தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் ஆனால் நகை வாங்கும் அளவுக்கு லட்சக்கணக்கில் பணம் இல்லை என்பவர்களுக்கு தான் கோல்டு ஈடிஎஃப் திட்டங்கள் இருக்கின்றன. இதில் நாம் 130 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். எஸ்ஐபி முறையில் கூட மாதம் கணிசமான தொகைக்கு கோல்டு ஈடிஎஃப் வாங்கி வைக்கலாம். தங்கம் விலை ஏறும் போது இதன் மதிப்பு ஏறும்.
பொதுவாக தங்கத்தை நாம் நகையாக வாங்கும் போது அதற்கு செய்கூலி, ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றை வழங்குகிறோம். இதனால் நகை வாங்கிய உடனே செய்கூலிக்காக நாம் செலுத்தும் தொகை நஷ்டம் தான். இதனால் தான் முதலீடாக தங்கம் வாங்க வேண்டும் என்றால் நகையாக வாங்குவதற்கு பதிலாக கோல்டு ஈடிஎஃப்களாக வாங்கலாம் என கூறுகின்றனர். இவ்வாறு கோல்டு ஈடிஎஃப்-இல் முதலீடு செய்யும் போது சில முக்கிய விஷயங்களை கவனிக்க வேண்டும்.

தற்போது exchange traded fund என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்களால் ஈடிஎஃப்கள் கிடைக்கின்றன. பெரும்பாலான இந்தியர்களின் நம்பகமான அதே வேளையில் செபியின் கீழ் வரும் பாதுகாப்பான தங்க முதலீடுகளாக இவை மாறி இருக்கின்றன. எஸ்பிஐ என பல முன்னணி நிறுவனங்கள் கோல்டு ஈடிஎஃப்களில் முதலீடு செய்யும் வாய்ப்புகளை வழங்குகின்றன. இதில் முதலீடு செய்யும் முன்பு எந்த ஈடிஎஃப்பில் சந்தை மூலதனம் அதிகமாக இருக்கிறது என்பதை ஒப்பிட வேண்டும். இதன் அடிப்படையில் தான் கோல்டு ஈடிஎஃப் திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும்.
மியூச்சுவல் ஃபண்டுகளைப் போலவே ஈடிஎஃப் திட்டங்களிலும் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ உண்டு. நம் முதலீட்டை நிர்வகிக்க குறிப்பிட்ட சதவீதத்தை எக்ஸ்பென்ஸ் ரேஷியோவாக நிறுவனம் எடுத்துக் கொள்ளும். எந்த நிறுவனம் குறைந்த அளவு எக்ஸ்பென்ஸ் ரேஷியோ வைத்திருக்கிறதோ அந்த நிறுவனத்தை தேர்வு செய்து முதலீடு செய்வது சிறந்தது. அந்த வகையில் நம் முதலீட்டின் பெரும் பகுதி அவர்களுக்கு என செல்லாமல் நமக்கான முதலீடாகவே இருக்கும்.
அதிகபட்ச சந்தை மூலதனம் கொண்ட கோல்டு ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்யும் போது நாம் நமக்குத் தேவையான நேரத்தில் உடனடியாக அதனை விற்று திரும்ப பணமாக பெற்றுக்கொள்ள முடியும். அதிக சந்தை மூலதனம் கொண்ட ஒரு நிதி எனும் போது அதனை வாங்குவதற்கு எப்பொழுதுமே சந்தையில் ஆட்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். எனவே நினைத்த நேரத்தில் விற்பனை செய்து பணமாக்கலாம்.
டிராக்கிங் எர்ரர் என கூறுவார்கள், குறைந்த அளவு டிராக்கிங் எரர் கொண்ட ஈடிஎஃப்களில் முதலீடு செய்ய வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். தங்கம் விலை 20% வருமானம் தந்திருக்கிறது, அதுவே நீங்கள் வாங்கிய ஈடிஎஃப்பும் 20% வருமானம் தந்திருக்க வேண்டும். ஆனால் சில ஈடிஎஃப்கள் 16%, 17% அல்லது அதற்கும் கீழ் வருமானம் தந்திருக்கும். இதை தான் டிராக்கிங் எரர் என அழைக்கிறார்கள். எனவே டிராக்கிங் எரர் விகிதம் குறைவாக இருந்தால் நமக்கான லாபம் அதிகமாகும் என அர்த்தம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?



Click it and Unblock the Notifications