இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதுமே தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தில் இருக்கிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 10,000 ரூபாயையும், சவரனுக்கு 80,000 ரூபாயையும் கடந்து வரலாறு காணாத உச்சத்தில் இருக்கிறது.
தங்கத்தின் விலை உயர்ந்தாலும் இந்தியர்களுக்கும் தங்கத்திற்கும் இடையேயான உறவு மிகவும் நெருக்கமானது . வீட்டில் ஒரு குழந்தை பிறப்பது தொடங்கி அந்த குழந்தையின் அனைத்து விசேஷங்களிலும் தங்க நகையின் பங்கு மிக முக்கியமாக இருக்கிறது. தற்போது பண்டிகை காலம் தொடங்கி விட்டது, திருமண சீசன் தொடங்கி விட்டது. எனவே தங்கம் விலை உயர்ந்தாலும் அதனை வாங்க வேண்டிய சூழலில் இருப்பவர்கள் வாங்க தான் போகிறார்கள்.

தங்கம் விலை உயர்ந்திருக்கும் இந்த சூழலில் நகை வாங்க செல்பவர்கள் சில முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் இல்லை என்றால் போலி நகை வாங்க ஏமாந்து போகும் வாய்ப்பு உள்ளது.
முதலில் கவனிக்க வேண்டியது: நீங்கள் பெரிய நகைக் கடைக்கு சென்றாலும் சரி சிறிய நகைக்கடைக்கு சென்றாலும் சரி முதலில் நீங்கள் கவனிக்க வேண்டியது நகையில் ஹால்மார்க் இருக்கிறதா என்பதை தான். சில நகை கடைகளில் 18 கேரட் தங்கத்தை 22 கேரட் தங்கம் என போலியாக விற்பனை செய்வதாக புகார்கள் எழுகின்றன. எனவே நகையில் பிஐஎஸ் ஹால்மார்க் குறியீடு இருக்கிறா என முதலில் பாருங்கள், கடைக்காரரிடம் கேளுங்கள்.
நீங்கள் வாங்கிய நகை தங்கம் தான் அதன் தூய்மை தன்மை இது தான் என்பதற்கு அரசு வழங்கும் சான்றிதழ் தான் இந்த பிஐஎஸ் ஹால்மார்க். 22 கேரட் ஆபரண தங்கத்தில் 22K916 என்ற ஹால்மார்க் இருக்கும். 22 கேரட் என்றால் 91.6% அதில் இருப்பது தங்கம் என்பது அர்த்தம். ஒருவேளை இப்படி ஒரு ஹால்மார்க் அதில் இல்லை அல்லது அது தெளிவாக இல்லை என்றால் அது தரம் குறைவான தங்கம் என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம்.

லூம் எண்: நீங்கள் வாங்க போகும் நகையில் ஹால்மார்க் முத்திரைக்கு அடுத்ததாக ஒரு எண் இடம்பெற்றிருக்கும். இதனை Loom number என அழைக்கின்றனர். இதனை லைசென்ஸ் நம்பர் என்றும் அழைக்கலாம். அதாவது நீங்கள் தங்க நகை வாங்கும் அந்த கடை பிஐஎஸ் அமைப்பிடம் பதிவு பெற்றது என்பதற்கான ஒரு அடையாள எண் தான் அது. அதே போல huid என்ற குறியீடு இருக்கும், அது அந்த நகையின் அனைத்து தகவல்களை கொண்ட தனித்துவ எண். இது அந்த நகை ஹால்மார்க் சோதனைக்கு உட்பட்டு அதன் விவரங்கள் பதிவு செய்யப்பட்டதை காட்டுகிறது.
ரசீதில் கவனம்: சில சிறு நகைக்கடைகளில் தங்க நகைகளுக்கு ரசீது கொடுக்க மாட்டார்கள் அதற்காக சில நூறு ரூபாய் விலை குறைவாக தள்ளுபடி தருவார்கள். அந்த சில நூறு ரூபாய்க்காக ஏமாந்து விடாதீர்கள். இது அவர்கள் வரி ஏய்ப்பு செய்ய உதவும், அதே வேளையில் போலி ஹால்மார்க் கொண்ட நகையை விற்கவும் வித்திடும். அந்த நகையில் ஏதேனும் குறைபாடு இருந்தால் ரசீது இல்லை எனில் திரும்ப அந்த கடைக்கு சென்று கேட்கவும் முடியாது முறையாக புகார் அளிக்கவும் முடியாது. எனவே எப்போது நகை அல்லது நாணயம் வாங்கினாலும் அதில் கேரட் வேல்யூ, எடை, செய்கூலி சேதாரம் விகிதம், வரி உள்ளிட்ட அனைத்தும் இடம்பெற்ற விரிவான ரசீது வாங்குவதை உறுதி செய்யுங்கள்.
தங்க சோதனை இயந்திரம்: பெரும்பாலான கடைகளில் தங்கத்தின் தரத்தை பரிசோதனை செய்யும் இயந்திரத்தை வைத்திருப்பார்கள். நீங்கள் வாங்கும் நகையை அந்த இயந்திரத்தில் வைத்து உங்கள் கண் முன்பே பரிசோதனை செய்ய சொல்வது அவசியம்.
கணக்கீடு: நகை வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இது, நகை கடைக்காரர்கள் நகைக்கான செய்கூலி சேதாரத்தை உங்களிடம் ஒரு சதவீதமாக சொல்லிவிட்டு அதனை கணக்கிடும் போது கூடுதலாக கணக்கிட வாய்ப்புள்ளது. எனவே அவர்களிடம் பொறுமையாக நகைக்கான கட்டணத்தை உங்களுக்கு விரிவாக எடுத்துரைக்க சொல்லுங்கள் உங்கள் கண் முன்னே கணக்கிட்டு விவரிக்க சொல்லுங்கள். நகையின் எடை, இன்று தங்கம் விலை, செய்கூலி எவ்வளவு சதவீதம், ஜிஎஸ்டி எவ்வளவு என்பதை கணக்கிட்டு நீங்களும் ஒரு முறை உங்கள் போன் கால்குலேட்டரில் கணக்கிடுங்கள். சில கடைகளில் 500 ரூபாய் குறைத்து கொள்ளுங்கள் என கூறிவிட்டு செய்கூலி சேதாரத்தில் அதிக சதவீதத்தை வைத்து ஏமாற்ற வாய்ப்புள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: தங்கம் விலை இனி குறையுமா? உயருமா?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: மக்களே இத கவனிக்கலனா உங்க தலையில துண்டு!!

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications