படிப்பை முடித்து முதல்முறை வேலைக்கு செல்வோர் தங்கத்தில் எப்படி முதலீடு செய்தால் லாபம் பார்க்கலாம்?

கல்லூரி படிப்பு முடித்து வேலைக்கு செல்லும் நபர்கள் முதல் மாத சம்பளத்தில் இருந்தே முதலீட்டை தொடங்குவது நல்லது. அப்படி செய்தால் சொற்ப தொகையை முதலீடு செய்வதன் மூலமாகவே பெரிய லாபத்தை பெறலாம். ஏனெனில் சிறு வயதிலேயே செய்யும் முதலீடு நம் பணம் பெருக நீண்ட காலத்தை தருவதால் காம்பவுண்டிங் எனும் மேஜிக் நம் பணத்தை வளர செய்யும்.

முதல்முறையாக வேலைக்கு செல்வோர் குறைந்த சம்பளத்தில் பாதுகாப்பாக மாதந்தோறும் தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி என்பதை நாம் விரிவாக பார்க்கலாம். முதல் வேலை என்பதால் சம்பளம் சராசரியாக் 30,000 ரூபாயு என்ற அளவில் தான் இருக்கும். இதில் செலவு போல மீதமுள்ள பணத்தை சிறுக சிறுக தங்கத்தில் முதலீடு செய்ய 3 வாய்ப்புள் உள்ளன. ஒன்று நகை சீட்டு, உங்களுக்கு தங்கம் நகையாக தான் தேவை என்றால் மாதம் தோறும் என 11 மாதங்களுக்கு நகை சீட்டு போட்டு செய்கூலி சேதாரம் இல்லாமல் தங்க நகை வாங்கலாம்.

படிப்பை முடித்து முதல்முறை வேலைக்கு செல்வோர் தங்கத்தில் எப்படி முதலீடு செய்தால் லாபம் பார்க்கலாம்?

அடுத்ததாக கோல்ட் மியூச்சுவல் ஃபண்டுகள் சிறந்த ஆப்ஷனாக உள்ளன. புதிய முதலீட்டாளர்களுக்கு மாதாந்திர முறையில் எஸ்ஐபி வழியில் கோல்ட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது மிகச்சிறந்த வழி. இவை தங்கத்தின் அடிப்படையில் இயங்கும் கோல்ட் இடிஎஃப் ஃபண்டுகளில் முதலீடு செய்கின்றன. மேலும் இதற்கு டிமேட் கணக்கு தேவையில்லை.

Also Read

மாதம் நீங்கள் பணத்தை ஆட்டோ டெபிட் முறையில் போட்டு வைத்தால் தானாகவே அந்த திட்டத்திற்கு சென்றுவிடும். தொழில்முறை நிதி மேலாளர்களால் நிர்வகிக்கப்படுவதால், தைரியமாக முதலீடு செய்யலாம். தங்கத்தின் தூய்மை , பாதுகாப்பு குறித்த கவலை இதில் இல்லை. மேலும் தேவைப்படும்போது இதனை விற்று எளிதாக பணமாக மாற்றி கொள்ளலாம். ஆனால் தீபாவளி வரை சில நிறுவனங்கள் கோல்ட் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளன.

மூன்றாவதாக கோல்ட் இடிஎஃப் திட்டங்கள் உள்ளன. ஏற்கனவே டிமேட் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்வதில் அனுபவம் உள்ளவர்கள் கோல்டு இடிஎஃப்களில் முதலீடு செய்யலாம். தங்கம் விலை ஏறும் போது உங்களின் முதலீடும் ஏறும். பங்குச்சந்தை செயல்படும் நேரன்களில் உங்களின் இடிஎஃப் யூனிட்களை விற்று பணமாக்கி கொள்ளலாம்.

Recommended For You

இதிலும் மாதம் ஒரு குறிப்பிட்ட பணத்தை போட்டு வைக்கலாம். தங்கம் தற்போதைக்கு விலை சரிவில் இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் விலை உயர தான் போகிறது என கூறும் நிபுணர்கள் மக்கள் அச்சப்படாமல் இதில் முதலீடு செய்யலாம் என கூறுகின்றனர்.

தங்க நகை சீட்டு முற்றிலும் நம்பிக்கை அடிப்படையில் தான் செய்யப்படுகிறது, இதற்கு செபி பாதுகாப்பு இல்லை. ஆனால் கோல்ட் மியூச்சுவல் ஃபண்டுகள், இடிஎஃப்களுக்கு செபி சட்ட பாதுகாப்பு உண்டு என்பதால் நம்பி முதலீடு செய்யலாம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+