இன்றைய காலத்தில் பெண்கள் பலருக்கும் இருக்கும் ஒரு முக்கிய கனவு, குடும்பத்தை கவனிப்பதோடு மட்டுமல்லாமல், தனக்கென ஒரு நிதி சுதந்திரத்தையும், சமூக அந்தஸ்தையும் கொண்டிருக்க வேண்டும் என்பது தான். காலத்தின் மாற்றத்திற்கேற்ப பெண்கள் தங்கள் திறமைகளை உலகுக்கு காட்டவும், பொருளாதார ரீதியாக தங்களை வலுப்படுத்தி கொள்ளவும் பெரிதும் விரும்புகின்றனர். வீட்டு பொறுப்புகளை சுமப்பதோடு, சுயமாகச் சம்பாதித்து தன் காலில் நிற்கும் பெண்ணே, ஒரு குடும்பத்தின் அச்சாணியாக திகழ்கிறாள்.
அத்தகைய ஆற்றல்மிக்க பெண்களுக்காகவே, எல்.ஐ.சி (LIC) நிறுவனம் பீமா சகி (Bima Sakhi) போன்ற திட்டங்களை கொண்டுள்ளது. இது வெறும் வருமானம் தரும் வேலை மட்டுமல்ல. பெண்களின் தன்னம்பிக்கையை உயர்த்தி, அவர்களை தொழில் முனைவோராக மாற்றும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.

காலையில் குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு வரும் நேரத்திற்குள் உங்கள் அறிவையும், திறமையையும் முதலீடு செய்து மாதம் 7,000 ரூபாய் வரை சம்பாதிக்கும் ஒரு அற்புதமான வாய்ப்புதான் பீமா சகி திட்டம். இது வெறும் காப்பீடு விற்பனை மட்டும் அல்ல. பெண்களை ஒரு சுயசார்புள்ள தொழில் முனைவோராக மாற்றும் ஒரு முயற்சியாகும். இதற்கு உங்களுக்கு தேவைப்படுவது ஒரு சிறிய ஆர்வம் மற்றும் விடாமுயற்சி மட்டுமே. அலுவலகத்திற்கு சென்று எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை, உங்கள் நேரத்திற்கு ஏற்றவாறு, உங்கள் பகுதியில் இருந்தபடியே ஒரு அங்கீகரிக்கப்பட்ட எல்.ஐ.சி முகவராக மாறி, பெண்களுக்கான இந்த நிதி சுதந்திரத்தை நீங்கள் அடையலாம்.
எல்.ஐ.சி-ன் பீமா சகி திட்டமானது பெண்களுக்கு இன்சூரன்ஸ் ஏஜெண்டுகளாக மாற பயிற்சி கொடுத்து வருகிறது. இந்த மூன்று ஆண்டு பயிற்சி காலகட்டத்திற்கு அவர்களுக்கு நிலையான மாதாந்திர உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. முதல் ஆண்டில் மாதம் சுமார் 7,000 ரூபாயும், இரண்டாவது ஆண்டில் மாதம் 6,000 ரூபாயும், மூன்றாவது ஆண்டில் சுமார் 5,000 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையானது உண்மையில் இன்சூரன்ஸ் பற்றிய நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் ஆரம்ப கட்டத்தில் ஒரு பெரிய உறுதுணையாக இருக்கும்.
சித்தராமையாவின் 17-வது பட்ஜெட்: ரோஹித் வெமுலா சட்டம் முதல் இலவச இன்சுலின் வரை.. 10 முக்கிய அம்சங்கள்!
ஆனால் உண்மையான வருமானமே பயிற்சிக் காலம் முடிந்த பின்னர் தான் தொடங்குகிறது. ஒரு உரிமம் பெற்ற முகவராக, நீங்கள் விற்கும் ஒவ்வொரு பாலிசிக்கும் கமிஷன் பெறுவீர்கள். இலக்குகளை அடைவதன் மூலம் கவர்ச்சிகரமான செயல்திறன் ஊக்கத்தொகைகளும் உண்டு. நீங்கள் எவ்வளவு அதிகமாக தொடர்புகளை உருவாக்கி, வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் வருமானம் உயரும். பல பெண்கள் இதை தங்களின் முழு நேர தொழிலாக வெற்றிகரமாக மாற்றியுள்ளனர். இங்கு உங்கள் வருமானத்திற்கு உச்சவரம்பு என்பது இல்லை. உங்கள் கடின உழைப்பே உங்கள் வெற்றியை தீர்மானிக்கும். ஆக எந்த அளவுக்கு பாலிசி பிடிக்கிறீர்களோ அந்த அளவுக்கு வருமானம் பார்க்க முடியும்.
இந்த திட்டத்தில் 18 வயது முதல் 70 வயது வரை உள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். இதற்கு குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த திட்டத்தில் எல்ஐசி முகவர்களாக இருப்பவர்கள், எல்.ஐ.சி ஊழியர்கள், ஓய்வுபெற்ற பணியாளர்கள், முன்னாள் முகவர்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் (துணைவர், குழந்தைகள், பெற்றோர், உடன் பிறந்தவர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள்) இதற்கு விண்ணப்பிக்க முடியாது.
இந்த திட்டத்தில் இணைய விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
1.வயதுச் சான்றிதழ்
2.முகவரி சான்றிதழ்
3.கல்வித் தகுதி சான்றிதழ்
4.பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
இந்த பணியில் பெண்கள் வெற்றி பெற, எல்.ஐ.சி நிறுவனம் தொழில்முறை பயிற்சி, சந்தைப்படுத்தல் வழிகாட்டுதல் மற்றும் விளம்பர ஆதரவு ஆகியவற்றை வழங்குகிறது.
மேலும் பீமா சகி ஆக, விண்ணப்பதாரர்கள் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) நடத்தும் முன்-பணியமர்த்தல் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெற்ற பிறகு ஆவணங்கள் சரிபார்க்கப்படும். இதற்கான நேர்காணல் எல்.ஐ.சி கிளை அலுவலகங்களில் நடைபெறும்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஏஜென்சி குறியீடு வழங்கப்படும். பீமா சகி என்பவர் மாதச் சம்பளம் பெறும் ஊழியர் அல்ல, அவர் கமிஷன் அடிப்படையில் பணிபுரியும் ஒரு எல்.ஐ.சி முகவர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதற்கான விண்ணப்ப செயல்முறை முழுமையாக ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. எல்.ஐ.சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பீமா சகி பகுதிக்கு செல்லவும். உங்கள் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் இருப்பிடம் போன்ற அடிப்படை விவரங்களை பூர்த்தி செய்யவும். நீங்கள் ஏதேனும் எல்.ஐ.சி முகவர் அல்லது ஊழியருடன் தொடர்பில் இருந்தால், படிவத்தை சமர்ப்பிக்கும் முன் அவர்களின் விவரங்களை குறிப்பிடவும்.
எல்.ஐ.சி பீமா சகி திட்டம் என்பது ஒரு சாதாரண திட்டம் மட்டுமல்ல. இது இந்தியா முழுவதும் உள்ள பெண்களுக்கு நிதி சுதந்திரம், சுயமரியாதை மற்றும் தொழில் வளர்ச்சிக்கான ஒரு பாதையாகும். நீங்கள் உங்கள் அடையாளத்தையும் வருமானத்தையும் ஒரே நேரத்தில் உருவாக்க விரும்பினால், இது உங்களுக்கான சிறந்த வாய்ப்பாகும். ஆக பெண்களே உங்களுக்கு சம்பாதிக்க வேண்டும், ஒரு அங்கீகாரம் வேண்டும் என நினைப்பவர்கள் கட்டாயம் இதை திட்டமிடலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications