தங்கம் எப்படி இந்தியர்களின் கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து இருக்கிறதோ அதேபோல வெள்ளியும் இந்தியர்கள் விரும்பி வாங்கக்கூடிய ஒரு உலோகமாக இருக்கிறது. வெள்ளி நகை, பாத்திரங்களை நாம் அன்றாடம் வீடுகளில் பயன்படுத்துகிறோம்.
உயரும் வெள்ளி விலை:சர்வதேச அளவிலும் உள்ளூரிலும் சில ஆண்டுகளாக தொடர்ந்து வெள்ளியின் விலையும் உயர்ந்த வண்ணமே இருக்கிறது. வெள்ளி தற்போது செமி கண்டக்டர்கள் , ஸ்மார்ட் போன்கள், மின்சார வாகனங்கள் உள்ளிட்டவருக்கான முக்கிய உபகரணங்களின் பிரதான பாகமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே தொழில் துறையில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்து இருப்பதால் உலக அளவில் வெள்ளிக்கான தேவை உயர்ந்து வெள்ளியின் விலையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

வெள்ளியில் முதலீடு:பல்வேறு முதலீட்டாளர்களும் வெள்ளி தான் அடுத்த தங்கமாக இருக்கப் போகிறது என தொடர்ந்து தங்களுடைய கணிப்புகளை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றனர். ரிச் டேட் புவர் டேட் புத்தகத்தை எழுதிய ராப்ர்ட் கியோசாகி கூட மக்கள் வெள்ளியில் முதலீடு செய்வது நல்ல வளர்ச்சியை தரும் என அண்மையில் கூறி இருந்தார்.
சில்வர் ஈடிஎஃப்: இந்தியாவில் தங்கத்திற்கு எப்படி exchange-traded funds (ETF) எனப்படும் ஈடிஎஃப் திட்டங்கள் இருக்கிறதோ அதேபோல வெள்ளிக்கும் சில்வர் ஈடிஎஃப் திட்டங்கள் இருக்கின்றன. அதாவது வெள்ளியில் ஈடிஎஃப் திட்டங்களில் குறைந்த தொகைக்கே நம்மால் முதலீடு செய்துவிட முடியும். கடந்த ஓராண்டு காலத்தில் பார்க்கும் போது இந்திய சந்தையில் கோல்ட் ஈடிஎஃப் -களை விட சில்வர் ஈடிஎஃப்-களில் முதலீடு அதிகரித்துள்ளது.
அதிகரிக்கும் முதலீடு:மணி கண்ட்ரோல் வெளியிட்டுள்ள செய்தியில் 2024 ஜூன் மாதம் சில்வர் ஈடிஎஃப் -களின் மதிப்பு 7,473 கோடி ரூபாய், அதுவே 2025 ஆம் ஆண்டு மே மாதம் 16, 866 கோடி ரூபாய் என உயர்ந்திருக்கிறது. அதாவது ஓராண்டிலேயே இந்திய சந்தையில் சில்வர் ஈடிஎஃப்-களின் மதிப்பு 125 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இதே காலகட்டத்தில் பார்க்கும்போது கோல்டு ஈடிஎஃப்-களின் மதிப்பு ஜூன் 2024 இல் 34,355 கோடி ரூபாயாக இருந்து இந்த ஆண்டு மே மாதம் 62,400 கோடி ரூபாய் என உயர்ந்து இருக்கிறது. கோல்டு ஈடிஎஃப்களின் மதிப்பு 81% உயர்ந்திருக்கிறது ஆனால் வெள்ளி ஈடிஎஃப்களின் மதிப்பு 125 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
தங்கத்தை விட வெள்ளியில் அதிகம்:பெரும்பாலான முதலீட்டாளர்கள் கோல்டு ஈடிஎஃப் திட்டங்களை விட சில்வர் ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்வதும் சர்வதேச அளவில் வெள்ளிக்கான தேவை உயர்ந்து அதன் விலை உயர்ந்து வருவதும் இதன் மூலம் தெரிய வருகிறது. 2025 மே மாத நிலவரப்படி இந்தியாவில் 8.37 லட்சம் பேர் சில்வர் ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்து இருக்கின்றனர். இது ஜனவரி மாதம் 6 லட்சமாகத்தான் இருந்தது.
செபி அனுமதி:இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து தான் செபி சில்வர் ஈடிஎஃப் திட்டங்களை கொண்டு வருவதற்கு அனுமதி வழங்கியது . அந்த வகையில் பார்க்கும்போது 2021 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை சில்வர் ஈடிஎஃப் திட்டங்களின் கீழ் மேலாண்மை செய்யப்படும் மொத்த நிதியின் மதிப்பு 16, 500 கோடி என உயர்ந்திருக்கிறது.
ஏன் வெள்ளி விலை உயர்கிறது?:தேவை மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்கு இடையிலான விகிதமே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கின்றன. தற்போதைய சூழலில் வெள்ளி தொழில் துறையில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதற்குத் தேவையான வெள்ளியை நாம் இன்னும் தோண்டி எடுக்கவில்லை எனவே அடுத்தடுத்த நாட்களில் வெள்ளியின் விலை உயரும் என கோடக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிதி மேலாளர் ஆன சதீஷ் தெரிவித்திருக்கிறார். சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் சில்வர் ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்திருப்பதாக அவர் கூறுகிறார்.
நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது வெள்ளி வலுவான வளர்ச்சியை பெரும் ஏனெனில் இது புதுப்பிக்கத்தக்க எரி சக்தி மின்னணு சாதனங்கள் ,தொலைதொடர்பு மற்றும் வாகனத்துறைகளில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது என ஸெரோதா நிறுவனத்தின் விஷால் ஜெயின் குறிப்பிட்டு இருக்கிறார்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

டாடா மோட்டார்ஸ் பங்குகளை கைகழுவிய ராதாகிஷன் தமானி: சில்லறை முதலீட்டாளர்களே கவனம்..



Click it and Unblock the Notifications