மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ஒவ்வொரு முதலீட்டாளரும் தங்களின் வருங்காலத்திற்காக, குறிப்பாக தங்களின் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக மிகுந்த நம்பிக்கையோடு வைத்திருக்கும் திட்டம் செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSY) மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF). ஆனால் இப்போது இந்த சேமிப்பு கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வரும் மார்ச் 31, 2026-க்குள் நீங்கள் உங்கள் கணக்குகளில் சில மிக முக்கியமான ஆவணங்களை சரிபார்க்க தவறினால், உங்கள் முதலீடுகள் முடக்கப்படும் அல்லது கணக்குகள் தானாகவே மூடப்படும் அபாயம் உள்ளது. இதை வெறும் சாதாரண தகவலாக எடுத்து கொள்ளாதீர்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை பாதுகாப்பதற்கான ஒரு அறிவிப்பாக எடுத்துக் கொள்ளலாம். ஆக உங்கள் கணக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனில், மார்ச் 31-க்குள் நீங்கள் செய்ய வேண்டிய அந்த ஒரு முக்கியமான வேலை என்ன? எந்தெந்த ஆவணங்கள் கட்டாயம் தேவை? என்பதை விரிவாக காணலாம்.

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

பொது வருங்கால வைப்பு நிதி அல்லது செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில், நீங்கள் முதலீடு செய்திருந்தால் இது உங்களுக்கு மிகவும் முக்கியமான காலமாகும். நடப்பு நிதியாண்டு (2025-26) முடிவடைய போகிறது. இந்த நிதியாண்டிற்குள் நீங்கள் கட்ட வேண்டிய குறைந்தபட்ச தொகையை இன்னும் செலுத்தவில்லை என்றால், மார்ச் 31, 2026-க்குள் அதை செலுத்தி முடித்துவிடுங்கள்.

அரசு விதிகளின்படி, இந்த திட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச தொகையை முதலீடு செய்வது கட்டாயமாகும். அவ்வாறு செய்யத் தவறினால், உங்கள் கணக்கு செயலற்றதாக மாறிவிடும். ஒரு முறை கணக்கு முடக்கப்பட்டுவிட்டால், அதை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர, நீங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையுடன் அபராதத்தையும் சேர்த்து செலுத்த வேண்டியிருக்கும்.
PPF கணக்கு ஆரம்பிக்க போறீங்களா? இந்த ஒரு தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க!
பிபிஎஃப் திட்டத்தை பொறுத்தவரை ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 500 ரூபாய் செலுத்த வேண்டும். இதே செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 250 ரூபாய் செலுத்த வேண்டும். மேற்கண்ட திட்டங்களின் நிச்சயிக்கப்பட்ட குறைந்தபட்ச தொகையை செலுத்த தவறினால், 50 ரூபாய் அபராதம் மற்றும் ஜிஎஸ்டியும் விதிக்கப்படும். மேலும் வரி பலன்களையும் நீங்கள் இழக்க நேரிடலாம். ஆக உங்கள் கணக்குகளை தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருக்க, மார்ச் 31-க்குள் தேவையான குறைந்தபட்ச தொகையை செலுத்தி தொடர்ந்து உங்கள் கணக்கை செயல்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
டேக்ஸ் சேவிங் தாண்டி இவ்வளவு இருக்கா? 2026-ல் எதிர்காலத்தை மாற்றப்போகும் சிறு சேமிப்பு திட்டங்கள்!
மார்ச் 31, 2026 கடைசி தேதி என்பதால் அதுவரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் கடைசி நாட்களில் தொழில்நுட்ப கோளாறுகள் அல்லது வங்கி விடுமுறைகள் காரணமாக பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆக உங்கள் முதலீடு பாதுகாப்பாக இருப்பதையும், தடையின்றி வட்டி கிடைப்பதையும் உறுதி செய்ய, முன்கூட்டியே முதலீடு செய்வது எப்போதும் சிறந்தது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+