வருமான வரித்துறை அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. வங்கிகள், தரகு நிறுவனங்கள் மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்களில் குறிப்பிட்ட வரம்புகளுக்கு மேல் யாரும் ரொக்க பரிவர்த்தனை செய்தால் அது குறித்த விவரங்களை அவர்கள் வருமான வரித்துறையிடம் தகவல தெரிவிக்க வேண்டும். எனவே நீங்கள் முறையான அறிக்கையிடல் இல்லாமல் இந்த பரிவர்ததனைகளில் ஏதேனும் ஒன்றை செய்தாலும் வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வரலாம்.
பிக்சட் டெபாசிட்
நீங்கள் ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்துக்கு மேல் பிக்சட் டெபாசிட் செய்தால் வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம். அதனை ஒரே முறையாகவோ அல்லது பல கட்டங்களாக டெபாசிட் செய்து இருந்தாலும் நோட்டீஸ் வரலாம். வருமான வரித்துறை நிதியின் ஆதாரம் குறித்து விசாரிக்கலாம். ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட ரொக்க டெபாசிட் தொகை குறித்த விவரங்களை மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் வங்கிகள் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

சேமிப்பு கணக்கு
ஒரு நிதியாண்டிற்குள் சேமிப்பு கணக்குகளில் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்யும் தனிநபர்கள் குறித்த விவரங்களை தங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஒரு வங்கி அல்லது கூட்டுறவு வங்கியில் ஒருவர் வைத்திருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளுக்கும் இது பொருந்தும். ஆகையால் உங்கள் வைப்புத்தொகை வரம்பை மீறினால் நிதியின் ஆதாரத்தை கேட்டு வருமான வரித்துறையின் நோட்டீஸ் உங்கள் வீடு தேடி வரலாம்.
சொத்து
ரூ.30 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள சொத்தை வாங்கியவர் மற்றும் விற்பனை செய்தவர் குறித்த விவரங்களை சார் பதிவாளர் வருமான வரித்துறையிடம் தெரிவிக்க வேண்டும். அதனால் நீங்கள் ரூ.30 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மதிப்பில் சொத்துக்களை வாங்கியிருந்தால், அதற்கான நிதி ஆதாரம் மற்றும் பிற நிதி ஆதாரங்களை வருமான வரித்துறை விசாரிக்கலாம்.
பங்கு,மியூச்சுவல் பண்டுகள்
தனிநபர் ஒருவர் ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள பங்குகள், மியூச்சுவல் பண்டுகள், கடன் பத்திரங்கள் அல்லது பத்திரங்களை வாங்கினால் அது நிதி நிறுவனங்களால் அடையாளம் காணப்படும். அத்தகைய பரிவர்த்தனைகள் நடந்தால் அந்தந்த நிறுவனங்கள் அல்லது ஏஜென்சிகள் அது குறித்த விவரங்களை வருமான வரித்துறையிடம் தெரிவிக்க வேண்டும். ஏதேனும் முரண்பாடுகள் அல்லது சரிபார்க்கப்படாத நிதி ஆதாரங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட தனிநபருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பும்.
கிரெடிட் கார்டு
நீங்கள் ஒரே நேரத்தில் ரூ.1 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக கிரெடிட் கார்டு பில்லை செலுத்தினால், உங்களுக்கு நோட்டீஸ் வரலாம். மேலும், ஒரு நிதியாண்டில் மொத்த கிரெடிட் கார்டு பில் செலுத்துதல் ரூ.10 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக இருந்தால் நிதி ஆதாரம் குறித்து வருமான வரித்துறை விளக்கம் கேட்கலாம். அத்தகைய பரிவர்த்தனைகள் உங்கள் வருமான வரி வருமானத்தில் தெரிவிக்கப்பட வேண்டும்.
அடிக்கடி பரிவர்ததனை
உங்கள் வங்கி கணக்கிலிருந்து நீங்கள் அடிக்கடி பெரிய அளவில் பணம் எடுப்பதும், டெபாசிட் செய்வதும் வருமான வரித்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடும். வருமான வரித்துறையின் கண்காணிப்பை தவிர்க்க விரும்பினால், பெரிய அளவிலான பரிவர்த்தனை செய்யும் தனிநபர்கள் தங்களது நிதியின் மூலத்தையும் பயன்பாட்டையும் நியாயப்படுத்த தயாராக இருக்க வேண்டும்.
வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புவதை தவிர்க்க, அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளும் ஆவணப்படுத்தப்பட்டு சரியான முறையில் தாக்கல் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். டிஜிட்டல் கட்டண முறைகளை பயன்படுத்துவதும் சரியான நிதி பதிவுகளை பராமரிப்பதும் தேவையற்ற வரி நோட்டீஸ்களை தவிர்க்க உதவும்.
Story written by: Subramanian
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications