தங்கம் வாங்கும் போதே லாபம் பார்க்கணுமா? இந்த இரண்டு ஆப்ஷன் தான் பெஸ்ட்!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ஒரு லட்சத்தை எட்டிவிட்டது. இன்றைய தேதி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 12,060 ரூபாய்க்கும், ஒரு சவரன் 96,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று நீங்கள் ஒரு சவரன் செயின் வாங்க வேண்டும் என்றால் கூட தங்கத்திற்கான விலை செய்கூலி, சேதாரம் , ஜிஎஸ்டி ஆகிய அனைத்தையும் சேர்த்து சராசரியாக 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் வரை நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும். சாமானிய மக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து ஒரு சவரன் வாங்க வேண்டும் என்பது எளிதான விஷயம் கிடையாது.

தங்கம் வாங்கும் போதே லாபம் பார்க்கணுமா? இந்த இரண்டு ஆப்ஷன் தான் பெஸ்ட்!!

எனவே கொடுக்க கூடிய முழு பணத்திற்கும் தங்கம் வாங்க வேண்டும், தங்கம் வாங்கும் போதே லாபம் பார்க்க வேண்டும் என எண்ணுபவர்களுக்கு இரண்டு ஆப்ஷன்கள்தான் சிறந்தவையாக இருக்கும். முதலில் தங்கத்தை நீங்கள் எதற்காக வாங்குகிறீர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். தங்கம் விலை ஏறி வருகிறது ஒரு முதலீடு அடிப்படையில் நான் தங்கத்தை வாங்குகிறேன் என்பவர்கள் தங்க நகைகள் தங்க நாணயங்களுக்கு மாற்றாக கோல்டு ஈடிஎஃப் திட்டங்களை தைரியமாக தேர்ந்தெடுக்கலாம் .

நீங்கள் செலுத்தக்கூடிய பணத்தில் 99 சதவீதம் உங்களுக்கு முதலீடாகவே செல்கிறது . ஒரு லட்சம் ரூபாய்க்கு கோல்டு ஈடிஎஃப்களில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் அந்த ஒரு லட்சம் ரூபாயில் 99 சதவீத தொகையும் உங்கள் பெயரில் முதலீடாகவே இருக்கும். இதுவே நீங்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு தங்க நகையாக வாங்குகிறீர்கள் என்றால் அதில் கிட்டத்தட்ட 20,000 வரை நீங்கள் ஜிஎஸ்டியாகவும் செய்கூலி சேதாரமாகவுமே செலுத்தி இருப்பீர்கள்.

தங்கம் வாங்கும் போதே லாபம் பார்க்கணுமா? இந்த இரண்டு ஆப்ஷன் தான் பெஸ்ட்!!

எனவேதான் தங்கத்தை முதலீடாக மட்டுமே நான் பார்க்கிறேன் என்பவர்கள் கோல்ட் ஈடிஎஃப் திட்டங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம் என முதலீட்டு துறை நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றனர். இது செபியால் ஒழுங்குபடுத்தப்பட்டவை என்பதால் எந்தவித அச்சமும் உங்களுக்கு தேவையில்லை . அதே போல கோல்ட் ஈடிஎஃப் திட்டங்களில் லம்ப்சம் முறையிலும் முதலீடு செய்யலாம் அல்லது எஸ்ஐபி முறையில் மாதம் தோறும் ஒரு தொகையாகவும் முதலீடு செய்யலாம்.

இந்தியாவை சேர்ந்த பல்வேறு முன்னணி நிறுவனங்களும் கோல்டு ஈடிஎஃப்களை வழங்குகின்றன. சராசரியாக 100 ரூபாயிலிருந்து ஒரு யூனிட் வாங்கலாம் . டிமேட் கணக்கு கொண்டு எளிமையாக குரோ, ஸெரோதா உள்ளிட்ட செயலிகள் வாயிலாகவே திட்டங்களில் ஈடிஎஃப்களில் முதலீடு செய்துவிட முடியும். தினமும் அவற்றின் விலை நிலவரம் கண்காணிக்கலாம் பங்குச்சந்தை நேரத்தில் தேவையானபோது அவற்றை விற்று பணமாகவும் நாம் மாற்றிக் கொள்ளலாம் .

இந்த வகையில் நாம் செலுத்தக்கூடிய பணம் பெரும்பாலும் முதலீடாகவே செல்லும், செய்கூலி சேதாரம் , நகை சேமித்து வைக்க வேண்டும் ,பாதுகாக்க வேண்டும் , லாக்கரில் வைக்க வேண்டும் அதற்கு ஒரு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தலைவலி எல்லாம் இதில் கிடையாது .

எனக்கு தங்கம் நகையாக தான் வேண்டும் நான் என்னுடைய உறவினருக்கு , குடும்பத்தாருக்கு தங்க நகையை பரிசாக வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன், எனக்கே அணிந்து கொள்ள நகை தேவை என்ற சூழலில் இருப்பவர்கள் தங்க நகை சீட்டுகளுக்கு செல்லலாம். பல்வேறு முன்னணி தங்க நகை விற்பனை நிறுவனங்களும் தங்க நகை சீட்டுகளை வழங்குகின்றன . இது எந்த ஒரு ஒழுங்குமுறை அமைப்பாலும் ஒழுங்குபடுத்தப்பட்ட திட்டம் கிடையாது என்பதால் தங்க நகை சீட்டு போடக்கூடிய மக்கள் நம்பிக்கை அடிப்படையில் மட்டும் தான் நகை சீட்டு போட வேண்டும்.

தங்கம் வாங்கும் போதே லாபம் பார்க்கணுமா? இந்த இரண்டு ஆப்ஷன் தான் பெஸ்ட்!!

நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய கடை பிரசித்தி பெற்ற, இந்த துறையில் நீண்ட காலமாக இருக்கக்கூடிய கடையாக பார்த்து தேர்ந்தெடுப்பது நல்லது . தங்க நகை சீட்டாக போடும் போது ஒவ்வொரு மாதமும் நீங்கள் பணத்தை போடக்கூடிய அந்த தேதிக்கான தங்கத்தின் விலைக்கு ஏற்ப உங்கள் பெயரில் தங்கம் யூனிட்டாக வரவு வைக்கப்படும். 11 மாத முடிவில் உங்களுடைய கணக்கில் எவ்வளவு கிராம் தங்கம் சேர்ந்திருக்கிறதோ அதற்கு நீங்கள் நகை வாங்கிக் கொள்ளலாம் . பெரும்பாலான நகைச் சீட்டுத் திட்டங்களில் உங்களுக்கு செய்கூலி, சேதாரம் கிடையாது ஜிஎஸ்டி மட்டும் செலுத்தினால் போதும் .

அந்த வகையில் நீங்கள் நகை சீட்டு போட்டு இருந்தால் ஒரு சவரன் தங்கம் வாங்கும்போது கிட்டத்தட்ட இன்றைய தேதிக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை உங்களுக்கு சேமிப்பு கிடைக்கும் . தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரக்கூடிய சூழலில் நகையாக தான் வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பவர்கள் தங்க நகை சீட்டு போட்டால் மட்டுமே லாபம் கிடைக்கும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+