நம்ம ஊர்ல விசேஷம்னாலே தங்கம் தான். கல்யாணத்துல வர்ற கிஃப்ட், அம்மா வழி வர்ற சீர், தாத்தா பாட்டி கொடுத்த பரம்பரை நகை. இதுக்கெல்லாம் வரி உண்டா இல்லையான்னு பலருக்கும் குழப்பம் இருக்கும். அதோட அதை தவறான நேரத்துல விற்க போய் உங்க லாபத்துல 18% வரிக்கு போவதை விட, அரசாங்கம் கொடுத்திருக்கிற வாரிசுரிமை சலுகை மற்றும் திருமண பரிசு விலக்கு பற்றி தெரிஞ்சிக்கிட்டா உங்க தங்கத்தை நீங்க முழுமையாக காப்பாத்தலாம். எப்போ, எவ்வளவு வரி கட்டணும், இதிலிருந்து எப்படி தப்பிக்கலாம். இதோ முழுமையான அலசல்..

தங்கம் மற்றும் வெள்ளி வாரிசுரிமை வரி
இந்தியாவில் வாரிசுரிமை வரி கிடையாது. உங்கள் பெற்றோர் அல்லது உறவினர்களிடமிருந்து உயில் மூலமாகவோ அல்லது வாரிசுரிமை சட்டப்படியோ தங்கம் மற்றும் வெள்ளியை பெறும்போது, அதற்கு வரி செலுத்த தேவையில்லை. எனினும் அந்த நகைகளை விற்கும் போது வரி விதிக்கப்படும். இதற்கு நீண்ட கால மூலதன ஆதாய வரியாக 12.5% அல்லது உங்கள் வரி வரம்பு படி STCG வரி வசூலிக்கப்படும். இதற்கான முதலீட்டு காலம் என்பது முந்தைய உரிமையாளர் (எ.கா: உங்கள் தந்தை) அந்த தங்கத்தை வாங்கிய தேதியிலிருந்தே கணக்கிடப்படும்.
தங்கம்/வெள்ளி பரிசு பெறும்போது வரி உண்டா?
தங்கம்/வெள்ளி பரிசுகளை பொறுத்தவரை, யாரிடமிருந்து பெறுகிறீர்கள் என்பது முக்கியம். திருமணத்திலோ அல்லது மற்ற நேரங்களிலோ உங்கள் நெருங்கிய உறவினர்களிடம் இருந்து (பெற்றோர், உடன்பிறப்புகள், துணையின் பெற்றோர்) எவ்வளவு மதிப்புள்ள தங்கம் பெற்றாலும் அதற்கு வரி கிடையாது. ஆனால் நண்பர்கள் அல்லது மற்றவர்களிடமிருந்து ஓராண்டில் நீங்கள் பெறும் மொத்த பரிசுகளின் மதிப்பு 50,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், அந்த முழு மதிப்பிற்கும் உங்கள் வருமான வரி வரம்பு (Slab Rate) படி வரி செலுத்த வேண்டும். இருப்பினும் திருமணத்தின் போது யாரிடமிருந்து (உறவினர் அல்லது நண்பர்) பரிசு பெற்றாலும், அதற்கு முழுமையான வரி விலக்கு உண்டு.
வரி செலுத்தாமல் தப்பிக்க என்ன செய்யலாம்?
தங்கம் அல்லது வெள்ளியை விற்பனை செய்து வரும் பணத்தைக் கொண்டு ஒரு புதிய வீட்டை வாங்கினால், நீங்கள் வரியிலிருந்து முழு விலக்கு பெறலாம். இருப்பினும் இதற்கு சில நிபந்தனைகள் உண்டு. தங்கம் விற்பனை செய்து வரும் முழுத் தொகையையும் புதிய வீட்டிற்காக செலவிட வேண்டும். லாபத்தை மட்டும் முதலீடு செய்தால், வரி சலுகை விகிதாச்சார அடிப்படையில் மட்டுமே கிடைக்கும். மேலும் தங்கத்தை விற்பனை செய்வதற்கு 1 ஆண்டுக்கு முன்பே வீடு வாங்கியிருக்க வேண்டும். அல்லது விற்பனை தேதியிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் புதிய வீடு வாங்க வேண்டும். வீடு கட்டுவதாக இருந்தால், விற்பனை தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்க வேண்டும்.
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் நீங்கள் விற்பனை செய்யும் தேதியில், உங்களிடம் ஏற்கனவே ஒன்றுக்கு மேற்பட்ட வீடு இருக்க கூடாது. மேலும் இந்தப் பணத்தில் வாங்கிய புதிய வீட்டை 3 ஆண்டுகளுக்குள் விற்கவும் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த சலுகையை அதிகபட்சம் 10 கோடி ரூபாய் வரையிலான முதலீட்டிற்கு மட்டுமே பெற முடியும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு



Click it and Unblock the Notifications