Gold: கடந்த தீபாவளியில் தங்கத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன?

தங்கம் எப்போதுமே நம்மை மோசம் போக வைக்காத ஒரு முதலீடு என சொல்லப்படுவது உண்டு. இதனால் தான் எந்த காலத்திலும் தங்கம் விலை நிலவரம் மக்களை ஆர்வம் அடைய வைக்கிறது. அதுவும் தீபாவளி பண்டிகை நெருங்க நெருங்க தங்கம் விலை நிலவரங்கள் மக்கள் கவனத்தை ஈர்க்கின்றன.

இந்தியர்கள் தீபாவளி கொண்டாட்டத்தின் போது அதனை ஒரு நல்ல தொடக்கமாக கருதி தங்கம் வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் தீபாவளியின் போது தங்கம் விற்பனை ஜோராக நடக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு தீபாவளியின் போது தங்கம் வாங்கியவர்கள் இந்த ஓராண்டு காலத்தில் லாபம் பார்த்தார்களா? கடந்த தீபாவளியில் தங்கத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன? என்பன உள்ளிட்ட தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

Gold: கடந்த தீபாவளியில் தங்கத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன?

கடந்த ஆண்டில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதியே கொண்டாடப்பட்டது. கடந்த ஆண்டு தீபாவளி அன்று தமிழ்நாட்டில் 24 கேரட் தங்கம் ஒரு கிராமின் விலை 13,091 ரூபாயாகவும் 22 கேரட் ஆபரணதங்கம் ஒரு கிராமின் விலை 12,000 ரூபாயாகவும் விற்பனையானது. அதன் பின்னர் படிப்படியாக விலை ஏறி, ஜனவரி மாதத்தில் தங்கத்தின் விலை வரலாற்று சாதனையை தொட்டது.

ஜனவரி 29ஆம் தேதி அன்று 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 18,328 ரூபாய்க்கும், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 16,800 ரூபாய்க்கும் என வரலாற்று உச்சத்தில் விற்பனையானது. ஆனால் அதன் பின்னர் தங்கம் விலை படிப்படியாக குறைந்தது. அதுவும் கடந்த மாதம் தங்கம் விலை தாறுமாறாக சரிந்தது. இன்றைய தினம் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 13,937 ரூபாய்க்கும் மற்றும் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 12,775 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

Also Read

கடந்த தீபாவளியன்று 1 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து நீங்கள் தங்கம் வாங்கியிருந்தால், உங்கள் முதலீட்டின் மதிப்பு கடந்த ஜனவரியில் 40% உயர்வு கண்டு 1,40,000 ரூபாய் என்ற அளவை எட்டி இருக்கும். அதுவே இன்றைய விலையோடு பார்த்தால் 1,06,465 ரூபாய் என்ற அளவில் தான் இருக்கும்.

கடந்த தீபாவளியில் தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஜனவரி மாதத்தில் வெறும் மூன்றே மாதங்களில் 40% லாபம் கிடைத்தது. அதன்பின் சந்தையில் விலை குறைந்தபோதிலும், இன்றைய கணக்கீட்டின்படி 6.5% நிகர லாபத்தில் உங்களின் முதலீடு பாதுகாப்பாகவே உள்ளது.

தங்கத்தின் இந்த விலை மாற்றம் முக்கியமான முதலீட்டு பாடங்களை நமக்கு கற்று தருகின்றன. தங்கம் விலை தொடர்ந்து உயர்கிறது என்ற பரபரப்பில் ஜனவரி மாத உச்சத்தில் வாங்கியவர்கள், தற்போது கவலையில் உள்ளனர். எனவே அதீத ஏற்றத்தில் இருக்கும் போது புதிய பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது என்ற பாடத்தை இது உணர்த்துகிறது.

Also Read

மேலும் சரியான நேரத்தில் லாபத்தை பதிவு செய்வது அவசியம் குறுகிய காலத்தில் 40% போன்ற அரிய லாபங்கள் கிடைக்கும் போது, தங்கத்தின் ஒரு பகுதியை விற்று லாபத்தை உறுதி செய்திருக்க வேண்டும். தற்போது தங்கம் விலை குறைகிறதே என உடனே வெளியேறாமல் தங்கம் முதலீட்டை எப்போதும் நீண்ட கால முதலீடாகவே பார்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

தங்கம் விலை குறையும் போது அது வாங்குவதற்கான வாய்ப்பு என்றும், குறுகிய லாபத்தை பார்க்காமல் நீண்ட கால லாபத்தையே கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல தங்கம் எப்போதுமே விலை ஏற்றத்துடனே இருக்கும் முதலீடு அல்ல, மற்ற முதலீடுகளை போல தங்கமும் ஏற்றம் இறக்கம் நிறைந்தது தான் என்பதையே இந்த ஓராண்டு காலம் நமக்கு உணர்த்துகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+