ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

இந்திய குடும்பங்களுக்கும் தங்கத்திற்கும் இடையிலான உறவு நகமும் சதையும் போன்றது. காலா காலமாகவே கையில் பணம் சேர்ந்தாலே இந்தியர்கள் முதலில் அதை தங்கமாக தான் வாங்கி வைப்பார்கள். கடந்த 30 ஆண்டுகளில் தான் இந்தியாவில் தங்கம் மற்றும் நிலம் ஆகியவற்றைத் தாண்டி பங்குச்சந்தை முதலீடுகள் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் உள்ளிட்டவை பிரபலமாகி வருகின்றன.

இன்றும் கூட பெரும்பாலான இந்தியர்கள் தங்கத்தில் செய்யும் முதலீடு தான் லாபம் தரும் என்பதை நம்புகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நம்பிக்கை அவர்களுக்கு பெருமளவு லாபத்தையும் ஈட்டி தந்தது. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் சில்லறை விற்பனையிலேயே 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் விலை 1,34,000 ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டது. அதிலிருந்து தற்போது பெருமளவில் விலை சரிந்திருக்கிறது. 1,11000 ரூபாயிலிருந்து 1,20,000 ரூபாய் வரை விலை ஏறுவதும் இறங்குவது காணப்படுகிறது.

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

இருந்தாலும் 1 சவரன் நகை வாங்க 1.30 லட்சம் ரூபாய் வரை நாம் செலவிட வேண்டியுள்ளது. பல்வேறு சாமானிய மக்களுக்கும் , முதன்முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு இது ஒரு பெரிய தொகை. இருந்தாலும் நான் தங்கம் வாங்க வேண்டும் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் குறைந்த தொகை தான் என்னிடம் இருக்கிறது அதற்குள் என்னால் தங்கம் வாங்க முடியுமா என்பவர்களுக்கான ஒரு மாற்று வாய்ப்பாக தான் டிஜிட்டல் கோல்டு மற்றும் கோல்ட் ஈடிஎஃப் ஆகிய முதலீடுகள் இருக்கின்றன.

Also Read

இந்த இரண்டு திட்டங்களிலும் நீங்கள் குறைந்தபட்ச தொகையை கொண்டு தங்கத்தில் முதலீடு செய்து அதன் வளர்ச்சிக்கு ஏற்ப லாபமும் பார்க்க முடியும். அந்த வகையில் கோல்டு ஈடிஎஃப் திட்டங்கள் என்றால் என்ன டிஜிட்டல் கோல்டு என்றால் என்ன என்பது குறித்து நாம் தற்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

டிஜிட்டல் தங்கம்: தங்கத்தை நகையாகவும் நாணயமாகவும் வாங்கி வீட்டில் வைக்கும் போது அதை நாம் பாதுகாப்பதற்கு என தனியாக கவனம் செலுத்த வேண்டும். ஆனால் டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்கினால் அந்த கவலையே இல்லை. நாம் மொபைல் செயலிகள் வாயிலாகவே வாங்கிவிட முடியும் . குறிப்பிட்ட நிறுவனங்கள், நகை விற்பனை நிறுவனங்கள் தங்களுடைய ஆன்லைன் செயலிகள் வாயிலாகவே டிஜிட்டல் தங்கத்தை விற்பனை செய்கின்றன.

Recommended For You

நாம் எளிதாக அந்த செயலிகளை பதிவிறக்கம் செய்து டிஜிட்டல் முறையில் தங்கத்தை வாங்கிக் கொள்ள முடியும். இந்த தங்கத்தை நாம் தொட்டு பார்க்க முடியாது ஆனால் நம் பெயரில் மெய்நிகர் வடிவில் இருக்கும். வேண்டுமென்றால் அதனை விற்று பணமாக்கலாம் அல்லது ஃபிசிக்கல் தங்கமாக நமக்கு டெலிவரி செய்யும் படி அறிவுறுத்தலாம். இதிலும் மேலாண்மை கட்டணம், ஸ்டோரேஜ் கட்டணம் ஆகியவற்றை நாம் செலுத்த வேண்டி இருக்கும். 10 ரூபாய் முதலே இதில் தங்கம் வாங்க முடியும்.

ஆனால் டிஜிட்டல் கோல்டு செபி அல்லது ஆர்பிஐ-ஆல் ஒழுங்குபடுத்தப்பட வில்லை, கடந்த ஆண்டு செபியே இதனை அறிவித்தது. அதாவது டிஜிட்டல் கோல்டில் முதலீடு செய்து ஏமாந்துவிட்டால் சட்டரீதியான பாதுகாப்பு கிடைக்காது. நம்பிக்கை அடிப்படையில் தான் இது செயல்படுகிறது. திடீரென அந்த செயலி மூடப்பட்டு விட்டால் நம்முடைய பணம் பறிபோவதற்கு வாய்ப்பு உள்ளது. இதுதான் டிஜிட்டல் தங்கத்தில் இருக்கக்கூடிய சிக்கல். ஆனால் சிறிய அளவில் முதலீடு செய்ய வேண்டும் என எதிர்பார்த்தவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு.

கோல்டு ஈடிஎஃப் : தங்கத்தை வாங்க வேண்டும் ஆனால் என்னிடம் குறைந்த பணமே இருக்கிறது என கூறுபவர்கள் கோல்டு ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்யலாம். பங்குச்சந்தையில் இவை வர்த்தகம் செய்யப்படுகின்றன. பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய பெயரில் கோல்டு ஈடிஎஃப் திட்டங்களை உருவாக்கி வைத்திருக்கின்றன.

You May Also Like

நம்முடைய டீமேட் கணக்குகள் வாயிலாக குரோ போன்ற செயலிகளில் கோல்ட் ஈடிஎஃப்-களில் முதலீடு செய்ய முடியும். ஒவ்வொரு யூனிட்டும் ஒவ்வொரு கிராமை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இவை வடிவமைக்கப் பட்டுள்ளன. குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து கூட முதலீடு செய்யலாம்.

தங்கத்தின் விலை ஏற்ற இறக்கம் காண்பதற்கு ஏற்ப இந்த ஈடிஎஃப்களின் மதிப்பும் ஏற்றும் இறக்கம் காணும். ஆனால் இதிலிருந்து நமக்கு கிடைக்க கூடிய வருமானத்திற்கு மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். பங்குச்சந்தை நடைபெறக்கூடிய நேரத்தில் நாம் எப்பொழுது வேண்டுமானாலும் இதனை விற்பனை செய்து பணமாக்கிக் கொள்ளலாம். உடனடியாக பணமானது நம்முடைய அக்கவுண்டுக்கு வந்துவிடும். இதில் கூடுதலாக மேலாண்மை கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்த வேண்டும். ஈடிஎஃப் திட்டங்கள் செபியால் ஒழுங்குபடுத்தப்பட்டவை என்பதால் நம்பி முதலீடு செய்யலாம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+