இந்தியாவில் நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக தீபாவளி பண்டிகையில் இந்தியர்கள் தங்கம் , வெள்ளி வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். எனவே தீபாவளிக்கு தங்கம்,வெள்ளி விலை என்னவாக இருக்கும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.
தற்போது தங்கம், வெள்ளி விலைகள் மந்தமான போக்கை கொண்டுள்ளன. அதாவது பெரிதாக விலை ஏறவும் இல்லை, இறங்கவும் இல்லை. இந்த சூழலில் தான் தங்கம், வெள்ளியில் இப்போது முதலீடு செய்யலாமா அல்லது நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கலாமா என்ற குழப்பம் எழுகிறது.

இதற்கு பிரபல கமாடிட்டி நிபுணர் அனுஜ் குப்தா பிஸ்னஸ் டுடேவுக்கு அளித்துள்ள பேட்டியில் முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். உயர்ந்து வரும் வட்டி விகிதங்கள் , பணவீக்கம் மற்றும் பத்திரங்கள் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரிப்பு ஆகியவை தங்கம், வெள்ளி விலைகளை தீர்மானிக்கின்றன என்கிறார்.
தீபாவளி சமயத்தில் 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு 1.5 லட்சம் ரூபாய் என்ற அளவில் நீடிக்கும் என அவர் கணிக்கிறார். வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 2.2 லட்சம் முதல் 2.3 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளார். இன்றைய தேதிக்கு சில்லறை விற்பனையில் 24 கேரட் தங்கம், 10 கிராமின் விலை 1.47 லட்சமாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோ 2.40 லட்சமாக இருக்கிறது.
தீபாவளி வரை பெரிதாக தங்கம் விலை ஏறாது என்பதே இவரது கணிப்பாக உள்ளது. கடந்த ஆண்டில் தீபாவளியின் போது தங்கம், வெள்ளி விலைகள் ராக்கெட் வேகத்தில் உயர தொடங்கின, ஆனால் இந்த ஆண்டு சற்று மந்தமாகவே இருக்கும் என சொல்லப்படுகிறது. அதற்குள் ஈரான் போர் தணிந்து கச்சா எண்ணெய் விலை சரியும் பட்சத்தில் தங்கம் விலை உயர வாய்ப்புள்ளது.
வெள்ளியை பொறுத்தவரை, தொழில்துறை தேவைகளும் தற்பொழுது அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன என்பதால் பெரிதாக ஏற்றம் இருக்காது என நிபுணர்கள் கூறுகின்றனர். தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் தற்போதைய சந்தை நிலவரங்களை கவனமாக கண்காணிக்க வேண்டும். விலை ஏற்ற இறக்கங்கள் காரணமாக, சந்தையின் போக்கை புரிந்துகொண்டு நிபுணர்களின் ஆலோசனையுடன் முதலீட்டு முடிவுகளை எடுப்பது நல்லது என்பதே ஆலோசகர்களின் அறிவுரை.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

