வீட்டில் சும்மா இருக்கும் தங்கத்தில் லாபம்: தங்கம் விற்காமலேயே வருமானம் பார்க்கலாம் தெரியுமா?

உலகளவில் தங்கம் எப்போதுமே ஒரு பாதுகாப்பான முதலீடாகவும், அவசர காலத்திற்கு உதவும் ஒரு பொருளாகவும் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பாரம்பரியமாகப் பெரும்பாலான குடும்பங்களில் தங்கம் வாங்கப்பட்டு, வங்கி லாக்கர்களிலோ அல்லது வீடுகளிலோ வைக்கப்படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட முன்னணி நாடுகளை விட இந்திய குடும்பங்கள் வசம் அதிகளவு தங்கம் இருக்கிறது.

கிட்டதட்ட 25,000 டன் தங்கம் இந்திய குடும்பங்கள் வசம் உள்ளன. பெரும்பாலும் அவை லாக்கரில் தான் பூட்டி வைக்கப்படுகின்றன. தங்கத்தின் விலை உயரும்போது மட்டுமே அதன் மதிப்பு கூடுகிறது, ஆனால் அது தனியாக எந்தவொரு மாதாந்திர அல்லது வருடாந்திர வருமானத்தையும் தருவதில்லை. உங்களது தங்கமும் பாதுகாப்பாக இருக்கும், அதே வேளையில் மாதம் வட்டி வருமானமும் பெற்று தரும் என்றால் யார் தான் வேண்டாம் என சொல்வார்கள். பெரும் பணக்காரர்கள் பலரும் இந்த முறையை பின்பற்றி வருமானம் பார்க்கிறார்கள்.

வீட்டில் சும்மா இருக்கும் தங்கத்தில் லாபம்: தங்கம் விற்காமலேயே வருமானம் பார்க்கலாம் தெரியுமா?

இதனை Gold Leasing என அழைக்கிறார்கள். இந்தத் திட்டம், உங்களிடம் இருக்கும் பயன்படாத (Idle Gold) தங்கத்தை விற்காமலேயே, அதன் மூலம் கூடுதல் லாபம் அல்லது வட்டி ஈட்டுவதற்கு வழிவகை செய்கிறது. இது எவ்வாறு செயல்படுகிறது, என்பதை விரிவாக பார்க்கலாம்.

என்ன தான் விலை உயர்ந்தாலும் இந்தியாவின் ஆபரண மற்றும் ரத்தினச் சந்தை (Gems and Jewellery Market) மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஒரு நகைக் கடைக்காரர் அல்லது உற்பத்தியாளர் தனது வணிகத்தை நடத்த பெரிய அளவில் முதலீடு செய்து தங்கத்தை நேரடியாக வாங்க வேண்டியிருக்கும். அவ்வாறு நேரடியாக வாங்கும்போது, அவர்களின் மூலதனம் (Working Capital) அதில் முடங்கிவிடுகிறது. மேலும், அவர்கள் நகை செய்து முடிப்பதற்குள் தங்கத்தின் விலை சந்தையில் வீழ்ச்சியடைந்தால், அவர்களுக்குப் பெரிய நஷ்டம் ஏற்படும்.

Also Read

இந்தச் சிக்கலைத் தவிர்க்கவே நகைக் கடைக்காரர்கள் தங்கத்தைக் குத்தகைக்கு (Leasing) எடுக்க விரும்புகிறார்கள். முதலீட்டாளர்களிடம் இருந்து குறிப்பிட்ட காலத்திற்குத் தங்கத்தை வாடகையாகப் பெற்று, அதை நகையாக மாற்றி விற்றுவிட்டு, கால முடிவில் அதே அளவு தங்கத்தைத் திருப்பித் தந்துவிடுகிறார்கள். இதற்கு பதிலாக முதலீட்டாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்தை வழங்குகிறார்கள்.

வீட்டில் சும்மா இருக்கும் தங்கத்தில் லாபம்: தங்கம் விற்காமலேயே வருமானம் பார்க்கலாம் தெரியுமா?

இந்த முழு செயல்முறையும் பணமாக இல்லாமல், முழுக்க முழுக்க தங்கத்தின் எடை அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறது. நீங்கள் உங்களிடம் உள்ள டிஜிட்டல் தங்கம் (Digital Gold) அல்லது கைவசம் இருக்கும் (Physical Gold) தங்கத்தை இதற்கென இருக்கும் பாதுகாப்பான மொபைல் செயலிகள் அல்லது நிறுவனங்கள் மூலம் குத்தகைக்கு கொடுக்கலாம்.

இந்த தங்கம் சரிபார்க்கப்பட்ட, நம்பகமான நகைக் கடைக்காரர்கள் அல்லது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு (Refineries) வணிகப் பயன்பாட்டிற்காக கடனாக வழங்கப்படுகிறது. இதற்காக நகைக் கடைக்காரர்கள் ஆண்டுக்கு 4% முதல் 7% வரை வட்டி வழங்குகிறார்கள். இந்த வட்டிப் பணம் உங்களது கணக்கில் கூடுதல் தங்கக் கிராம்களாகவே சேர்க்கப்படும்.குத்தகை காலம் (சில வாரங்கள் முதல் மாதங்கள் அல்லது வருடங்கள்) முடிந்தவுடன், உங்களுடைய அசல் தங்கம் மற்றும் அத்துடன் சேர்ந்த வட்டி தங்கம் ஆகிய இரண்டும் உங்களுக்கு பாதுகாப்பாக வழங்கப்படும்.

Recommended For You

உதாரணமாக உங்களிடம் 100 கிராம் தங்கம் இருக்கிறது, அதை 5% வட்டிக்குக் குத்தகைக்கு விடுகிறீர்கள் என்றால், வருட முடிவில் உங்களிடம் 105 கிராம் தங்கம் இருக்கும். சந்தையில் தங்கத்தின் விலை உயரும்போது, இந்த 105 கிராம் தங்கத்திற்கும் சேர்த்து உங்களுக்கு இரட்டை லாபம் கிடைக்கும். வங்கி லாக்கரில் வைப்பதை விட இதில் அதிக லாபம் இருந்தாலும், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய சில முக்கிய அபாயங்களும் உள்ளன.

தங்கத்தை குத்தகைக்கு எடுத்த நகைக் கடைக்காரர் அல்லது நிறுவனம் திவாலாகிவிட்டாலோ அல்லது ஏமாற்றினாலோ முதலீட்டாளர்களின் அசல் தங்கம் ஆபத்துக்குள்ளாகலாம். சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை கடுமையாகக் குறைந்தால், உங்களுக்குக் கூடுதல் கிராம் தங்கம் கிடைத்தாலும், ஒட்டுமொத்த முதலீட்டின் மதிப்பு குறையக்கூடும்.

தங்க பத்திரங்கள் (SGB) போல இதற்கு நேரடி அரசாங்க அல்லது செபி (SEBI) பாதுகாப்பு கிடையாது. இது பெரும்பாலும் தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே இயங்குகிறது. தற்போது இந்தியாவில் இயங்கும் Gullak, SafeGold, Spare8 போன்ற டிஜிட்டல் தளங்கள் இந்த அபாயங்களைக் குறைக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அவர்கள் நகைக் கடைக்காரர்களிடம் இருந்து 100% வங்கி உத்தரவாதம் (Bank Guarantee) அல்லது பெருநிறுவனப் பிணைகளை (Corporate Guarantees) பெற்றுக் கொள்கிறார்கள். மேலும், RFID தொழில்நுட்பம் மற்றும் கேமராக்கள் மூலம் தங்க பயன்பாட்டை கண்காணித்து இன்சூரன்ஸ் பாதுகாப்பையும் வழங்குகின்றன.

You May Also Like

முன்பெல்லாம் கிலோ கணக்கில் தங்கம் வைத்திருக்கும் பெரிய பணக்காரர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த தங்க குத்தகை தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியால், சிறிய முதலீட்டாளர்களும் 0.5 கிராம் அல்லது மிகக் குறைந்த தொகையில் டிஜிட்டல் தங்கம் வாங்கி அதைக் குத்தகைக்கு விட முடிகிறது.

உங்களிடம் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யப்பட்ட டிஜிட்டல் தங்கம் இருக்கிறது, அதை உடனடியாக விற்கும் எண்ணம் இல்லை என்றால், நம்பகமான மற்றும் முறையான வங்கி உத்தரவாதம் (Bank Guarantee) வழங்கும் தளங்களைத் தேர்ந்தெடுத்து, தங்க குத்தகை மூலம் கூடுதல் வட்டி ஈட்டுவது ஒரு சிறந்த முதலீட்டு உத்தியாகும். எனினும், முதலீடு செய்வதற்கு முன் நிறுவனத்தின் விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் படித்து பார்ப்பது அவசியமாகும். டிஜிட்டல் தங்கத்திற்கும் நம் கைகளில் இருக்கும் தங்கத்திற்கும் இந்த குத்தகை முறைபொருந்தும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+