துபாயில் தங்கம் இந்தியாவை விட 5-7% விலை குறைவாகவும், அதிக தூய்மையுடனும் கிடைப்பதால், பலர் "துபாயில் வாங்கி இந்தியாவில் விற்றால் பெரிய லாபம் கிடைக்கும்?" என்று நம்பி வருகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் அவ்வபோது துபாயில் தங்கம் வாங்கினால் லாபமா என்ற கேள்வி எழுந்து வருகின்றது. ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை துபாயில் வாங்கி இந்தியாவில் விற்றால் லாபம் வருமா..? முழு விபரத்தை பார்ப்போம்.

துபாயில் இருந்து சட்டப்படி எவ்வளவு தங்கம் இந்தியாவுக்கு கொண்டு வரலாம்?
வெளிநாட்டில் ஒரு வருடத்திற்கு மேல் தங்கியிருந்தவர்களுக்கு மட்டுமே சில சலுகைகள் உண்டு. ஆண்கள் 20 கிராம் வரை, பெண்கள் 40 கிராம் வரை தங்கத்தை வரி இல்லாமல் கொண்டு வரலாம். இது நகைகளுக்கு மட்டுமே, பார்கள் அல்லது நாணயங்களுக்கு எந்த வரி விலக்கும் இல்லை. மொத்தம் 1 கிலோ வரை கொண்டு வரலாம் ஆனால் இந்த வரம்பு தாண்டினால் வரி செலுத்த வேண்டும்.
சுற்றுலாப் பயணிகள் (குறுகிய காலம்) எந்த வரி விலக்கும் பெற முடியாது என்பதை முதலில் தெரிந்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு கிராமுக்கும் வரி விதிக்கப்படும். தங்கத்தை சுங்க துறையிடம் சரியான பில் உடன் அறிவிக்க வேண்டும், இல்லையெனில் கடுமையான தண்டனை உண்டு.
துபாயில் தங்கம் ஏன் கவர்ச்சிகரமானது?
துபாய் தங்க சந்தை உலகப் புகழ் பெற்றது. அங்கு தங்க விலை சர்வதேச விலைக்கு நெருக்கமாக இருக்கும் அதனால் இந்தியாவை விடவும் சற்று குறைவாக இருக்கும். மேலும் துபாயில் இறக்குமதி வரி அல்லது GST போன்ற வரிகள் இல்லை, துபாயில் விற்கப்படும் தங்கம் தூய்மை அதிகம், செய்கூலி குறைவு. சில சமயங்களில் துபாயில் தங்கம் வாங்கும் போது செலுத்தப்படும் VAT வரியும் திரும்பப் பெறலாம். இதனால் இந்தியாவை விட மலிவாகத் தோன்றும்.

இந்தியாவில் கொண்டு வரும்போது வரி உண்டா..?
சுங்க வரி விதிப்பு (Customs Duty):
துபாயில் வாங்கிய தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வரும்போது, இந்திய அரசு சுங்க வரி விதிக்கிறது. இது தங்கத்தின் வகை, அளவு மற்றும் நீங்கள் வெளிநாட்டில் எவ்வளவு காலம் தங்கியிருந்தீர்கள் என்பதைப் பொறுத்து மாறுபடும். நீங்கள் வெளிநாட்டில் எவ்வளவு காலம் தங்கியிருந்தீர்கள் என்பதைப் பொறுத்து வரி:
1 வருடத்திற்கு குறைவாக தங்கியிருந்தால்: எந்த வரி விலக்கும் இல்லை. மொத்த தங்கத்தின் மதிப்புக்கும் 38.50% வரை சுங்க வரி.
6 மாதம் முதல் 1 வருடம் வரை: 1 கிலோ வரை 13.7% வரி (சில சலுகைகள் உண்டு).
1 வருடத்திற்கு மேல் தங்கியிருந்தால்: ஆண்களுக்கு ரூ.50,000 வரையிலும், பெண்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் மதிப்புள்ள தங்க நகைகளுக்கு வரி இல்லை. அதற்கு மேல் 13.7% வரி (1 கிலோ வரை).
தங்க பார்கள் (Gold Bars) மீதான வரி:
1 கிலோவுக்கு குறைவாக கொண்டு வந்தால்: 10% சுங்க வரி.
20 கிராமுக்கு மேல் ஆனால் 100 கிராமுக்கு குறைவாக: 3% வரி.
20 கிராமுக்கு குறைவாக: வரி இல்லை.
தங்க நாணயங்கள் (Gold Coins) மீதான வரி:
மொத்த எடை 20 கிராமுக்கு குறைவாக: வரி இல்லை.
20 கிராம் முதல் 100 கிராம் வரை: 3% வரி.
1 கிலோவுக்கு குறைவாக: 10% வரி.
தங்க நகைகள் (Gold Jewellery) மீதான வரி:
நீண்ட காலமாக வெளிநாட்டில் தங்கியிருப்பவர்களுக்கு சில அளவு வரை வரி விலக்கு உண்டு. அதற்கு மேல் 6-10% வரை வரி விதிக்கப்படலாம்.
வரி எப்படி கணக்கிடப்படுகிறது?
தங்கத்தின் மதிப்பு அன்றைய 24 காரட் உலக சந்தை விலையின் அடிப்படையில் கணக்கிடப்படும். அதன் மீது சுங்க வரி சேர்க்கப்படும். பிறகு அதன் மீது GST மற்றும் social welfare surcharge சேர்க்கப்படும்.
தேவையான ஆவணங்கள்:
தங்கத்தின் வாங்கிய ரசீது, தூய்மை சான்றிதழ் (purity certificate) ஆகியவை கட்டாயம். சரியான ஆவணங்கள் இல்லையெனில் அபராதம் அல்லது பறிமுதல் ஏற்படலாம்.
சாதாரண சுற்றுலாப் பயணிகள் தங்கம் கொண்டு வரும்போது அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும். எனவே, சட்ட விதிகளை முழுமையாக அறிந்து, சரியான அளவில் மட்டும் கொண்டு வருவது நல்லது.
துபாயில் வாங்கிய தங்கத்தை இந்தியாவில் விற்கும்போது 3% GST, நாணய மாற்ற செலவு, மறுவிற்பனை செய்யும் போது சில இழப்புகளும் அடங்கும்.
பெரிய ஆபத்துகள் என்ன?
- நீங்கள் துபாயில் தங்கம் வாங்கிய பின்பு இந்தியாவில் தங்கம் விலை குறைந்தால் தங்க விலை ஏற்ற இறக்கம் மூலம் நஷ்டம் ஏற்படும்.
- இதேபோல் ரூபாயை திராஹாம் ஆக மாற்றும் போதும் ஏற்படும் கட்டணம் ஆகியவையும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
- துபாயில் வரும் போது சுங்கத்துறையிடம் அறிவிக்காமல் கொண்டு வரப்பட்டும் தங்கத்திற்கு அபராத வரி விதிக்கப்படும் அல்லது தங்கம் பறிமுதல் செய்யப்படலாம், கடுமையான அபராதம், சிறை தண்டனை கூட வரலாம்.
- இந்திய நகைக்கடைகளில் நீங்கள் துபாயில் வாங்கிய தங்கத்திற்கு குறைந்த விலை தரலாம். இதுவும் எதிர்பாராத வகையில் இழப்பை ஏற்படுத்தும்.
ரூ.20 லட்சம் தங்கத்தில் லாபம் வருமா?
நிபுணர்களின் கருத்து: இல்லை. துபாய் விலை நன்மை 5-7%, ஆனால் சுங்க வரி 6%, GST 3%, நாணய இழப்பு, மறுவிற்பனை செலவு ஆகியவை சேர்ந்து லாபத்தை முழுமையாக அழித்துவிடும். லாபம் மிகக் குறைவு அல்லது பூஜ்ஜியம் அளவிலேயே உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். தங்க விலை பெரிய அளவில் உயர்ந்தால் மட்டுமே லாபம் வரும், அதுவும் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வீசினால் மட்டுமே.
துபாயில் தங்கம் வாங்கி இந்தியாவில் விற்பது எளிதான லாப வழி அல்ல. சாமானிய மக்களுக்கு இது பாதுகாப்பான வழி அல்ல, அதற்கு பதிலாக உள்ளூர் சந்தையில் பாதுகாப்பான வழிகளில் முதலீடு செய்வது சிறந்தது.
More From GoodReturns

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!



Click it and Unblock the Notifications