உலகம் முழுவதுமே தங்கம் வெள்ளி விலை ஏற்றம் தான் பரபரப்பாக பேசப்படக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. சாமானிய மக்களில் தொடங்கி பெரிய அளவிலான முதலீட்டாளர்கள் வரை தங்கம் குறித்தும் வெள்ளி குறித்தும் இந்த ஆண்டு மிக அதிகமாகவே பேசி இருக்கிறார்கள். ஏனெனில் அந்த அளவிற்கு தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இந்த ஆண்டு உயர்வு கண்டிருக்கின்றன.
2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை தங்கத்தின் விலை சுமார் 80 சதவீதமும் வெள்ளியின் விலை சுமார் 140 சதவீதத்திற்கும் மேலும் உயர்ந்து இருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் இதே தான் நிலைமை. இந்த நிலையில் 2008 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியை மிகச் சரியாக கனித்த டாக்டர் டூம் என அழைக்கப்படும் பொருளாதார நிபுணர் பீட்டர் சிஃப் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் முதலீட்டாளர்களுக்கு மிக முக்கியமான ஒரு எச்சரிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

பெரும்பாலும் இவர் வெளியிடக்கூடிய கணிப்புகள் அப்படியே நடக்கும் என்பதால் தங்கம், வெள்ளி முதலீடு தொடர்பாக இவர் வெளியிட்டிருக்க பதிவு ஏராளமானவர்களின் கவனத்தை கவனத்தைப் பெற்றுள்ளது. எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் தற்போதைக்கு வெள்ளியில் முதலீடு செய்யாதீர்கள் என கூறி இருக்கிறார்.
கையில் இருக்கும் பணத்திற்கு தங்கத்தை வாங்கி போடுங்கள் ஆனால் வெள்ளி விலை தற்போது மிக அதிக ஏற்ற இறக்கத்தில் இருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார். எனவே வெள்ளியில் பணத்தை முதலீடு செய்து சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள் என தெரிவித்திருக்கிறார். வெள்ளி முதலீட்டில் ஒரு குறுகிய கால ஆபத்து இருக்கிறது எனவே கவனம் தேவை எனக் கூறியிருக்கும் அவர் தற்போது உங்கள் கைவசம் ஏற்கனவே வெள்ளி இருக்கிறது என்றால் அதனை விற்பனை செய்யாதீர்கள் அதை அப்படியே வைத்திருங்கள் என அறிவுரை வழங்கியிருக்கிறார்.
வெள்ளியின் விலை மிக அதிக ஏற்ற இறக்க பிரிவில் இருப்பதாகவும் அது ஒரு நிலைக்கு செட்டில் ஆன பிறகு அதில் முதலீடு செய்யலாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். வரும் ஆண்டில் மிகப்பெரிய அளவு தங்கம் விலை உயரும், எனவே உங்களால் முடிந்த அளவு தங்கத்தில் முதலீடு செய்து வையுங்கள் என்ற அறிவுரையை அவர் வழங்கியிருக்கிறார்.
வெள்ளி விலை 84 டாலர்கள் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டது அதன் பின்னர் தற்போது 75 டாலர் என சரிந்து விட்டது இது மிக அதிக ஏற்ற இறக்கம் என்ற வர்த்தக சூழலில் சிக்கிக் கொண்டிருக்கிறது, எனவே இன்னும் சில காலம் காத்திருந்து பின்னர் வெள்ளியில் முதலீடு செய்யலாம் ஆனால் இது சரியான தருணம் அல்ல என கூறி இருக்கிறார்.தங்கம் விலை உயரும், அது குறைந்தாலும் பெரிய அளவில் இருக்காது என தெரிவித்துள்ள அவர் வெள்ளி அப்படி கிடையாது சரிந்தால் பெரிய நஷ்டம் தான் என அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!



Click it and Unblock the Notifications