இந்த தீபாவளிக்கு தங்கம் வாங்கலனா என்ன.. தங்கம் விற்கும் நிறுவனங்களின் பங்குகளை வாங்கலாமே..!!

தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் தங்கம் விலை உயர்ந்து வருவது மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் விலை குறையட்டும் தங்கம் வாங்கலாம் என காத்து கொண்டிருந்தவர்கள் இப்போது கவலையில் உள்ளனர். இந்நிலையில் தங்கம் வாங்க முடியாதவர்கள் இந்த தீபாவளிக்கு தங்கம் மற்றும் தங்க நகை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பங்குகளை வாங்கினால் தங்கத்துக்கு நிகரான லாபம் பார்க்கலாம் என தரகு நிறுவனங்கள் கூறுகின்றன.

தீபாவளி மற்றும் திருமண சீசன் நகை விற்பனை துறைக்கு மிக பெரிய பலத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நகை விற்பனை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இந்த சமயத்தில் சரியான பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கின்றன தரகு நிறுவனங்கள். அப்படி தரகு நிறுவனங்கள் பரிந்துரைக்கும் சில பங்குகளை பார்க்கலாம்.

இந்த தீபாவளிக்கு தங்கம் வாங்கலனா என்ன.. தங்கம் விற்கும் நிறுவனங்களின் பங்குகளை வாங்கலாமே..!!

டைட்டன் கம்பெனி (Titan Company): 4,800 முதல் 4,835 ரூபாய்க்குள் வாங்க வேண்டும், ஸ்டாப் லாஸ் 4,600 ரூபாயில் வைக்கலாம், இந்த பங்கு மதிப்பு 5,200 ரூபாய் வரை செல்லும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டைட்டன் பங்கு தனது 20-நாள், 50-நாள் மற்றும் 100-நாள் EMA சராசரி விலைகளை தாண்டியுள்ளது, எனவே டெக்னிக்கல் ரீதியாக இனி இந்த பங்கு ஏற்றத்தில் தான் இருக்கும் என தரகு நிறுவனங்கள் கணிக்கின்றன.

Also Read

பி.என். காட்கில் ஜுவல்லர்ஸ் (P N Gadgil Jewellers): இதனை 595 ரூபாய் முதல் 605 ரூபாய் என்ற விலைக்குள் வாங்க வேண்டும், உதற்கு 565 ரூபாயை ஸ்டாப் லாஸாக வைக்கலாம், இந்த பங்கு மதிப்பு, 690 ரூபாய் வரை செல்லும் என கணிக்கபப்ட்டுள்ளது. இந்த பங்கு 550 ரூபாய்க்கு அருகில் ஒரு பேஸை உருவாக்கிவிட்டு, தனது 20-நாள் மற்றும் 50-நாள் EMA சராசரியான 583 ரூபாயை தாண்டி மேலேறியுள்ளது. எனவே இனி இந்த பங்கு ஏற்றத்தில் தான் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Recommended For You

அது மட்டுமில்லாமல் சென்கோ கோல்டு மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் போன்ற புகழ்பெற்ற மற்றும் பெரிய சில்லறை விற்பனை நிறுவனங்கள், ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை வணிக வளர்ச்சியின் மூலம் அதிக பலன்களை பெறுகின்றன. எனவே இந்த பங்குகளை வாங்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்கம் விலை ஏறும் போது நகை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பங்கு மதிப்புகளும் உயரும். இது நிறுவனங்களின் லாபம் மற்றும் வருவாயில் வலுவாக எதிரொலிக்கும் இருந்தாலும் முதலீடு செய்வதற்கு முன்பு நிறுவனத்தின் செயல்பாடுகளையும் நிதி நிலைமையையும் முழுமையாக ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+