தங்கம் Vs பங்குச்சந்தை : 16 ஆண்டுகளில் எந்த முதலீடு அதிக லாபம் தந்தது? சர்ப்பிரைஸ் தரும் முடிவுகள்!!

தற்போது முதலீட்டாளர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய குழப்பம் தொடர்ந்து பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா அல்லது தங்கத்தில் பெரும் பணத்தை போடலாமா என்பதுதான். ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய பங்குச் சந்தை எந்த ஒரு லாபத்தையும் தரவில்லை மாறாக பெரிய அளவில் நஷ்டத்தை தான் தந்துள்ளது.

இந்திய பங்குச்சந்தை ஒரு நாள் ஏறினால் 2 நாள் சரிவது என முதலீட்டாளர்களுக்கு பெரிய இழப்புகளை தான் தந்திருக்கின்றன. அதே வேளையில் தங்கம் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து இந்த ஆண்டு தொடக்கம் வரை சிறந்த அளவில் முதலீட்டாளர்களுக்கு லாபம் தந்துள்ளது. அடுத்து சில மாதங்கள் தங்கம் திருத்தத்தில் இருந்தாலும் அதன் பிறகு மீண்டும் வளர்ச்சி பாதையை நோக்கி திரும்பும் என கணிப்புகள் வெளியான வண்ணம் இருக்கின்றன.

தங்கம் Vs பங்குச்சந்தை : 16 ஆண்டுகளில் எந்த முதலீடு அதிக லாபம் தந்தது? சர்ப்பிரைஸ் தரும் முடிவுகள்!!

இந்த சூழலில் தான் கடந்த 16 ஆண்டுகளில் தங்கத்தில் செய்த முதலீடு அதிக லாபம் தந்ததா அல்லது ஈக்விட்டி எனப்படும் பங்கு சந்தையில் செய்த முதலீடு அதிக லாபம் தந்ததா என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். ஜெய் பதீஜா என்பவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் 16 ஆண்டுகளில் தங்கமும் , ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு திட்டமும் எவ்வளவு லாபம் தந்து இருக்கிறது என்பதை ஒப்பிட்டு இருக்கிறார்.

தங்கம் மற்றும் அதற்கு போட்டியாக ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாக hdfc flxi cap திட்டத்தை அவர் ஒப்பிட்டுள்ளார். 2010 ஆம் ஆண்டிலிருந்து 2026 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது என்ற அடிப்படையில் அவர் கணக்கீடு செய்திருக்கிறார். அப்படி பார்க்கும்போது 2010 ஆம் ஆண்டு ஏப்ரலில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் ரூபாய் தங்கத்திலும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

அதில் 2025 ஆம் ஆண்டு வரை ஈக்விட்டி தான் அதிக லாபம் தரும் முதலீடாக இருந்து வந்திருக்கிறது. 2025 ஆம் ஆண்டு இறுதியில் இருந்து தான் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை விட அதிக லாபம் தரக்கூடிய ஒரு முதலீடாக தங்கம் மாறி இருக்கிறது. இந்த 16 ஆண்டுகளில் ஒரு நபர் தங்கம் மற்றும் ஈக்விட்டியில் செய்த மொத்த முதலீடு 85 லட்சம் ரூபாய். இதில் தங்கம் அவருக்கு திரும்ப தந்தது 3.84 கோடி ரூபாய் அதே வேளையில் ஈக்விட்டி முதலீடு 3.46 கோடி ரூபாய்.

ஈக்விட்டியை விட தங்கம் தான் அதிக லாபம் தந்த ஒரு முதலீடாக மாறி இருக்கிறது கிட்டத்தட்ட 38 லட்சம் ரூபாய் வித்தியாசம் இருக்கிறது என அவர் தெரிவித்து இருக்கிறார். அந்த வகையில் தற்போது தங்கம் அதன் காலத்தில் இருக்கிறது என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். குறிப்பாக தங்கம் இவ்வளவு லாபம் தருவதற்கு காரணம் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து இந்த ஆண்டு வரை ஏற்பட்ட விலை உயர்வு தான் என கூறுகிறார்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+