லது சேவைகளையோ வாங்கி கொள்ளலாம். கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கும்போது பல்வேறு சலுகைகள், பாயிண்டுகள் போன்றவை கிடைக்கும். இதனால் பலரும் கிரெடிட் கார்டை விரும்பி பயன்படுத்துகின்றனர். இருப்பினும், கடந்த பிப்ரவரி மாதத்தில் கிரெடிட் செலவினம் 9 சதவீதம் குறைந்துள்ளது.
பொதுவாக நிதியாண்டின் இறுதி கட்டத்தில், தனிநபர்கள் வரி வசூல் மற்றும் முதலீட்டு திட்டமிடலில் கவனம் செலுத்துவதால் பிப்ரவரி மாதத்தில் பொதுவாக விருப்ப செலவுகள் குறைவாக இருக்கும். மேலும் முக்கிய பண்டிகைகள் முடிந்து விட்டால் ஹோலி பண்டிகை வரை செலவின முறைகள் பொதுவாக குறைவாகவே இருக்கும். அதனால் கடந்த பிப்ரவரியில கிரெடிட் கார்டு செலவினம் குறைந்திருப்பது ஒரு சீசன் நிகழ்வுதான் என்று கூறப்படுகிறது. ஆசிட் சி மேத்தா முதலீட்டு இன்டர்மேடியட்ஸ் லிமிடெட் வழங்கிய தரவுகளின்படி, 2025 பிப்ரவரி மாதத்தில் கிரெடிட் கார்டு பயன்படுத்தி செலவிப்பது 9 சதவீதம் குறைந்து ரூ.167.20 கோடியாக இருந்தது.

அதேசமயம் 2024 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் கிரெடிட் கார்டு செலவினம் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரியில் மொத்த கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளி்ன் எண்ணிக்கையை முந்தைய ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 8 சதவீதம் குறைந்துள்ளது. அதேசமயம் 2024 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பரிவர்த்தனைகள் 27 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
2025 பிப்ரவரி மாதத்தில் கிரெடிட் வாயிலான ஒரு பரிவர்த்தனைக்கான சராசரி செலவினம் ரூ.4,219ஆக குறைந்துள்ளது. இது முந்தைய ஜனவரி மாதத்தில் ரூ.4,282ஆக இருந்தது. மொத்த பரிவர்த்தனைகள் மற்றும் சராசரி செலவினம் குறைந்திருப்பது, கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறையை கடைப்பிடிப்பதை பிரதிபலிக்கிறது.
கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி, நம் நாட்டில் 10.90 கோடி கிரெடிட் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. இது முந்தைய ஜனவரி மாதத்தை காட்டிலும் 0.4 சதவீதம் அதிகமாகும். கிரெடிட் கார்டு சந்தையில் எச்டிஎஃப்சி வங்கி மற்றும் எஸ்பிஐ ஆகியவை ஆதிக்கம் செலுத்துகின்றன. மொத்த கிரெடிட் கார்டுகளின எண்ணிக்கை அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதத்தில், எச்டிஎஃப்சி வங்கி மற்றும் எஸ்பிஐ ஆகியவற்றின் சந்தை பங்களிப்பு 0.10 சதவீதம் உயர்ந்து முறையே 21.6 சதவீதம் மற்றும் 18.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் சந்தை பங்கு 16.6 சதவீதமாக இருந்தது. ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டு சந்தை பங்கு 0.10 சதவீதம் குறைந்து 13.5 சதவீதமாக சரிவடைந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications