புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ் போல தெரிந்தாலும், உண்மையில் இது ஒரு நவீன தொழில்நுட்ப மாற்றம். வரும் ஏப்ரல் 22, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில், தனது கோல்டு ETF திட்டத்தின் அடிப்படை அம்சங்களில் HDFC மியூச்சுவல் ஃபண்ட் சில முக்கிய மாற்றங்களை செய்துள்ளது.

எங்களிடம் இருந்த பிசிகல் கோல்டு என்ன ஆகும் என்று கவலைப்படும் முதலீட்டாளர்கள் பயப்பட வேண்டாம், இது வெறும் பேக்கப் பிளான் தான் என விளக்கம் அளித்துள்ளது. சந்தையில் தங்கம் வாங்க முடியாத இக்கட்டான சூழலில் மட்டும், கோல்ட் டெரிவேட்டிவ்ஸ் (Gold Derivatives) மூலம் உங்கள் முதலீட்டை தொடர இந்த புதிய விதி வழிவகை செய்கிறது. இது உங்கள் லாபத்தை பாதிக்குமா அல்லது பாதுகாப்பை அதிகரிக்குமா? முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

சமீபத்தில் ஹெச்.டி.எஃப்.சி கோல்ட் இடிஎஃப்-ன் முதலீட்டு விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதை தொடர்ந்து, முதலீட்டாளர்களின் சந்தேகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் மார்ச் 24 அன்று ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளது.

இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம் அல்லது முதலீட்டு முறை மாறவில்லை. இத்திட்டம் தொடர்ந்து பிசிகல் கோல்டு மீதே தனது கவனத்தை செலுத்தும். இப்போது செய்யப்பட்டுள்ள மாற்றம் என்பது ஒரு கூடுதல் வசதி மட்டுமே தவிர, இது திட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை பாதிக்காது.

சந்தையில் தற்காலிகமாக தங்கம் வாங்குவதிலோ அல்லது விற்பதிலோ தட்டுப்பாடு ஏற்படும் அசாதாரண சூழல்களில் மட்டுமே. எக்ஸ்சேஞ்ச் டிரேடட் கமாடிட்டி டெரிவேட்டிவ்ஸ் (ETCDs) எனப்படும் தங்கம் சார்ந்த ஒப்பந்தங்களில் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதே நிலைமை சீராகி சந்தையில் தங்கம் தாராளமாகக் கிடைக்கும் போது, இந்த டெரிவேட்டிவ் முதலீடுகள் திரும்ப பெறப்பட்டு மீண்டும் முழுமையாக பிசிகல் கோல்டு முறைக்கே நிதி மாற்றப்படும். இந்த திட்டத்தின் நிகர சொத்துக்களில்) 50% வரை தங்கம் சார்ந்த இதர அம்சங்களில் முதலீடு செய்யப்படலாம். இதில் கோல்டு டெபாசிட் ஸ்கீம் (GDS) மற்றும் கோல்ட் மானிடைசேஷன் ஸ்கீம் (GMS) ஆகியவற்றில் அதிகபட்சம் 20% வரை மட்டுமே முதலீடு செய்ய அனுமதி உண்டு. மீதமுள்ள 0-5% நிதி, கடன் பத்திரங்கள் அல்லது லிக்விட் ஃபண்டுகளில் செய்யப்படலாம்.

மார்ச் 2026-ன் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் தொடர்ச்சியாக, இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டது.

குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் கமாடிட்டி டெரிவேட்டிவ்களை பயன்படுத்த செபி அனுமதி அளிக்கிறது. சந்தை நிலைமை சீராகி, பிசிகல் கோல்டு தாராளமாக கிடைக்கும் சூழல் வந்தவுடன், டெரிவேட்டிவ்களில் உள்ள முதலீடுகள் அனைத்தும் திரும்ப பெறப்படும். அதன் பிறகு இந்த திட்டம் மீண்டும் முழுமையாக பிசிகல் தங்கத்தை வைத்திருக்கும் பழைய முறைக்கு மாறும் என்று தெரிவித்துள்ளது.

மேற்கொண்டு HDFC மியூச்சுவல் ஃபண்ட் அறிக்கையில், இடிஎஃப் திட்டத்தின் முதன்மையான நோக்கம் என்பது, தூய தங்க கட்டிகளில் முதலீடு செய்வது என்பதில் உறுதியாக உள்ளது. இத்திட்டத்தின் சொத்து ஒதுக்கீடு விதிமுறைகளின் படி, செயல்பாட்டு தேவைகளுக்காக ஒரு மிகச்சிறிய பகுதி மட்டுமே ரொக்கமாகவோ அல்லது அதற்கு இணையான லிக்விட் அசெட்களாகவோ வைத்திருக்கப்படும். கடந்த பிப்ரவரி 28 நிலவரப்படி, இத்திட்டத்தின் கீழ் 15,000 கிலோ கிராமுக்கும் அதிகமான பிசிகல் தங்கம் கையிருப்பில் உள்ளது. இது இந்த திட்டத்தின் மொத்த முதலீட்டு தொகுப்பில் (Portfolio) கிட்டத்தட்ட முழுமையான பங்காகும். தினசரி செயல்பாட்டு தேவைகளுக்காக மட்டுமே ஒரு சிறிய தொகை லிக்விட் அசெட்களில் பராமரிக்கப்படுகிறது.

இந்த புதிய விதிமுறை மாற்றத்தால் கோல்ட் இடிஎஃப்-ல் ரிஸ்க் அதிகரிக்குமா என்று முதலீட்டாளர்கள் பரவலாக கேள்வி எழுப்பி வந்த நிலையில் இந்த தெளிவுபடுத்தல் வந்துள்ளது. இந்த மாற்றம் வெறும் ஒரு தொழில்நுட்ப ரீதியான மாற்றம் மட்டுமே என்று கூறும் ஃபண்ட் ஹவுஸ், இது சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப செயல்படக்கூடிய நெகிழ்வுத்தன்மையை வழங்குவதற்காகவே கொண்டு வரப்பட்டது. நீண்ட கால அடிப்படையில் தங்கத்தின் விலையை துல்லியமாக பின்தொடர்வது என்ற திட்டத்தின் நோக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+