முதலீட்டு ஜாம்பவான் வாரன் பஃபெட் தங்கத்தில் முதலீடு செய்யாமல் தவிர்ப்பது ஏன்?

உலகம் முழுவதுமே பாதுகாப்பான முதலீடு தங்கம் தான் என்ற மனநிலை இருக்கிறது. இதுதான் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதற்கும் காரணமாக அமைகிறது. 2025ஆம் ஆண்டில் மட்டும் தங்கம் விலை 25% க்கும் மேல் உயர்வு கண்டிருக்கிறது. முதலீட்டாளர்கள் பலரும் தங்கத்தை நோக்கி வருகின்றனர்.

வாரன் பஃபெட்: உலக முதலீட்டாளர்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக விளங்கக்கூடியவரும் முதலீட்டு ஜாம்பவானுமான வாரன் பஃபெட் தங்கத்தில் முதலீடு செய்ததே இல்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. தன்னுடைய முதலீட்டு திறன் மூலமாக மட்டுமே பல லட்சம் கோடிகளுக்கு அதிபதியாக இருக்கிறார் வாரன் பஃபெட், உலக பணக்காரர்கள் பட்டியலும் இடம் பிடித்திருக்கிறார் .சரியான நிறுவனங்களை தேர்ந்தெடுத்து அதில் முதலீடு செய்வதில் வாரன் பஃபெட் வல்லவர்.

முதலீட்டு ஜாம்பவான் வாரன் பஃபெட் தங்கத்தில் முதலீடு செய்யாமல் தவிர்ப்பது ஏன்?

தங்கத்தில் முதலீடு இல்லை: தற்போது இவர் 140 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 12 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியாக இருக்கிறார் . இவ்வளவு பெரிய தொகையை வைத்திருந்தாலும் அவர் தங்கத்தில் முதலீடு செய்யவில்லை என்பதுதான் பெரிய அதிசயமாக இருக்கிறது. அவர் எப்பொழுதுமே தங்கத்தில் முதலீடு செய்ய மாட்டார் தன்னுடைய முதலீட்டு உத்தியோடு தங்கம் ஒத்துப் போகவில்லை என தொடர்ச்சியாக அவர் கூறி வருகிறார்.

ஏன் தங்கத்தில் முதலீடு இல்லை: இவர் ஒரு காலத்தில் பாரிகோல்ட் என்ற தங்க சுரங்க நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தார் ஆனால் ஆறு மாதத்திலேயே அந்த முதலீட்டில் இருந்து வெளியேறி விட்டார். இவர் ஏன் தங்கத்தில் முதலீடு செய்வதில்லை என்ற கேள்வி எழுந்த நிலையில் அவரே அதற்கு பதிலும் தந்திருக்கிறார். 2011 ஆம் ஆண்டு தன்னுடைய நிறுவன பங்குதாரர்களுக்கு வாரன் பஃபெட் எழுதிய கடிதத்தில் தங்கம் ஒரு வளர்ச்சி அடையாத சொத்து எனக் கூறியுள்ளார்.

முதலீட்டு ஜாம்பவான் வாரன் பஃபெட் தங்கத்தில் முதலீடு செய்யாமல் தவிர்ப்பது ஏன்?

காரணம் என்ன: தங்கத்தை நாம் அதிகம் பயன்படுத்தவும் முடியாது, அது பெருகக் கூடிய ஒரு பொருளும் கிடையாது தங்கத்தை நாம் நகைகளாக பயன்படுத்துகிறோம் சில தொழில் துறையில் பயன்படுத்துகிறோம் அதைத் தாண்டி வேறு எதற்காக அதை பயன்படுத்துகிறோமா என கேள்வி எழுப்பி இருக்கிறார். நாம் செய்யக்கூடிய முதலீடு வளர்ச்சி அடையக்கூடிய ஒரு முதலீடாக இருக்க வேண்டும் என கூறுகிறார்.

தங்கம் பெருகுமா?: விவசாயத்தில் முதலீடு செய்யலாம் ஏனெனில் அதில் நாம் உணவு உற்பத்தி செய்கிறோம் , அதில் ஒரு விஷயம் பெருகுகிறது உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு தொழிலில் முதலீடு செய்கிறோம் அந்த தொழில் வளர்ச்சி அடையும் மக்கள் அதனை அன்றாடம் பயன்படுத்துவார்கள். ஆனால் தங்கம் அப்படியே தான் இருக்கும் என்பதையே அவர் தன்னுடைய வாதமாக முன்வைக்கிறார். நீங்கள் 2010இல் ஒரு கிராம் தங்கம் வாங்கி வைத்திருந்தால் இப்போதும் அது ஒரு கிராம் என்ற அளவில் தானே இருக்கும் என கூறுகிறார்.

தங்கத்தின் வளர்ச்சி: அமெரிக்க சந்தையை பார்க்கும் போது 2011 ஆம் ஆண்டு ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1750 டாலராக இருந்தது தற்போது 3350 டாலர் என உயர்ந்திருக்கிறது. இந்த 14 ஆண்டுகளில் தங்கத்தின் விலை இவ்வளவு உயர்ந்திருக்கிறது ஆனால் சிஏஜிஆர் எனப்படும் ஆண்டு காம்பவுண்டிங் வளர்ச்சி விகிதத்தை பார்த்தால் தங்கத்தின் வளர்ச்சி 5 சதவீதமாக தான் இருக்கிறது. அதுவே அமெரிக்க பங்குச்சந்தை 14 சதவீத வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

5 ஆண்டுகளில் 90% உயர்வு: அப்படி என்றால் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் லாபம் பார்க்கவில்லையா என்ற கேள்வி எழலாம் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் பெரிய லாபம் பார்த்திருக்கிறார்கள் ஆனால் உண்மையில் தங்கத்தின் விலை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தேங்கி நின்று அதன் பிறகு தான் உயர்ந்திருக்கிறது என கூறுகிறார். 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு தான் உலக அளவில் தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 90% தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது .

அச்சம் தான் காரணமா: தங்கத்தின் விலை உயர்வதற்கு அச்சம் மட்டுமே காரணமே எனக் கூறுகிறார் வாரன் பஃபெட் . நாம் செய்யும் முதலீடு வளர்ச்சி அடைய கூடிய மற்றும் உற்பத்தி திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதே இவரது கோல்டன் ரூல். ஆனால் இது சாமானிய மக்களுக்கு பொருந்துமா என்பது தான் கேள்வி. இந்தியா போன்ற நாட்டில் தங்கம் விலை மதிக்க முடியாத மற்றும் கவுரவத்தை வழங்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. எனவே முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை மொத்தமாக தங்கத்தில் போடாமல் 10% தங்கத்திலும் மீதமுள்ளவற்றை பங்குச்சந்தை, பத்திரம் என பிரித்தும் முதலீடு செய்யலாம் என நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+